கிருத்திகை நட்சத்திரத்தன்று நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே சமயம் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய காரிய தடைகள் அனைத்தும் நீங்கும் கஷ்டங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.
காரிய தடையை நீக்க பரிகாரம்
அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:30 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் என்பது இருக்கிறது. அன்றைய தினத்தில் சதுர்த்தி திதியும் வருகிறது. சூரிய உதயத்தின் பொழுது எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நட்சத்திரத்தை தான் அன்றைய நாளில் நாம் கணக்கெடுக்க வேண்டும் என்பதால் அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரமும் விநாயகப் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தியும் வருகிறது என்பதால் இது இவர்கள் இருவரையும் வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான நாளாக திகழ்கிறது.
இந்த நாளில் நாம் எப்பொழுதும் போல் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதைப்போலவே முருகப்பெருமானையும் வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து இவர்கள் இருவருக்கும் உரிய மந்திரத்தை கூறி ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். பணவரவு என்பது அதிகரிக்கும். மகிழ்ச்சியான, நிம்மதியான, ஒற்றுமையான வாழ்க்கையை வாழ முடியும். அந்த பரிகாரத்தை பார்ப்போம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கிழியாத நல்ல வெற்றிலை வேண்டும். மூன்று அருகம்புல் வேண்டும். ஒரு மொட்டு உடையாத நல்ல கிராம்பு வேண்டும். இதோடு சந்தன வில்லை வேண்டும். இந்த பரிகாரத்தை மாலை நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையை சுத்தமாக கழுவி ஈரமில்லாமல் துடைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலையின் மீது அருகம்புல், கிராம்பு, சந்தனம் இவற்றை வைக்க வேண்டும். இந்த வெற்றிலையை நாம் ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
பிறகு விநாயகப் பெருமானுக்குரிய மந்திரத்தையும் முருகப்பெருமானுக்குரிய மந்திரத்தையும் 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு இந்த வெற்றிலையை அதற்குள் இருக்கும் பொருட்கள் எதுவும் கீழே விழுகாத அளவிற்கு நன்றாக சுருட்டி வெள்ளை அல்லது மஞ்சள் நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த வெற்றிலையை நம்முடைய இடது கையில் வைத்து வலது கையால் மூடிக்கொண்டு நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்றும் நமக்கு நன்மைகள் உண்டாக வேண்டும் என்றும் விநாயகர் மற்றும் முருகப்பெருமானிடம் மனுதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வேண்டி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். பிறகு இந்த வெற்றிலையை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அடுத்த சங்கடஹர சதுர்த்தி நாள் வரும்வரை இது அப்படியே இருக்கட்டும். சங்கடஹர சதுர்த்தி நாள் வரும் பொழுது இந்த பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். தூபம் காட்டும் வழக்கம் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இவை அனைத்தையும் பொடி செய்து அந்த தூபத்தில் போட்டு வீடு முழுவதும் காட்டி விடலாம்.
மந்திரம்
ஓம் சுமுகாயா நமஹ
ஓம் சுப்ரமண்யாய நமஹ
இதையும் படிக்கலாமே:கேட்டதை கொடுக்கும் சுப்பிரமணியர் வழிபாடு
முருகனுக்கும் விநாயகருக்கும் உகந்த இந்த தினத்தில் இவர்கள் இருவரின் மந்திரத்தையும் கூறி இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்ற எதுவுமே ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.