இன்றைய தினம் டிசம்பர் மாதத்தின் முதல் நாள். கார்த்திகை மாதத்தின் அமாவாசை திதியும் இன்று காலை 12:00 மணி வரை இருந்தது. ஆகவே இந்த நாளில் அமாவாசைக்கு உண்டான சக்தியும் நிறைந்திருக்கிறது. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை என்பது இன்றைக்கான இன்னொரு சிறப்பு.
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை அனுமனுக்கு சிறப்பான நாள், நரசிம்மருக்கு உகந்த நாளாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் நம்முடைய பண கஷ்டங்கள் தீர, மன செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பணம் தரும் ஏலக்காய் பரிகாரம்
நம்முடைய வீட்டில் இருக்கும் எளிமையான இந்த ஏலக்காயை வைத்து தான் பரிகாரம். இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. இந்த நேரத்தை தவறவிட்டவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பு எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, உள்ளங்கைகளில் ஒரு ஏலக்காயை வைத்து, உங்களுக்கு என்ன பண கஷ்டம் இருக்கிறதோ, அந்த கஷ்டம் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். ‘என்னை நோக்கி பணம் வர வேண்டும்! என்னை நோக்கி பணம் வர வேண்டும்!’ என்று 108 முறை சொல்லுங்கள் .
நீங்கள் சொன்ன மந்திரத்தை அந்த ஏலக்காய் தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளும். இந்த ஏலக்காயை கொண்டு போய் உங்கள் வீட்டில் அரிசி மூட்டையில் புதைத்து வைத்து விடுங்கள். யாருக்கும் இந்த ஏலக்காய் பரிகாரம் செய்தது தெரியக்கூடாது. வீட்டில் இருக்கும் நபர்களுக்கு தெரியலாம். ஆனால் வெளி ஆட்களுக்கு தெரிய வேண்டாம்.
48 நாட்களுக்குள் நீங்கள் எதை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தீர்களோ, அந்த பணப் பிரச்சனை சரியாகும். நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக்கூடிய பரிகாரம் இது. 48 நாள் கழித்து அந்த ஏலக்காயை எடுத்து கால் படாத செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடவும். முயற்சி செய்துதான் பாருங்களேன். ஒரே ஒரு ஏலக்காய் தானே. எதுவுமே நஷ்டம் இல்லை.
இதையும் படிக்கலாமே: சுக்கிர வசியம் ஏற்பட பரிகாரம்
கொஞ்சம் நம்பிக்கை, ஒரு ஏலக்காய் சேர்ந்து உங்கள் மொத்த கடனையும், பண பிரச்சனையையும் சரி செய்தால் வருமானத்தை கொடுத்தால், கசக்கவா போகிறது. நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.