- Advertisement -
Homeஜோதிடம்2025 கஜகேசரி யோக பலன்கள்

2025 கஜகேசரி யோக பலன்கள்

- Advertisement -

2025 ஆம் ஆண்டு துவங்கிய நிலையில் ஆண்டியையும் அரசனாக்க கூடிய யோகம் ஒரு சிலருக்கு வரப் போகிறது. ஜோதிடத்தில் ஒரு சில கிரகங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும் பொழுது, மிகப்பெரிய யோக பலன்களை அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில் வியாழனும், சந்திரனும் இணையும் பொழுது கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோக பலன்கள் 2025 ஆம் வருடம் துவக்கத்திலேயே யார் யாருக்கு கிடைக்க இருக்கிறது? என்னும் ஜோதிடம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து காண இருக்கிறோம்.

இவ்வருடம் புத்தம் புதிய ஆண்டில் குரு பெயர்ச்சி நடக்கும் பொழுது கஜகேசரி யோகமும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. குரு பகவானும், சந்திரனும் மிதுன ராசியில் இணையும் பொழுது கீழ்வரும் நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுப்பார். ஜாக்பாட் அடித்தால் குப்பை மேட்டில் இருப்பவரும், திடீரென கோபுர உயரத்தில் ஏறி அமர்வார்கள். கஜம் என்றால் யானையையும், கேசரி என்றால் சிங்கத்தையும் குறிக்கும் சொல்லாகும். பலம் பொருந்திய பல யானைகள் அடங்கிய வனாந்தரத்தில், சிங்கம் தனியாக ராஜா போல செல்வாக்குடன் இருப்பது போல இருக்க வைப்பது தான் இந்த கஜகேசரி யோகம் தரக்கூடிய பலனாகும். உங்களை சுற்றி எவ்வளவு பேர் இருந்தாலும் நீங்கள் தான் ராஜாவாக இருப்பீர்கள்.

- Advertisement -

மீனம்
2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியின் பொழுது மீன ராசியினருக்கு கஜகேசரி யோகம் மூலம் அதிர்ஷ்ட பலன்களும் வரக் கூடும். இது நாள் வரை நீங்கள் பட்டுக் கொண்டிருந்த பெரிய வகையிலான துன்பங்கள் உங்களை விட்டு விலகும். இவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைத்தவர்களுக்கு இனி புதிய வாழ்க்கை துவங்கும்.

தனுசு
தனுசு ராசிக்கு கஜகேசரி யோகம் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகிறது. ஜாக்பாட் அடித்தது போல திடீர் திடீரென உங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும். இந்த யோகம் எங்கு? எப்பொழுது? உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, ஆனால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய பொன்னான வாய்ப்பை கொடுக்க இருக்கிறது.

- Advertisement -

கன்னி
கன்னி ராசியில் இருப்பவர்கள் கஜகேசரி யோகத்தால் பல உயர் பதவிகளையும் அடையக்கூடிய வாய்ப்புகளை பெற இருக்கிறீர்கள். தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, உத்தியோக உயர்வு போன்ற விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி சிக்ஸர் அடிப்பீர்கள். எந்த ஒரு வாய்ப்புகளையும் தட்டி கழிக்காதீர்கள். அதிர்ஷ்டம் எப்பொழுது? யார் மூலமாக வரும் என்பது தெரியாது, எனவே கழுகு போல காத்திருங்கள்.

இதையும் படிக்கலாமே:
பணத்தை ஈர்க்கும் 1 ரூபாய் பரிகாரம் 2025

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் ராசியிலேயே குருவும், சந்திரனும் இணைவதால் கஜகேசரி யோக பலன்களை அதிகம் பெற இருக்கிறீர்கள். உங்கள் ராசிக்கு வந்தால் கூரையை பிச்சிக் கொண்டு தான் கொடுக்கும் என்பது போல அதிர்ஷ்டம் தேடி வரும். இதுவரை கஷ்ட நிலையை அனுபவித்து வந்த உங்கள் நிலை மாறும். நம் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமா? என்கிற உங்களது நீண்ட கால ஏக்கம் தனிய போகிறது, எனவே குதூகலமாக இருக்க வேண்டிய நேரம் இது.

சற்று முன்