நம்மில் பலரும் நம்முடைய முகத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு கை கால்களுக்கு தருவதில்லை என்றே கூற வேண்டும். இதற்கு முக்கியமான காரணம் யார் ஒருவர் நம்மை பார்த்தாலும் முதலில் நம்முடைய முகத்தை தான் பார்ப்பார்கள் கை கால்களை பார்க்க மாட்டார்கள் என்பதுதான். ஆனால் கை கால்களையும் நாம் கவனிக்க வேண்டும். முகத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை நாம் செய்வதைப் போலவே நம்முடைய கை, கால்களிலும் எந்தவித சுருக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான இளமையை அனுபவிக்க முடியும். கை கால் சுருக்கத்தை தள்ளிப் போடுவதற்கு உதவக்கூடிய ஒரு எண்ணையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
கை கால்களில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கும் எண்ணெய்
தோளில் சுருக்கம் ஏற்படுவது என்பது நம்முடைய முதுமையை காட்டக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. என்னதான் எவ்வளவு க்ரீம்களை போட்டாலும் எவ்வளவு ஃபேஸ் பேக்களை போட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பான முறையில் சுருக்கம் என்பது வரத்தான் செய்யும். கை கால்களிலும் அப்படித்தான். சுருக்கம் வராமல் பார்த்துக் கொள்ள முடியாது. ஆனால் வருவதை நம்மால் தள்ளிப் போட முடியும். அப்படி சுருக்கம் ஏற்படுவதை தள்ளி போட வேண்டும் என்று நினைத்தாலோ கை கால்கள் மிருதுவாக பட்டுப்போன்று இருக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாலோ இந்த ஒரு எண்ணையை தயார் செய்து கொள்ளலாம்.
இந்த எண்ணையை தயார் செய்வதற்கு நமக்கு கால் லிட்டர் நல்லெண்ணெய் வேண்டும். இந்த நல்லெண்ணெயுடன் மூன்று ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணையை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஒரு சிட்டிகை கசகசா, மூன்று பாதாம், இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெள்ளரி விதை இவை மூன்றையும் சேர்த்து நைசாக பொடியாக அரித்துக்கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவுதான் மேஜிக் எண்ணெய் தயாராகிவிட்டது.
தினமும் குளிக்க செல்வதற்கு முன்பாக இந்த எண்ணெயை பயன்படுத்தி நம்முடைய கை கால்களில் நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். 15லிருந்து அரை மணி நேரம் கழித்து நாம் எப்பொழுதும் குளிப்பது போல் குளித்துக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய சுருக்கத்தை நம்மால் தள்ளிப் போட முடியும். மேலும் கை, கால்களில் இருக்கக்கூடிய வறச்சியும் நீங்கும், மிருதுவாகவும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே:முகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தை பெற
முகத்தை அழகாக்குவதற்கு முடியை அழகாக்குவதற்கும் பலவிதமான அழகு குறிப்புகள் இருந்தாலும் நம்முடைய உடல் பாகங்களில் ஒன்றாக திகழக்கூடிய கை கால்களையும் நாம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொண்டோம் என்றால்தான் நாம் என்றும் இளமையுடன் அழகாக திகழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்