வாஸ்து ரீதியாக சில விஷயங்களை நாம் பின்பற்றும் பொழுது, நேர்மறையான ஆற்றல்கள் ஊடுருவ ஆரம்பிக்கும். வாஸ்து வீட்டிற்க்கான நுண்ணறிவுகளை வழங்குகிறது. வாஸ்து என்பது வேறொன்றும் இல்லை, நம் வீட்டின் அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல்களை பிரதிபலிக்கும் ஒரு அற்புத பரிகாரம் என்றே சொல்லலாம். வாஸ்து ரீதியாக நீங்கள் வீட்டிற்கு வரும் பொழுது நிம்மதியுடன் இருக்க, இந்த 5 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அது என்னென்ன? என்னும் வாஸ்து சார்ந்த தகவல்களை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.
வீட்டிற்கு வந்தாலே போதும் உடனே ஏதாவது ஒரு சண்டை, வம்பு வழக்குகள் என்று சதா பிரச்சனைகளோடு இருப்பவர்கள், ஏண்டா.. வீட்டிற்கு வருகிறோம் என்று நினைப்பதுண்டு! இதற்கு வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் தான் காரணம் என்கிறது வாஸ்து. நாம் எவ்வளவு விட்டுக் கொடுத்து இணக்கமாக சென்றாலும், சில விஷயங்கள் சரியாக இல்லை என்றால் உங்கள் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது.
முதலாவதாக வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். தேவையற்ற குப்பைகளை வீட்டில் அடுக்கி வைத்திருந்தால், நெகட்டிவ் வைப்ரேஷன்கள் அதிகரிக்கும், இதனால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. அவ்வப்பொழுது வேண்டாம் என்று நினைக்கக்கூடிய பொருட்களை தூக்கி எரிய யோசிக்காதீர்கள். சில வருடங்கள் கழித்து அது உங்களுக்கு பயன்படாமல் வீணாகிவிடும். நிச்சயம் பயன்படும் என்று தெரிந்த பொருட்களை மட்டும் பாதுகாப்பாக எடுத்து வையுங்கள். மற்றவற்றை தூக்கி எரித்து விடுங்கள்.
இரண்டாவதாக வாஸ்து ரீதியாக வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வர வேண்டும். சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வராதபடி நீங்கள் கட்டியிருந்தால், கண்டிப்பாக உங்கள் வீட்டில் நிம்மதி இருக்காது. கணவன் மனைவிக்குள் சதா சண்டை, சச்சரவுகளுடன் இருப்பீர்கள். சூரிய ஒளி படும் இடத்தில் கண்ணாடிகள் அல்லது கண்ணாடி ஜன்னல்கள் இருக்க வேண்டும். இது உங்கள் மனநிலையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். பகல் நேரத்தில் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து சூரிய ஒளி வீட்டிற்குள் வருமாறு மாற்றி அமையுங்கள், நிச்சயம் வீட்டிற்கு நிம்மதி கிடைக்கும்.
வீட்டிற்கு உள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும் பசுமையான சின்ன சின்ன செடி, கொடிகளை வளர்க்கலாம். இதனால் காற்றை சுத்தப்படுத்தி, நம் மனதையும் அமைதியாக்கும். பசுமை என்பது மங்களகரத்தை குறிப்பது ஆகும் எனவே பசுமையாக இருப்பது வீட்டிற்கு மங்களகரம் தரக்கூடியது. மகாலட்சுமியின் வரவை அளிக்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும் எனவே வீட்டில் மரம், செடி, கொடிகள், மணம் மிகுந்த பூக்களை கொண்ட செடிகளை வளர்க்க கற்றுக் கொள்ளுங்கள். பசுமையான செடிகள், உங்களின் உயிர் சக்தியை ஊக்குவிக்கும், இதனால் குடும்பத்தில் நிம்மதி உருவாகும்.
இதையும் படிக்கலாமே:
வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர பரிகாரம்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று அனைத்தும் சம்பந்தப்பட்டதாக நம் வீடு அமைந்திருக்க வேண்டும். தண்ணீர் பானைகள், மீன் தொட்டிகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை உருவாக்கலாம். வர்ண மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது, ஒளிரும் மின்விளக்குகளை பொருத்துவது போன்றவையும் மன அமைதியை ஏற்படுத்தும். மெல்லிய ஓசைகளை எழுப்பக்கூடிய அமைப்புகள், பூஜை அறையில் மந்திர ஒலிகள் போன்றவற்றையும் அமைத்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். கடைசியாக வீட்டில் ஒரு சிறு இடத்தில் நீங்கள் யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு உரிய ஏற்பாடுகளை தயார் செய்யுங்கள். அந்த இடத்தில் ஆன்மீக சின்னங்கள், உத்வேகம் தரக்கூடிய படங்கள் போன்றவற்றை அமைத்து வைத்திருந்தால், நிம்மதிக்கு வாஸ்து கேரண்டி தரும்.