- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகெட்ட பழக்கத்திலிருந்து வெளிவர ஸ்விட்ச் வோர்ட்

கெட்ட பழக்கத்திலிருந்து வெளிவர ஸ்விட்ச் வோர்ட்

- Advertisement -

ஒரு மனிதன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும், தேவையற்ற கெட்ட பழக்கங்களில் அவன் சிக்கும்போது, தேவையற்ற கெட்ட பழக்கங்களுக்கு அவன் அடிமையாகும் போது, அவனுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ரொம்ப ரொம்ப நல்ல ஒரு மனிதனோடு, கெட்டவன் பழகினால், நல்ல பழக்கங்கள் கெட்டவனை போய் சென்றடையுதோ இல்லையோ, கெட்டவனிடம் இருக்கும் தீய பழக்கங்கள் அனைத்தும், இந்த நல்ல மனிதருக்கு ஒட்டிக் கொள்ளும்.

இது ஏன் என்று தெரியவில்லை. இதற்குள்ளே சென்று ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் நம்மால் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாது. நல்ல விஷயம் பரவுவதற்கு அதிக நேரம் எடுக்கும். ஆனால் கெட்ட விஷயம் ஒரு நொடி பொழுதில் பரவும். ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்களும் ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விட்டீர்கள். அதிலிருந்து இப்போது கூடிய சீக்கிரம் வெளிவர வேண்டும்.

- Advertisement -

கெட்ட பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் என்னால் அது முடியவில்லை என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த சின்ன பரிகாரம், மிக மிக அற்புதமான பலனை கொடுக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை இரவு எல்லோரும் தூங்கிய பிறகு செய்ய வேண்டும்.

முன்கூட்டியே எருக்கன் இலையை பறித்து, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள். எருக்கன் இலையை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய போகின்றோம். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எருக்கன் இலக்கு மேலே 71566 என்ற நம்பரை எழுத வேண்டும். எழுதிவிட்டு இந்த இலையை உங்கள் கையில் வைத்துக் கொண்டு உங்களிடம் இருக்கும் வேண்டாத அந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு கட்டி கற்பூரத்தை இந்த எருக்கன் இலைக்கு மேலே வைத்து எரித்து விடுங்கள். பச்சை எருக்க இலை முழுமையாக எரிந்து சாம்பலாகாது. இருந்தாலும் அந்த எருக்கன் இலை தீயில் கொஞ்சமாவது பொசுக்கப்பட வேண்டும். சூரிய பகவானின் சக்தி நிறைந்த இந்த எருக்க இலையில், நீங்கள் எதை எழுதி வேண்டுகிறீர்களோ, அது நெருப்போடு நெருப்பாக எரிந்து பஸ்பம் ஆகிவிடும். அந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டு வெளியேறிவிடும். இதுதான் நம்பிக்கை.

அதனால்தான் இந்த பரிகாரத்தை சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை அன்று செய்கின்றோம். மிக மிக எளிமையான பரிகாரம் இது தொடர்ந்து 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்களேன். உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம் எப்படி உங்களை விட்டு விலகி சென்றது என்றே தெரியாது.

- Advertisement -

என்னுடைய கணவருக்கு கெட்ட பழக்கம் இருக்கிறது. அவருக்காக வேண்டி, அந்த குறிப்பிட்ட கெட்ட பழக்கம் நீங்க இந்த பரிகாரத்தை நான் செய்யலாமா என்று மனைவி கேட்டால், நிச்சயம் செய்யலாம். உங்களுடைய கணவர் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார். தீய பழக்கம் என்றால் என்ன பட்டியலிட்டுப் பார்த்தால் நிறைய இருக்கிறது. நம்முடைய வாழ்க்கைக்கு தேவை இல்லாத எந்த பழக்கமாக இருந்தாலும், அந்த பழக்கம் நீங்குவதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: எமகண்ட நேரத்தில் விநாயகர் வழிபாடு

உதாரணத்திற்கு குடிப்பழக்கம் உள்ளவர்கள், சீக்ரெட் பழக்கம் உள்ளவர்கள், அல்லது தகாத பழக்கம் எது இருந்தாலும் அது உங்களுடைய வாழ்க்கைக்கு தேவை இல்லை என்று தெரிந்தால், அதை விளக்கி வைக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்