- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமாசி மகம் விநாயகர் வழிபாடு

மாசி மகம் விநாயகர் வழிபாடு

- Advertisement -

மாசி மகம். புனித நீராடுவதற்கு இந்த நாள் உகந்த நாளாக சொல்லப்பட்டாலும், சிவன் வழிபாடு செய்ய, பெருமாள் வழிபாடு செய்ய, முருகர் வழிபாடு செய்ய, அம்பாள் வழிபாடு செய்ய இந்த நாள் உகந்த நாளாக சொல்லப்பட்டாலும், இந்த நாளில் முன்னோர்கள் சாபம் நீங்குவதற்கு ஒரு எளிமையான விநாயகர் வழிபாடும் சொல்லப்பட்டுள்ளது. எந்த குடும்பத்தில் முன்னோர்கள் சாபம், பித்ரு தோஷம் இருக்கிறதோ, அந்த குடும்பத்தில் நல்லது நடக்காது.

உங்களுடைய குடும்பத்திலும் இதுபோல பிரச்சனைகள் இருந்தால், இன்றைய தினம் விநாயகரை ஒரு நாழிகை மட்டும் இந்த முறைப்படி வழிபாடு செய்யுங்கள். உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் முன்னோர்கள் சாபம் குறையும். பித்ரு தோஷத்தால் வரக்கூடிய துன்பங்கள் குறையும். பித்ரு தோஷமும், முன்னோர் சாபமும் முழுமையாக விலகிவிடும் என்று சொல்லவில்லை. கடுமையான கஷ்டங்கள் கொஞ்சம் விலகும். கடுமையான குடும்ப பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு உண்டான தீர்வை இந்த பரிகாரம் காட்டிக் கொடுக்கும்.

- Advertisement -

மாசி மகம் விநாயகர் வழிபாடு

இன்றைய தினம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது பிள்ளையார் கோவிலுக்கு செல்லுங்கள். அந்த கோவிலில் இருக்கும் பிள்ளையாருக்கு உங்கள் கைகளால் அருகம்புல் மாலையை சாத்தி விடுங்கள். பிள்ளையார் பாதத்தில் இருந்து கொஞ்சம் அருகம்புல் கேட்டு நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். விநாயகர் கோவிலில், ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து, அந்த அருகம்புல்லை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு மனம் உருக பித்ருக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

உங்களை அறிந்தோ அறியாமலோ முன்னோர்களுக்கு ஏதேனும் தவறு செய்திருந்தால், முன்னோர்களுக்கு திதி தர்ப்பண காரியங்கள் செய்யாமல் விட்டிருந்தால், அல்லது உங்களுடைய பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களை நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால், இதுபோல ஏதேனும் தவறு அறிந்தோ அறியாமலோ செய்திருந்தால் அதற்கான மன்னிப்பை கேட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஆக இன்று நீங்கள் விநாயகர் கோவிலில் 24 நிமிடங்கள் அமர்ந்து இந்த வேண்டுதலை வைத்தால் உங்கள் குடும்ப கஷ்டம் தீரும். இன்று மாலை நேரம் கூட விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை. (இன்று இரவு 10 மணிக்குள் எந்த 24 மணி நிமிடங்களை தேர்ந்தெடுத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம்).

இதையும் படிக்கலாமே: 16 செல்வங்களைப் பெற்று சிறப்பாக வாழ

எந்த விநாயகர் கோவிலில் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு அந்த அருகம்புல்லை கொண்டு வந்து வீட்டில் பூஜையறையில் வைத்து விடுங்கள். அருகம்புல் வாடிய பிறகு அதை எடுத்து பூஜை அறை குப்பைகளோடு சேர்த்து விடலாம். எந்த தவறும் கிடையாது. இந்த எளிமையான வழிபாடு இன்று அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்