திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம். எப்படி தெரியுமா? நான் தினமும் கோவிலுக்கு செல்கின்றேன். தினமும் சாமி கும்பிடுகின்றேன். ஆனால் என்னுடைய கஷ்டம் மட்டும் தீரவே இல்லை. எவ்வளவு சாமி கும்பிட்டாலும் வாழ்வில் கஷ்டம் தீராமல் அவதிப்பட்டு வருகிறீர்களா, கவலையே படாதீங்க. இந்த பதிவு உங்களுக்காக.
உங்களுடைய ஜாதக கட்டத்தில் நீங்கள் பிறந்த திதி என்ன என்று பாருங்கள். அந்த திதிக்கு உண்டான தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். உங்கள் கஷ்டத்திற்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்கும். திதி என்றால் என்ன எங்களுக்கு தெரியாதே. திதி என்று பொதுப்படையாக சொன்னால் நம்மில் யாருக்கும் தெரியாது. மொத்தமாக இருப்பது 15 திதிகள் தான்.
ஆனால் வளர்பிறையில் இந்த 15 திதிகள் வரும், தேய்பிறையில் இந்த 15 திதிகள் வரும். அஷ்டமி நவமி, பஞ்சமி, பிரதமை, திருதியை, அமாவாசை பௌர்ணமி, இதுபோல சொல்கின்றோம் அல்லவா. இதைத்தான் திதிகள் என்று ஜோதிடத்தில் சொல்லுவார்கள். உங்களுடைய ஜாதக கட்டத்தை எடுத்துப் பாருங்கள். உங்களுக்கான திதி என்ன என்பது தெரியும். அந்த திதிக்கு உண்டான கடவுளை தினம் தினம் வழிபாடு செய்தால் உங்கள் கஷ்டங்கள் உடனடியாக தீரும்.
உங்களுடைய திதி என்ன. கண்டுபிடித்து விட்டீர்களா. உங்களுக்கான தெய்வத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். அந்த தெய்வத்தின் பாதத்தை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள். வழிபாட்டை துவங்குங்கள். உங்களுடைய விதி மாறும். எவ்வளவு கஷ்டங்கள் உங்களுக்கு இருந்தாலும், அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட உங்களுடைய திதிக்கு உண்டான தெய்வம், உங்களுக்கு வழியை காட்டிக் கொடுக்கும்.
சுக்லபட்சம் (வளர்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்)
1). பிரதமை – பிரம்மா தேவன் மற்றும் குபேரன்
2). துவதியை – பிரம்ம தேவன்
3). திரிதியை – சிவ பெருமான் மற்றும் கெளரி அம்மன்
4). சதுர்த்தி – விநாயகர் மற்றும் எம தர்மன்
5). பஞ்சமி – திரிபுர சுந்தரி
6). சஷ்டி – செவ்வாய் பகவான்
7). சப்தமி – இந்திரன் மற்றும் ரிஷிகள்
8). அஷ்டமி – கால பைரவர்
9). நவமி – சரஸ்வதி
10). தசமி – வீரபத்திரன் மற்றும் தர்ம ராஜா
11). ஏகாதசி – மகா விஷ்ணு மற்றும் ருத்ரன்
12). துவாதசி – பெருமாள்
13). திரியோதசி – மன்மதன்
14). சதுர்த்தசி – காளி தேவி
15). பெளர்ணமி – லலிதாம்பிகை
கிருஷ்ணபட்சம் (தேய்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்)
1). பிரதமை – துர்க்கை அம்மன்
2). துவதியை – வாயு பகவான்
3). திரிதியை – அக்னி பகவான்
4). சதுர்த்தி – விநாயகர் மற்றும் எம தர்மன்
5). பஞ்சமி – நாக தேவதை
6). சஷ்டி – முருகப் பெருமான்
7). சப்தமி – சூரிய தேவன்
8). அஷ்டமி – மகா ருத்ரன் மற்றும் துர்க்கை அம்மன்
9). நவமி – சரஸ்வதி தேவி
10). தசமி – துர்க்கை அம்மன் மற்றும் எம தர்மன்
11). ஏகாதசி – சிவ பெருமான் மற்றும் மகா விஷ்ணு
12). துவாதசி – சுக்கிரன்
13). திரியோதசி – நந்தி பகவான்
14). சதுர்த்தசி – ருத்ரன்
15). அமாவாசை -காளி தேவி மற்றும் பித்ருக்கள்
இதையும் படிக்கலாமே: 25-03-2025 அபிஜித் நட்சத்திர வழிபாடு
இவ்வளவுதாங்க, நீங்க வளர்பிறை திதியில் பிறந்தீர்களா? அல்லது தேய்பிறை திதியில் பிறந்தீர்களா என்பதை முதலில் பார்த்துவிட்டு, எந்த திதியில் பிறந்தீர்கள் என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான தெய்வங்களை தொடர்ந்து வழிபாடு செய்து வர, உங்களுடைய விதியில் இருக்கும் கஷ்டங்கள் திருத்தி எழுதப்படும். நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் இனி நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.