மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிதானமாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் முன்பின் யோசிக்காமல் செயல்படுத்தக் கூடாது. மனதை அலைபாய விடக்கூடாது. அகலக்கால் வைக்க கூடாது. தேவையற்ற செலவுகள், தேவையற்ற விரயங்கள், ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில் இது நாள் வரை இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுபச் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஏறுமுகம் தான். படிப்பில் இருந்து வந்த தடைகள் விலகி சந்தோஷம் பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் லாபகரமாக இருக்கும். நீங்கள் நஷ்டமடைந்த விஷயத்தில் எல்லாம் எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். நீண்ட நாள் மன அழுத்தம் விலகும். இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக நடக்கும். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம். சனி பகவான் உங்களுக்கு இனி நல்லதை வாரி வாரி வழங்க போகிறார்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பல வகையில் நன்மைகளை செய்யப் போகிறது. வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை வீடு தேடி வராத பணம் கூட கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கையை வந்து சேரும். வியர்வை சிந்தி உழைத்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. சோம்பேறித்தனத்தோடு இருப்பவர்களுக்கு சனி பகவான் சில சோதனைகளை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. அவமானம் பட்ட இடத்தில் எல்லாம், தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மந்தமான புத்திக்கொண்ட மாணவர்கள் எல்லாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். நல்லது நடக்கும். பயப்பட வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிதானமாக நடந்து கொண்டால், உங்களுக்கான நன்மைகள் அபரிவிதமாக கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நிதானத்தோடு செய்ய வேண்டும். அவசர புத்தி வேண்டாம். கடினமாக உழைத்தால் அதற்கு ஏற்ற ஆதாயம் உங்களை வந்து சேரும். வருமானம் சீர்படும். தேவையற்ற செலவுகள் குறையும். வீட்டிற்கு தேவையான அசையும் அசையா சொத்துக்களை வாங்கி மகிழ்வதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் அனுசரணை கிடைக்கும். மேல் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான சேமிப்பையும் அதிகரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவன குறைவாக இருக்கக் கூடாது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால், பணம் சம்பந்தப்பட்ட நஷ்டத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் அகல கால் வைக்காதீர்கள். முன்பின் தெரியாத நபரோடு அதிகம் பழக வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம். சனி பகவான் உங்களுக்கு அனுபவரீதியாக கொஞ்சம் பாடங்களை கற்றுக் கொடுப்பார். கவனமாக இருங்கள். சோர்ந்து போகாதீர்கள். சுறுசுறுப்பை கையோடு வைத்துக் கொள்ளுங்கள். வியர்வை சிந்தி உழையுங்கள். நல்லதே நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாழ்க்கையில் ஏற்றங்கள் வரும்போது தலைக்கனம் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் சின்ன சின்ன சரிவுகள் ஏற்படும் போது துவண்டு போகாமல் இருக்க வேண்டும். வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக பாவித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களோடு அனுசரணையாக பேசுங்கள். பார்ட்னரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் நிதானத்தோடு செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. மாணவர்கள் பெரியவர்கள் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலம் சந்தோஷமான காலமாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். மனம் தெளிவு பெறும். கெட்டவர்கள் எதிரிகள் உங்களுக்கு துரோகம் செய்தவர்கள், எல்லாம் தானாக விலகி விடுவார்கள். மனது இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டும். வேலையில் சொன்ன நேரத்தில், சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். தன்னம்பிக்கை தைரியம் உயரும். எதிர்காலத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். வியாபாரம் லாபத்தை பெறும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலையில் எதிர்பார்த்த பிரமோஷனும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அபரிவிதமான வெற்றி கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சக்ஸஸ் தான்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் கொஞ்சம் பிரச்சனைகள் தனியும் காலகட்டமாக தான் இருக்கும். தேவையற்ற கண் திருஷ்டிகள், எதிரி தொல்லைகள், உங்களை விட்டு விலகும். உங்களுடைய வாழ்க்கை பாதை படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். உங்களுடைய திறமைகள் வெளிப்படக்கூடிய நேரமும் காலமும் கைக்கூடி வரும். எந்த பிரச்சனை வந்தாலும் தைரியத்தோடு எதிர்கொண்டு துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவும் அமையும். இக்கட்டான சூழ்நிலைகள் விடுபடும் காலம் இது. வாழ்க்கையில் நல்ல அனுபவங்களை பெற்று முன்னேற கூடிய காலமாகவும் இனி வரக்கூடிய காலகட்டம் அமையப்போகிறது. தொழிலில் போட்டி பொறாமைகளில் இருந்து விடுபட்டு நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த எதிரிகள் எல்லாம், நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பிரிந்து போன உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதுநாள் வரை இருந்த துன்பங்கள் குறைய சனி பகவான் உங்களுக்கு நன்மையை செய்வார்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த விஷயத்திலும் காலை வைக்கக் கூடாது. நிதானதோடு செயல்பட்டால் எதிலும் வெற்றி காணலாம். பிரச்சனைகள் வந்தாலும் உங்களுடைய பேச்சாற்றலின் மூலம் அதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படக்கூடிய காலம் இது. குடும்பத்தில் இருந்து வந்த பிளவுகள் சரியாகும். உறவுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் எல்லாம் லாபகரமாக மாறும். வியாபாரத்தில் போட்டி பொறாமையோடு இருந்தவர்கள் கூட உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். புதிய தொழில் துவங்குவதில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய முதலீடு செய்வதற்கு உண்டான கடன் தொகை கிடைக்கும். உங்களுக்கு சாதகமாக தான் எல்லா நன்மைகளும் நடக்கும். அனுபவரீதியாக இனி வரக்கூடிய காலகட்டம் உங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் சந்தோஷம் நிறைந்த நாளாக தான் இருக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை எல்லாம் நல்லபடியாக சாதித்துக் கொள்வீர்கள். வியாபாரம் தொடங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதுசாக தொழில் தொடங்கலாம். புது வேலை தேடலாம். பிரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். இடம் மாற்றம் உங்களுக்கு நன்மையை கொடுக்கும். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். கலைஞர்களுக்கு நிறைய நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடை இருக்காது. நினைத்த மேல் படிப்பு படிக்க எல்லா வாய்ப்புகளும் தேடி வரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசக்கூடிய காலம் இது. நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் பொறுமை காக்க வேண்டும். அதிகம் பேசக்கூடாது. முன்கோபடக் கூடாது. தெரியாத விஷயங்களில் கால் எடுத்து வைக்கக் கூடாது. சோம்பேறித்தனத்தை அறவே மறந்து விட வேண்டும். கடினமாக உழைக்கும் பட்சத்தில் உங்களுக்கு வரும் கஷ்டங்கள் குறையும். சில பல துன்பங்கள் வந்தாலும் உங்களுக்கு அனுபவரீதியாக நல்ல பாடங்கள் கிடைக்கும். வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். நல்லது நடக்கும். ஆனால் கொஞ்சம் தாமதமாக நடக்கும். அவ்வளவுதான். எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கைவிடாதீர்கள். நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களுடைய பேச்சை அப்படியே காதில் போட்டுக்கொண்டு, மனம் துவண்டு போகக் கூடாது. நல்லது கெட்டதை எதிர்கொண்டு போராடி வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் வர வேண்டும். மற்றபடி சனி பகவான் உங்களுக்கு நன்மையை செய்வார். கவலைப்படாதீங்க எந்த பிரச்சினைகளையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சனி பகவான் நல்ல பலன்களை தான் கொடுப்பார். ஆனால் ஒரு முயற்சியில், உடனடியாக வெற்றி காண முடியாது. சில பல தடைகள் வந்த பிறகு வெற்றியை கொடுப்பார். சோதனையை கொடுத்து சாதனை படைக்கக்கூடிய காலம் இது. எதைக் கண்டு பயப்படாதீர்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு விஷயங்களை துவங்கலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட, நல்லதை சனி பகவான் உங்களுக்கு கொடுக்கப் போகிறார். அதற்கெல்லாம் பொறுமை தேவை. சில பேருக்கு நிலம் வீடு பொன் பொருள் வாங்க கூட வாய்ப்புகள் இருக்கிறது. அவ்வளவுதான். விடாமுயற்சி நிச்சயம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். வியர்வை சிந்த சிந்த உழையுங்கள் நல்லதே நடக்கும் எதைக் கண்டு பயப்பட வேண்டாம்.