- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தடை நீக்கும் தேய்பிறை சஷ்டி

பணத்தடை நீக்கும் தேய்பிறை சஷ்டி

- Advertisement -

பண வரவு என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தான் அந்தப் பணம் நம் கையில் தங்க வேண்டும் என்பதும் முக்கியம். பணத்தை சம்பாதிப்பதற்காக ஆயிரம் வழிகள் இருந்தாலும் அதில் சரியான வழியை தேர்வு செய்து கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்க வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய பணம்தான் நம்முடன் தங்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை அப்படி கஷ்டப்பட்டு நியாயமான முறையில் உழைத்தும் நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் தங்கவில்லை என்னும் பட்சத்தில் அதையும் நாம் பணத் தடையாகவே கருத வேண்டும். அப்படிப்பட்ட பணத்தடையை நீக்குவதற்கு தேய்பிறை சஷ்டி நாளில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணத்தடை நீக்க வழிபாடு

முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. அதிலும் வேண்டிய வரங்களை பெறுவதற்கு வளர்பிறை சஷ்டியை நாம் பயன்படுத்த வேண்டும். நம்மிடம் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீருவதற்கு தேய்பிறை சஷ்டியை பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட தேய்பிறை சஷ்டி என்பது ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. அன்றைய தினத்தில் எப்பொழுதும் போல் சஷ்டி விரதம் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய விரதத்தை இருந்து வழிபாட்டை செய்வதோடு இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் அவர்கள் கையில் பணம் நிரந்தரமாக தங்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். கண்டிப்பான முறையில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக இருந்தாலும் சரி, செய்த பிறகாக இருந்தாலும் சரி அசைவம் சாப்பிடக்கூடாது. பெண்கள் தீட்டு சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. குளித்து சுத்தமாக இருக்கும் பொழுது தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் வேண்டும். இந்த மூன்று பொருட்களும் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளையும் நீக்க வல்லதாக கருதப்படுகிறது. அந்த பொருட்கள்தான் கல் உப்பு, மிளகு மற்றும் படிகாரம்.

ஒரு சிறிய அகல் விளக்கு அல்லது பீங்கான் கிண்ணம் போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு கல் உப்பை போட வேண்டும். அந்த கல்லுப்பிற்கு மேல் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையில் மிளகை போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு சிறிய துண்டு படிகார கல்லை வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இதை நாம் பணம் எங்கு இருக்கிறதோ அதற்கு பக்கத்தில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் அந்த இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

பீரோவில் வைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் பீரோவிற்கும் மேல் அல்லது கீழ் வைக்கலாம். செல்ஃபில் பணத்தை வைக்கிறோம் என்னும் பட்சத்தில் அந்த செல்ஃபிற்கு மேல் செல்பிலோ அல்லது கீழ் செல்பிலோ இதை வைக்கலாம். இந்த கல்லுப்பு மிளகு மற்றும் படிகாரம் அடுத்த மாத தேய்பிறை சஷ்டி வரை அப்படியே இருக்கட்டும். அடுத்த மாத தேய்பிறை சஷ்டி வரும்பொழுது இதை கால்படாத இடத்தில் போட்டு விட்டு புதிதாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் முத்திரை

எளிமையான இந்த பரிகாரத்தை முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு அவரின் அருளால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதோடு பணம் எப்பொழுதும் அவர்கள் கையில் தங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்