- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் முத்திரை

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் முத்திரை

- Advertisement -

பெற்றோர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்களுடைய குழந்தைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் படிக்கும் பருவத்தில் இருக்கும் பொழுது அவர்களுடைய படிப்பில் அதிக அளவு அக்கரை எடுத்து சிறப்பான பள்ளியாக பார்த்து சேர்த்து விடுவோம், சிறந்த முறையில் வகுப்புகளுக்கும் அனுப்பி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்போம். இருப்பினும் பல குழந்தைகள் தங்களுடைய கல்வி அறிவை சிறப்பாக பெறாமல் ஏதாவது ஒரு கல்வி தடையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட கல்வி தடையை நீக்கவும் சிறந்த ஞானத்தை பெறவும் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஹயக்ரீவர் முத்திரை வழிபாடு

சிறந்த ஞானத்தையும் கல்வி அறிவையும் பெற வேண்டும் என்றால் நாம் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சரஸ்வதி தேவிக்கு குருவாக இருப்பவர்தான் ஹயக்ரீவர். இவர் பெருமாளின் ஒரு அவதாரமாக கருதப்படுகிறார். அசுரர்கள் வேத புத்தகங்களை திருடி மறைத்து வைத்திருந்ததை அறிந்து ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அந்த வேத புத்தகங்களை திரும்ப பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. அதனால் சரஸ்வதி தேவியை விட ஹயக்ரீவரை வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே சிறந்த ஞானத்தை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஹயக்ரீவரை புதன்கிழமை தோறும் வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அதேபோல் ஹயக்ரீவருக்கு வாசனை மிகுந்த ஏலக்காயை பயன்படுத்தி மாலைகள் கட்டி போட்டு வழிபாடு செய்யும்பொழுது சிறந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஹயக்ரீவருக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை படிக்கும் பிள்ளைகள் அனுதினமும் உச்சரிக்கும் பொழுது ஹயக்ரீவரின் அருளால் சிறந்த ஞானத்தை அந்த குழந்தைகளால் பெற முடியும். இப்படி மந்திர வழிபாட்டோடு சேர்த்து ஒரு முத்திரையும் இருக்கிறது. இந்த முத்திரையை நாம் செய்வதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதனால் காலையில் குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்த முத்திரையை செய்வதோடு மட்டுமல்லாமல் ஹயக்ரீவரின் எளிமையான ஒரு மந்திரத்தையும் கூறும்பொழுது அவர்களின் கல்வித் திறன் மேம்படும்.

ஹயக்ரீவர் முத்திரையை செய்யும் முறை: இடது கையை விரித்துக் கொள்ளுங்கள். இடது கையின் உள்ளங்கை பகுதி இருக்கும் அல்லவா? அந்த உள்ளங்கையில் வலது கையில் இருக்கக்கூடிய ஐந்து விரல்களையும் ஒன்றாக சேர்த்து குவித்து வைக்க வேண்டும். பிறகு இடது கையின் நடு விரலையும் வலது கையின் நடு விரலையும் இணைக்க வேண்டும். இதுதான் ஹயக்ரீவர் முத்திரை. இந்த முத்திரையை வைத்துக்கொண்டு பின்வரும் ஹயக்ரீவரின் மந்திரத்தை 9 முறை கூற வேண்டும். இப்படி தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகள் செய்ய வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படும். சிறந்த ஞானத்தை பெறுவார்கள்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹயக்ரீவாய நமஹ “

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு

முத்திரைகளும் மந்திர வழிபாடுகளும் நம்முடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்தது என்பதால் ஹயக்ரீவரை மனதார நினைத்துக் கொண்டு குழந்தைகள் இந்த முத்திரையையும் மந்திரத்தையும் கூற ஹயக்ரீவரின் அருளால் குழந்தைகளின் கல்வித்திறனும் அறிவுத்திறனும் ஞானமும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்