கோவிலில் எழுமிச்சை பழம் வாங்கிட்டு வந்து இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீர்கள்.

- Advertisement -

பொதுவாகவே எழுமிச்சை பழத்திற்கு ‘தேவ கனி’ என்ற பெயர் உண்டு. தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்றும் கூறலாம். எழுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எழுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் இது தேவ கனியாக சொல்லப்படுகிறது. இந்த எழுமிச்சை பழத்தை நல்லவர்கள் நல்ல சக்தியை பெறவும், தீயவர்கள் தீய சக்தியை ஏவி விடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எழுமிச்சை பழத்தை கோவிலில் கொடுக்கப்படும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வழுபெற்று இருக்கும். எழுமிச்சம் பழத்தை 18, 21, 51, 54, 108, 1008 என்ற எண்ணிக்கைகளில் மாலையாக கோர்க்கபட்டு அம்மனுக்கு சார்த்தப்படுகிறது. அதில் இருந்து ஒவ்வொன்றாக பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கபடுகிறது. தெய்வ தன்மையுள்ள இந்த எழுமிச்சை பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

temple-lemon

முக்கனிகளுக்கு கிடைக்காத சிறப்பு எழுமிச்சைக்கு கிடைக்க காரணமாக இருப்பது அதில் எந்த குற்றமும் இல்லாததே ஆகும். சில பழங்களுக்கு புள்ளி குற்றம், வண்டு குற்றம் என்று பல குற்றங்கள் கூறுவதுண்டு. ஆனால் தேவ கனியான எழுமிச்சைக்கு இது போல் எந்த குற்றங்களும் பொருந்துவதில்லை. துர்கை அம்மனுக்கு எழுமிச்சம் மாலை சாற்றி வழிபட்டு பிரசாதமாக கொடுக்கபடும் எழுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்தால் குடும்பத்தில் இருக்கும் பீடை ஒழியும். கஷ்டங்கள் நீங்கும்.

- Advertisement -

இது போல கோவிலில் பிரசாதமாக நீங்கள் வாங்கும் எழுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். காய்ந்து போனதும் குப்பை தொட்டியில் போட்டு விடாதீர்கள். பூஜைக்கு பயன்படுத்தபடும் பூக்கள், பழங்கள் காய்ந்து போனால் கண்டிப்பாக குப்பையில் போடக் கூடாது. அது தெய்வத்தை அவமதிக்கும் செயல் போன்றது. இவ்வாறு செய்வதால் தரித்திரம் வரும். கஷ்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் போட வேண்டும். இல்லையென்றால் மரம், செடி, கொடிகளில் போடலாம்.

temple-lemon1

பல பேர் கோவிலில் கொடுக்கும் எழுமிச்சை பழத்தை வாகனங்களில் வைப்பார்கள். இது சரியான முறை. வாகனங்களில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. எந்த பிரச்சனையும் இன்றி வாகனம் செயல்படும். காய்ந்த பின் அப்படியே வைத்திருக்க கூடாது. எடுத்து கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

அது போல் பீரோவில் வைக்கலாம். ஆனால் பீரோவில் வைப்பதால் வெப்பம் காரணமாக எழுமிச்சை அழுகும் நிலை வரலாம். எனவே இதனை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் வைப்பது நல்லது. கல்லாப்பெட்டியில் போட்டு வைக்கலாம். வியாபாரம் விருத்தி பெறும்.

thirusti

கோவிலில் எழுமிச்சை பழம் வாங்கிட்டு வந்து கண்டிப்பாக திருஷ்டி சுற்றி போடக் கூடாது. வீட்டில் இருக்கும் எழுமிச்சை பழம் கொண்டு திருஷ்டி சுற்றி போடலாம். ஆனால் பிரசாதமாக கோவிலில் கொடுக்கும் எழுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி சுற்றவே கூடாது. இதுவரை அப்படி செய்திருந்தால் பரவாயில்லை. இனி தெரிந்தும் செய்யாதீர்கள். தெய்வ சக்தி பெற்ற எழுமிச்சையை திருஷ்டிக்காக பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.

- Advertisement -

கோவிலில் இருந்து ஒரு பழம் வாங்கி வந்தால் சரி, ஒன்றுக்கும் அதிகமாக வாங்கி வந்தால் அதனை தாராளமாக சாறு எடுத்து சர்க்கரை, தேன் கலந்து குடிக்கலாம். ஆரோக்கியம் நலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இதில் எந்த தவறும் இல்லை. மாறாக வீணாக்குவது, குப்பையில் போடுவது, அழுக விடுவது, திருஷ்டி சுற்றுவது இது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது.

thirisoolam

எழுமிச்சைக்கு இருக்கும் சக்தி அளப்பரியது. மூன்று எழுமிச்சம் கனிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள். சுப காரியதிற்கு செல்லும் போதோ, வெற்றியை நோக்கி செல்லும் போதோ இந்த கனிகளை அம்மன் கோவில் வாசல் முன்னர் இருக்கும் திரிசூலத்தில் மூன்றையும் சொருகி விட்டு போகிற காரியம் வெற்றி பெற வணங்கி செல்லுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். அம்மனுக்கு எழுமிச்சம் மாலை சாற்றுவது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்க தம்பதியர்கள் எழுமிச்சைபழ மாலை அம்மனுக்கு வேண்டிக் கொண்டு சாற்றலாம்.

kaliamman

உக்ர காளி அம்மனுக்கு எழுமிச்சை மாலை சாற்றுவது சிறப்பான வழிபாடு. எதிர்மறை பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். அதே போல் துர்கைக்கு ராகு காலத்தில் எழுமிச்சை பழ மாலை சாற்றுவதும், எழுமிச்சைபழ தீபம் ஏற்றுவதும் பெரும் பேறுகளை பெற்று தரும். வீட்டில் எழுமிச்சையால் கண்டிப்பாக தீபம் ஏற்றக் கூடாது. கோவில் மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 முடிச்சினை உங்கள் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால், கண் திருஷ்டியும் உள்ளே வராது, கெட்ட சக்தியும் உள்ளே வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have What to do with lemon from temple. Elumichai palam. Elumichai palam in Tamil. Offering lemon to god. Elumichai palam malai.

- Advertisement -