கோடி ரூபாய் கடன் இருந்தாலும், அதை சீக்கிரமாக அடைக்க, உங்கள் கையில் இருக்கும் 1 ரூபாய் போதும்!

one-rupe
- Advertisement -

கோடி கோடியாய் பணம் சம்பாதித்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். பொதுவாக ஒருவருக்கு இருக்கக்கூடிய ‘சில்லரை கடன் அவரை சீரழிக்கும்’ என்று சொல்லுவார்கள். சில்லறை கடனாக இருந்தாலும், அதை விரைவாக திருப்பித் தருவதுதான் நல்லது. நீங்கள் வாங்கியிருக்கும் சில்லறை கடனில் ஆரம்பித்து, பெரிய அளவிலான தொகையாக இருந்தாலும், அதை விரைவாக திருப்பித்தர ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money

இந்த பரிகாரத்தில் எந்தவிதமான தந்திர வித்தைகளும் கிடையாது. முழுமையாக ஆண்டவனை நினைத்து செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறைதான். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் எந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தாலும் சரி, அந்த கும்பாபிஷேகத்தில், நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அதாவது கடன் பிரச்சினை உள்ளவர்கள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

யாகங்களும் ஹோமங்களும் நடந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில், நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் அந்த சமயத்தில், அந்த கும்பாபிஷேகம் நடக்கப் போகின்ற கோவிலுக்கு சென்று, உங்களது சீக்கிரமே கடன் தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தால் அது விரைவாக நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. கடனை கடன் பிரச்சனை என்று மட்டும் அல்ல, வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும், கும்பாபிஷேகம் நடக்கும் இடத்திற்குச் சென்று யாகங்கள் நடக்கும் சமயத்தில் வேண்டிக் கொண்டால் அது உடனே நடக்கத் தான் செய்யும்.

kumbabhishegam

ஆனால் கடன் பிரச்சினைக்கு வேண்டிக் கொள்வதோடு மட்டும் விட்டுவிடாமல், அந்த கும்பாபிஷேகத்தில், ஹோமம் நடத்தும் போது, ஹோமகுண்டத்தில் ஒரு ரூபாய் நாணயங்களை போட்டு வைத்திருப்பார்கள். போட்டு வைத்திருக்கும் 1 ரூபாய் நாணயத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து, ஒரு மண்ணால் செய்யப்பட்ட குடுவையில் போட்டு வைக்கலாம். இப்படி அந்த ஒரு ரூபாய் நாணயம் நம் வீட்டு பீரோவில் இருந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். கடன் இல்லாதவர்கள், அதை உங்களது பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் மண் அகல்விளக்கு எல்லோர் வீட்டிலும் இருக்கும். அந்த விளக்கில் வைத்து கூட உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அந்த நாணயத்தை பிளாஸ்டிக் டப்பாவிலோ அல்லது இரும்பு டப்பாவிலோ போட வேண்டாம். மண்ணால் செய்யப்பட்ட பொருளில் தான் வைக்க வேண்டும்.

- Advertisement -

கடன் தொல்லை இருப்பவர்கள், சிறிய மண் அகல் தீபம், அதன் உள்ளே கும்பாபிஷேக ஹோம குண்டத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒரு ரூபாய் நாணயம். இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டீர்கள். அடுத்தபடியாக தினந்தோறும் காலை பிரம்ம முகூர்த்த வேளையில், இந்த பூஜையை செய்து வர வேண்டும். காலையில் பூஜை செய்ய முடியாதவர்கள், மாலை 6 மணி அளவில் இந்த பூஜையை செய்யலாம்.

kumbabhishegam1

எப்பவும் போலவே உங்கள் வீட்டில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அந்த மண் அகல் தீபத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் கண்களால் உற்று நோக்கி, உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். ‘கடன் பிரச்சனை தீர வேண்டும்’ என்ற வார்த்தையை 108 முறை உச்சரித்தால் போதும்.

- Advertisement -

one rupee

விரைவாக கடன் பிரச்சனை தீர வேண்டும் அல்லது கடன் பிரச்சனை தீர்வதற்கு வருமானம் கிடைக்க, தொழில் அமைய வேண்டும். இப்படியாக உங்கள் இஷ்டம் போல உங்களது வேண்டுதலை வைக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், அந்த வேண்டுதல் நேர்மறையான வார்த்தைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது. அந்த நாணயத்தின் முன்பு நீங்கள் என்ன கேட்டு வேண்டிக் கொள்கிறீர்களோ அது உடனே பலிதமாகும். கும்பாபிஷேக யாககுண்டத்தில் இருந்து, ஒரு ரூபாய் நாணயம் கிடைக்காத பட்சத்தில், உங்களுடைய வீட்டில் சிறியதாக, கணபதி ஹோமம் நடத்தி, அதில் ஒரு ரூபாய் நாணயங்கள் போடப்படும் அல்லவா, அதை கூட எடுத்து இப்படி பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.

money

இப்படியாக உங்களது வேண்டுதலை தொடர்ந்து 27 நாட்கள் வைத்தாலே, உங்கள் கடன் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க, ஏதாவது ஒரு வழி கட்டாயம் கிடைக்கும். ஒரு வழி கிடைத்துவிட்டது என்று விட்டுவிடக்கூடாது. 27 நாட்கள் என்பது உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்த வழிபாட்டை, உங்களது கடன் முழுமையாக தீரும் வரை வைத்துக்கொண்டே இருந்தால், நிச்சயம் உங்களுக்கான விடிவுகாலம் விரைவில் பிறக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அட! நகை அடமானம் போவதற்கு இது கூடவா ஒரு காரணமாக இருக்கும். பௌர்ணமி அன்று இப்படி செய்தால், நகை அடகு கடைக்கு போக வாய்ப்பே இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -