குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு என்ன செய்யலாம் என்பது தினமுமே நமக்கு பெரிய யோசனையா இருக்கும். ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வதோடு இல்லாமல் அதை தொடர்ந்து அப்படியே நைட்டு டிபனுக்கும் ஏதாவது செய்யணும். இப்படி இதுவே பெரிய பிரச்சனையா இருக்கும் போது இதுல காலையில வடித்த சாதம் வேறு மீந்து விட்டால் சொல்லவா வேண்டும். சாதமும் வீணாக கூடாது. ஈவினிங் ஸ்னாக்ஸ்சும் ரெடி பண்ணி குடுக்கணும். ஏன் செய்வது என்று பெரும் கவலையாகி போய் விடும்.
இனிமே உங்களுக்கு இந்த கவலையே வேண்டாம். இனி ஒரே ஒரு கப் சாதம் மீந்தால் கூட அதை வைத்து ஈவினிங் ஸ்னாக்ஸ்சும், நைட் டின்னருக்கும் சேர்த்து ஒரு சூப்பர்னா டிஷ் ரெடி பண்ணிடலாம். அது எப்படி செய்வது என்பது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: மீந்த சாதம் – 1 கப், ரவை – 1/2 கப், பச்சரிசி மாவு – 1/2 கப்,பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1, சில்லி பிளாஸ்க்ஸ் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) -1 கை பிடி, சீரகம் – 1 ஸ்பன், பச்சை மிளகாய் – 2, துண்டு இஞ்சி (பொடியாக நறுக்கியது) நறுக்கியது ஒரே ஒரு கருவேப்பிலை – 1 கொத்து, எண்ணெய் – 3 டீஸ்பூன் , சமையல் சோடா – 1/4 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன்.
ஒரு கப் சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பவுலில் மாற்றி விடுங்கள். அதில் அரை கப் ரவை, அரை கப் பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஒரு பத்து நிமிடம் இவை அரைத்த மாவில் ஊற வேண்டும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி மாவுடன் கலந்து கொள்ளுங்கள். பிறகு கொத்தமல்லி இலை,சில்லி பிளாஸ்க்ஸ், உப்பு, மஞ்சள் தூள்,சோடா உப்பு அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாக கலந்து பத்து நிமிடம் அப்படியே இருக்கட்டும்.
இதையும் படிக்கலாமே: ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ‘காஷ்மீரி தம் ஆலு’ செய்வது எப்படி? உருளைக்கிழங்கு குருமா வைப்பது போலவே இது ரொம்ப ரொம்ப ஈஸி.
அதன் பிறகு அடுப்பில் குழிப்பணியாரம் சட்டியை வைத்து அதில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இந்த மாவை ஒரு கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊற்றி விடுங்கள். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்த பிறகு, அதன் மறு புறம் திருப்பிப் போட்டு இந்த முறை மூடி போடாமல் மேலும் ஒரு ஐந்து நிமிடம் வேக விடுங்கள். அவ்வளவு தான் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி. இதை காலை இரவு உணவாக கூட சாப்பிடலாம்.