நாம் தினமும் உடுத்தக்கூடிய ஆடைகளின் மூலம் கூட தரித்திரம் நம்மை விட்டு பிரியாமல் இருக்கும். ஆடை தரித்திரம் பிடிக்காமல் இருக்க என்ன செய்வது?

clothes-lakshmi
- Advertisement -

நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் கஷ்டம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளது. கூடுமானவரை நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்த சாஸ்திர சம்பிரதாய முறைகளை பின்பற்றி வந்தாலே கஷ்டம் வராமல், வீட்டிற்கு தரித்திரம் பிடிக்காமல் இருக்கும். ஆனால் நம்முடைய வேலை பளு காரணமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த சில விஷயங்களை தலைகீழாக செய்ய தொடங்கி விட்டோம். அப்படி தினம் தோறும் நம் வீட்டில் தலைகீழாக செய்யக்கூடிய ஒரு வேலையை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

தலைகீழாக செய்யக் கூடிய வேலை என்றால். காலையில் செய்யக்கூடிய வேலையை எல்லாம் இப்போது மாலையில் செய்து கொண்டிருக்கின்றோம். காரணம் நேரம் இன்மை. பொதுவாகவே ஒரு வீட்டில் அழுக்குத் துணிகளை துவைப்பதாக இருந்தால் அதை காலையில் தான் துவைக்க வேண்டும். மாலை நேரத்தில் துணி துவைக்கும் பழக்கம் ஒரு வீட்டில் இருக்கக் கூடாது. துணியை துவைத்தவுடன் உடனடியாக அந்த துணிகளை காய வைத்து விட வேண்டும். குறிப்பாக ஈரத்துணிகளை பாத்ரூம் கதவிலேயே அப்படியே நீண்ட நேரம் தொங்க விடக்கூடாது.

- Advertisement -

சில பேர் பத்து நாள் அழுக்கு துணிகளை கூட ஒரு மூலையில் போட்டு வைத்துவிட்டு, பின்பு துவைப்பார்கள். இப்படி அழுக்கோடு ஒரு மூலையில் 10 நாட்கள் வைக்கப்பட்ட துணியை நீங்கள் என்னதான் வாசனை திரவியம் ஊற்றி துவைத்து மீண்டும் உடுத்திக் கொண்டாலும் அந்த துணியின் மூலம் நமக்கு தரித்திரம் பிடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

துவைத்த ஈரத் துணியை வெகு நேரம் அப்படியே கதவு, கயிரில் உலர வைக்காமல் தொங்க விட்டாலும் அந்த துணி காய்ந்த பின்பு உடுத்துபவர்களுக்கு சில தரித்திரங்களை உண்டாக்கும். வாஷிங்மெஷினில் துணியை துவைத்து விட்டு நீண்ட நேரம் அதை எடுத்து காய வைக்காமல் இருந்து, எடுத்து காய வைத்த துணியை பயன்படுத்தும் போது அந்த துணியின் மூலமாகவும் தரித்திரம் பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு வீட்டில் துவைத்த துணியை மடிக்காமல் கொடியில் தொங்க விடுவது, மொத்தமாக மூட்டையாக கட்டி ஒரு சோபாவின் மீது போட்டு வைப்பது போன்ற தவறுகளையும் செய்யக்கூடாது. அதுவும் நம் வீட்டில் இருக்கக்கூடிய லட்சுமி கடாட்சத்தை குறைத்து விடும். இப்படி சரியான முறையில் பராமரிக்கப்படாமல் துவைத்து காய வைத்த துணிகளை அணிபவர்களுக்கு நிச்சயமாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும்.

ஆக துணிகள் தானே என்று அலட்சியமாக இருக்காமல் விளக்கு வைப்பதற்கு முன்பாகவே துணிகளை துவைத்துவிட்டு, துவைத்த துணிகளை உடனடியாக காய வைத்து, காய்ந்த பின் அந்த துணிகளை உடனடியாக மடித்து வைத்து விடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் யாருக்கு நேரம் கிடைக்கிறதோ அவர்கள் தினம் தினம் இந்த வேலையை செய்து முடித்து விடுங்கள். மனைவி தான் இந்த வேலையை வந்து செய்ய வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம்.

வாழ்வில் வரக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் வீட்டில் துணிகளை இப்படி போட்டு வைப்பது தான் காரணம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். உங்களுடைய துணிகளின் மூலம் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்றால் மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய வாழ்வில் நீங்களே எதிர்பார்க்காத நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -