ஆடி முதல் நாள் எல்லோர் வீட்டு வாசலிலும் இந்த ஒரு விளக்கை ஏற்றி, உங்க வீட்டிற்குள் அம்மனை வர வைத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் முழுவதும் அம்மனின் அருள் உங்கள் குடும்பத்திற்கு நிறைவாக கிடைக்கும்.

amman3
- Advertisement -

வரக்கூடிய 17.07.2023 ஆம் தேதி ஆடி முதல் நாள் பிறக்கவிருக்கின்றது. திங்கட்கிழமை அமாவாசையோடு இந்த ஆடி 1 பிறக்க இருப்பதால் இந்த நாள் ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்த நாள். ஆடி மாதம் வந்து விட்டாலே தெருக்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் அம்மன் பாடல்கள் ஒலிக்க, அம்மனுக்கு காலையில் அபிஷேகங்கள் நடக்க, அம்மன் அலங்காரத்துடன் மனநிறைவோடு சந்தோஷத்தோடு இந்த மாதம் முழுவதும் நம்முடைய ஊர்களில் தங்கி அனைவருக்கும் அருளாசியை வழங்கி சந்தோஷமாக இருக்கப் போகின்றாள். வரக்கூடிய இந்த ஆடி முதல் நாள் நம்முடைய வீட்டில் அம்மனை அழைக்க எப்படி வழிபாடு மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

ஆடி முதல் நாள் வாசலில் ஏற்ற வேண்டிய தீபம்:
ஏதாவது ஒரு நல்ல நாள் விசேஷ தினம் என்று வந்து விட்டாலே முதலில் வீட்டில் இருக்கும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு நல்ல ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். இரவு ஆடை என்று சொல்லப்படும் நைட்டியை தவிர்த்து விடுங்கள். பிறகு வாசல் தெளித்து கோலம் போட்டு, அந்தக் கோலத்திற்கு மேலே மஞ்சள் குங்கும பொட்டை வைத்து விடுங்கள்.

- Advertisement -

நிலை வாசலில் கொஞ்சம் வேப்பிலையை சொருகி விடுங்கள். அதேபோல நிலை வாசலுக்கு கீழ் பக்கத்தில் ஒரு தாம்பூல தட்டில் இரண்டு அல்லது மூன்று இனுக்கு வேப்ப இலைகளை வைத்து அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து விடுங்கள். ஒரு விளக்கு அல்லது இரண்டு விளக்கு உங்கள் விருப்பம் போல ஏற்றுங்கள்.

விளக்கை ஏற்றி வைத்துவிட்டு உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்துவிட்டு உங்கள் இஷ்ட தெய்வ அம்மனின் பெயரை மூன்று முறை உச்சரித்துவிட்டு, அந்த தெய்வங்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்று மனம் உருகி நிலை வாசலில் பிரார்த்தனை செய்துவிட்டு, நீங்கள் வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் இருக்கும் விளக்கை ஏற்றி அம்பாளை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

இந்த ஆடி மாதம் முழுவதும் இந்த விளக்கை ஏற்றலாம் தவறு கிடையாது. முடியாதவர்கள் ஆடி முதல் நாள் காலையில் தவறாமல் இந்த விளக்கை ஏற்றுங்கள். பிறகு ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் காலையில் எழுந்து இப்படி நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அம்மன் நம்முடைய வீட்டிற்கு வருகை தருவதற்கு இந்த விளக்கானது வழிவகுக்கும்.

அதேசமயம் ஆடி மாதம் குலதெய்வ வழிபாட்டிற்கும் மிக மிக உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டு குலதெய்வம் அம்மனாக இருந்தால் கட்டாயமாக ஆடி மாதம் உங்கள் வீட்டு வழக்குப்படி குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்ய வேண்டும். அதை மறக்கவே கூடாது.

- Advertisement -

எல்லோர் வீட்டு வாசலிலும் வேப்பிலை வாசமும் எலுமிச்ச பழ வாசமும் அம்மனை வரவழைக்க வேண்டும். அந்த அளவிற்கு எப்போதும் நிலை வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் வேப்பிலையும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்கிறது என்னும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 4 நாட்களுக்கு ஒரு முறை இந்த எலுமிச்சம் பழத்தை மாற்றினால் கூட போதும்.

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யத்தை தரும் வெற்றிலை கொடியில் 5 ரூபாயை இப்படி செய்தால் செல்வம் கொழிக்குமாம்!

ஆடி மாதம் வந்துவிட்டால் எல்லா அம்மன் கோவில்களிலும் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறும். இப்படி ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யக்கூடிய அந்த திருவிழாவுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம். உதாரணத்திற்கு கேழ்வரகு, அரிசி, சர்க்கரை பொங்கல் செய்ய வெல்லம், பாசிப்பருப்பு, நெய், இப்படி உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கோவில்களுக்கு தானம் கொடுப்பது சிறப்பு. முடிந்தால் உங்கள் கையாலேயே கூழ் காய்ச்சி ஏழை எளியவர்களுக்கு இந்த ஆடி மாதம் அன்னதானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -