நாளை 31/7/2021 ஆடி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி யாரை எப்படி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும், செல்வமும் சேரும் தெரியுமா?

vilakku-bairavar
- Advertisement -

நாளை ஆடி மாதம் சனிக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வருகிறது. சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதமும் சேர்ந்து இருப்பதால் மிக மிக விசேஷமான ஒரு நாளாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், பைரவரையும் வழிபட இல்லத்தில் நிம்மதியும், சுபிட்சமும் உண்டாகும் என்பது நியதி. எப்படி நாளை முறையாக வழிபாடு செய்து பலன் பெறுவது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

bairavar

தேய்பிறை அஷ்டமியுடன் கூடிய ஆடி மாதம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாளாகும். இந்நாளில் பைரவருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீர ஈசனை தரிசனம் செய்து அவருக்கு அபிஷேகம் செய்வதற்கு உரிய அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலமும் சிறப்பான பலன்களை பெறலாம். மேலும் பஞ்ச எண்ணெய்களைக் கொண்டு பஞ்ச தீபங்களை ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி செல்வம் செழிக்க நாளை தேய்பிறை அஷ்டமியில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு பஞ்ச தீபத்தை ஏற்றி வழிபட்டு வரலாம். புதிதாக வாங்கிய ஐந்து அகல் விளக்குகள் கொண்டு செல்லுங்கள், அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று வகையான விளக்கு ஏற்றும் எண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும். வேப்ப எண்ணெய், விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான பசுநெய் இந்த ஐந்து எண்ணெய்கள் சேர்ந்தது தான் பஞ்ச தீப எண்ணெய் என்று கூறுவார்கள். இதை தனித்தனியாக ஒவ்வொரு அகல் விளக்குகளில் ஊற்றி தீபமேற்றி சிவ ஸ்தோத்திரங்களை வாசித்து விளக்கு ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.

agal-vilakku

சொத்து தகராறு, நிலத்தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு தேங்காய் மூடியில் நெய் ஊற்றி சிகப்பு நிற இட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். மேலும் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவதற்கு சிறப்பான ஒரு நாளாகவும் கருதப்படுகிறது. வீட்டில் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வைத்து அவருக்கு உரிய மந்திரங்களை ஜெபித்து, தயிர் சாதத்தை நிவேதனம் வைத்து தூப, தீப ஆராதனைகள் காண்பித்து வழிபட்டு வரலாம்.

- Advertisement -

பைரவருக்கும் சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த நிறம் என்றால் அது சிவப்பு ஆகும் எனவே சிவப்பு நிற மலர்கள் கொண்டு இருவருக்கும் அர்ச்சனை செய்து இன்றைய நாளில் வழிபட்டால் சிறப்பான பலன்களை பெற்றுக் கொள்ளலாம். சிவன் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபட்டு வர எத்தகைய தடைகளும் அகன்று சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். மேலும் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும் வாய்ப்புகள் அமையும்.

sivan-temple

பைரவர் சன்னிதிக்குச் சென்று அங்கு செவ்வரளி மலர்களால் மாலை சாற்றி எள் தீபம் அல்லது மிளகு மூட்டை கட்டி மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உங்களை சுற்றி இருக்கும் பகைவர்கள் தொல்லை ஒழியும். எம பயம் என்பது நீங்கும். எதையும் துணிச்சலுடன் முடிவெடுக்கக் கூடிய தைரியம் உண்டாகும். குடும்ப நிம்மதிக்கும், செல்வ செழிப்பை பெறவும் நாளை ஆடி மாத சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானையும், பைரவர் சந்நிதிக்கு சென்று பைரவரையும் வழிபட்டு, வீட்டிற்கு வந்து சிவபார்வதி படம் மற்றும் சொர்ணாகர்ஷன பைரவர் படத்தை வைத்து தயிர் சாதம் நைவேத்தியம் செய்து முறையாக வழிபட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -