நாளை ஆடி தேய்பிறை ஏகாதசி – இவற்றை செய்தால் மிக அற்புதமான பலன் உண்டு

perumal
- Advertisement -

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் இறைவன் புரியும் இறைவன் மனிதர்களால் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். இதில் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, இறுதியில் முக்தி அளிக்கும் தெய்வமான நாராயணனாகிய பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். பெருமாள் வழிபாட்டிற்குரிய சிறந்த தினங்களாக மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வருகின்ற ஏகாதசி தினங்கள் இருக்கின்றன. ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. அந்த காமிக ஏகாதசி விரதம் இருக்கும் முறை குறித்தும் அதனால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

perumal

சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம் ஆடி மாதம் ஆகும். பராசக்தி எனப்படும் அம்மன் தெய்வங்களின் வழிபாட்டிற்குரிய மாதமாக ஆடி மாதம் இருக்கிறது என்றாலும் மற்ற தெய்வங்களையும் இந்த மாதத்தில் வருகின்ற விசேஷ தினங்களில் வழிபடுவதால் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தினம் தான் ஆடி தேய்பிறை ஏகாதசி தினம்.

- Advertisement -

முற்காலத்தில் ஒரு ஊரில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவர் எதிர்பாராத விதத்தில் ஒரு அந்தணரின் மரணத்திற்கு காரணமாகிவிட்டார். இதனால் அந்த செல்வந்தருக்கு மனிதர்களை கொல்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாக அவர் வீடு, செல்வம் அனைத்தையும் இழந்து துறவியாக சென்று காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம், ஒரு துறவியிடம் சென்று தனது துக்கத்தை குறித்து வருந்த, அந்தத் துறவி அந்த செல்வந்தரை ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி தினத்தில் காமிக ஏகாதசி விரதம் இருப்பதன் மகிமையையும், அந்த விரத முறைகளையும் எடுத்துக்கூற, அதன்படியே அந்த செல்வந்தரும் செய்தார். அதன்பிறகு அந்த செல்வந்தரின் கனவில் வந்த பெருமாள் செல்வந்தரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டதாக கூறினார். இதன் பிறகு செல்வந்தர் தான் இழந்த வீடு, குடும்பம், செல்வம் ஆகிய அனைத்தையும் திரும்பப் பெற்றார்.

srirangam perumal

காமிக ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

- Advertisement -

Perumal

பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசி விரத தினத்தன்று நீங்கள் மற்றும் உங்கள் வீட்டிலிருப்பவர்கள் போதை பொருட்கள் உபயோகித்தல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

Perumal

மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

- Advertisement -

உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண அர்ப்பணிப்போடு காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும், பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பசு கன்று தானம் செய்த பலன். குருக்ஷேத்ராவில் கிரஹணம் போது ஸ்னானம் செய்தல், அஸ்வமேத யாகம், காசியில் கங்கா ஸ்னாநம் செய்தல், பத்ரி கேதார யாத்திரை செல்லல், பூமி தானம் செய்தல் ஆகியவற்றால் கிடைக்கும் புண்ணியம் இந்த காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கிடைக்க பெறுகிறார்கள்.

Lord Perumal

காமிக ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு யம பயம் அல்லது மரண பயம் உண்டாகாது. மறுபிறவி இல்லா முக்தி நிலையும் கிடைக்க பெறுகிறார்கள். பித்ரு தோஷங்கள் நீங்குகிறது. செல்வ வளம் மிக்க வாழ்க்கைக்கும், நோய்கள் பிடிக்காத உடல் மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க இந்த காமிக ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது அவசியம் என சான்றோர்கள் அறிவுறுத்துகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த ஆடி தேய்பிறை ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் அன்றைய தினம் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வதால் விரதம் மேற்கொண்ட பலன்களை பெறலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் நிற்கும் நிலை தரிசனம் எப்போது?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi theipirai ekadasi in Tamil. It is also called as Kamika ekadasi in Tamil or Aadi matham in Tamil or Ekadasi vratham palan in Tamil.

- Advertisement -