இன்று ஆனி மாத ஏகாதேசி! இன்றைய தினம், இந்த ஒரு பொருளை, யாருக்கேனும் தானமாக கொடுத்தால், உங்களுக்கு கட்டாயம் மோட்சம் நிச்சயம்!

perumal

மாதம்தோறும் இரண்டு ஏகாதசிகள் வரும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வளர்பிறை ஏகாதேசி. தேய்பிறை ஏகாதேசி. இந்த இரண்டு நாட்களுமே பெருமாளுக்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆனி மாதம் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்று கூறுவார்கள். ஆனி மாதத்தில் வந்திருக்கும் ஏகாதேசி நாள்தான், இன்றைய தினம். இந்த நாளில் பெருமாளை நினைத்து எப்படி வழிபடுவது? எந்த ஒரு பொருளை தானம் செய்தால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, நமக்கு மோட்சம் கிட்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

perumal

இந்த ஏகாதசிக்கு, ஒரு சிலர் பெருமாளை நினைத்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். விரதம் இருக்க முடியாதவர்கள், எப்படி ஏகாதேசி வழிபாட்டை செய்யலாம்? இன்று மாலை 6 மணி அளவில் உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு துளசி இலையால் அலங்காரம் செய்துவிட்டு, உங்களால் முடிந்த நைவேதித்தை படைத்து, முடியாதவர்கள் ஏதேனும் ஒரு பழத்தையாவது, வைத்து தீபம் ஏற்றி, தூப ஆராதனை காட்டி பெருமாளை மனதார வழிபட்டால் போதும். நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

மாதந்தோறும் வரும் ஏகாதேசி அனைத்திற்குமே, விரதம் இருக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. விரதத்தை தவறவிட்டவர்கள் கூட, இந்த ஆனி மாத ஏகாதசியில் விரதம் இருந்தால், விரதம் இல்லாத ஏகாதேசிக்கு சேர்த்து பலனை அடைந்து விடலாம், என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த ஆடி மாத ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு கட்டாயம் மோட்சம் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது.

annadhanam 1

பொதுவாகவே எந்தவொரு விசேஷ தினமாக இருந்தாலும் அன்றைய தினம் தானம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் நிர்ஜல ஏகாதசியான இன்று, தண்ணீரை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. தண்ணீரோடு சேர்த்து நீர் மோர், பழச்சாறு இப்படி தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களை தாகமாக கொடுப்பது நமக்கு புண்ணியத்தை தேடித்தரும்.

- Advertisement -

வசதி உள்ளவர்களாக இருந்தால், தண்ணீர் பஞ்சத்தால் இருக்கும் ஒரு ஊருக்கோ, தண்ணீர் பஞ்சத்தால் கஷ்டப்பட்டு வரும் விவசாயிகளுக்கோ போர் போட்டு கொடுத்தாலும், கிணறு தோண்டி கொடுத்தாலும், அந்தப் புண்ணியம் ஏழேழு தலைமுறைக்கும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாதாரண மக்களுக்கு இது சாத்தியமில்லை. ஆகவே, உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு தண்ணீரோடு சேர்த்து, ஒரு வேளை வயிறார சாப்பாட்டையும் வாங்கி கொடுப்பது கோடி புண்ணியத்தை தேடித்தரும்.

https://dheivegam.com/wp-content/uploads/2017/07/water-life-crop.jpg

தலைமுறை தலைமுறையாக உங்களை தொடர்ந்து வரும் பாவம் நீங்க, உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் பெருக உங்களது பரம்பரையே வளமாக வாழ வேண்டும் என்றால், இன்றைய தினத்தில் வறுமையில் இருப்பவர்களுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கு, உங்களால் இயன்ற உதவியை செய்வது மிகவும் நல்லது. இது கொரோனா காலமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வது மிகவும் நல்லது. இதோடு மட்டுமல்லாமல், ஆதரவு இல்லாத ஏதாவது ஒரு குழந்தையின் வாழ்நாள் முழுவதுமான படிப்பு செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். இந்தப் புண்ணியம் உங்களை மட்டுமல்ல, உங்கள் பரம்பரையை பின்தொடரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில், கடைபிடிக்க வேண்டிய சில ஆன்மிக குறிப்புகள். இவைகளை கடைபிடித்து வந்தால், என்றுமே பணவரவிற்கு குறைவிருக்காது!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ekadashi Today. Ekadashi Viratham. Ekadasi Fasting. Ekadasi July 2020.