ஆனி மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

aani-month
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் இடம் பெயரும் பொழுது அதற்குரிய பலன்கள் மாறுபடுகின்றன. அம்மாட கிரக அமைப்பின்படி 12 ராசிக்காரர்களுக்கும் உண்டாகக்கூடிய அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் பலன்களை பொதுப் பலனாக அறிந்து கொள்ளலாம். சுபகிருது வருடத்தில் வரக்கூடிய இந்த ஆனி மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கும் செவ்வாய் பகவானால் மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாத பிற்பகுதியில் மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் எதிர்பார்த்த விஷயங்களில் நன்மைகளை கொடுக்கக் கூடிய அமைப்பும் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அரசு சார்ந்த பணிகளில் சாதகப் பலன் அமையும். குடும்பத்தில் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். அடிக்கடி உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்வது நல்லது. இதுவரை இருந்து வந்த திருமண தடைகள் அகன்று மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். மாத பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு ஆனி மாதம் சிறப்பான மாதமாக அமைய இருக்கிறது மாத முற்பகுதியில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம் வரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நண்பர்களின் சேர்க்கை அனுகூல பலன்களை கொடுக்கும். உங்களுடைய சாதுரியத்தால் பல விஷயங்களை சாதிக்க இருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை கொண்ட லட்சியங்கள் படிப்படியாக நிறைவேற ஆரம்பிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தல் சிறப்பான பலன் தரும். வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்களுக்கு சாதகப் பலன் அமையும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் இனிய பலன்கள் கிடைக்கப் போகிறது. எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் பெருக இருக்கிறது. பொருளாதார ரீதியான வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன் பகவானால் உங்களுக்கு மறைமுகமான நன்மைகள் நடக்க போகிறது. புதிய விஷயங்களை செய்வதும் முற்போக்கு சிந்தனையும் உங்களுடைய வளர்ச்சியை நிர்ணயிக்கும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களில் அற்புத பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்தவை நடக்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரம் உங்களுக்கு எல்லா வகையிலும் சாதக பலனை கொடுக்க இருக்கிறார்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு ஆனி மாதத்தில் கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைத்தவை யாவும் பரிபூரணமாக நடைபெற இருக்கிறது. புதிய சொத்து சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அமையும். சந்திராஷ்டமம் வரும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. மற்ற நாட்களில் நீங்கள் வழக்கம்போல விடாமுயற்சி செய்தால் செய்த முயற்சிக்கு உரிய பலன்களை பெறலாம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு சரியான துணையைத் தேர்ந்தெடுப்பதில் சாதகப் பலன் கிடைக்கும். பெற்றோர்களுடைய ஆசையை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் துவங்குபவர்கள் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவுகளை எடுப்பது நல்லது.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஆனி மாதம் சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. சுயதொழிலில் அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். உங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சூரியன் சஞ்சாரத்தால் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வசதி வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்து ஏற்றத்தை காணும். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு நினைத்ததை செய்து காட்டும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் குதூகலத்தை குறைவிருக்காது. குடும்பத்துடன் இறை வழிபாடு சார்ந்த சுற்றுலாக்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் தொடர்பான விஷயத்தில் அருமையான பலன்கள் உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் சுயமாக இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதால் இதுவரை இருந்து வந்த கவலைகள் மாறி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். பழைய விஷயங்களை ஒதுக்கி விட்டு புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு கிரக அமைப்புகளின் சஞ்சாரம் சாதகமாக இல்லாமல் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதமாக இருக்கிறது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். விபத்துகள் இழப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரும் என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக்காமல் பேசி தீர்த்துக் கொள்ளவது நல்லது. புதிய வருமானம் பலவழிகளில் இருந்து வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. ஆடம்பரப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கிரக அமைப்புகள் சத்ரு விஷயத்தில் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பகை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற நபர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதையும் செய்யாதீர்கள். வம்பு வழக்கு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமையும் என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை. ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு ஆனி மாதம் நல்ல பலன்களை அளிக்க இருக்கிறது. வீடு வாகனம் பொருட்சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் பெற இருக்கிறீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். வேலை தேடுபவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயத்தில் நினைத்தது நடக்கும். புதிய தொழில் துவங்குவதற்கான பாதைகள் தென்படும். விடாமுயற்சி மற்றும் உத்வேகம் உங்களை மென்மேலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்க செய்யும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் உங்களுக்கு வசதி வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு ஆனி மாதம் சனி பகவான் சஞ்சாரத்தால் அற்புதமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானம் பலவழிகளில் இருந்து வந்து சேரும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் அலட்சியம் இல்லாமல் கவனத்துடன் இருப்பது நல்லது. எலும்பு தேய்மானம் தொடர்பான பிரச்சினைகள் மேலோங்கும். சமயோசித புத்தி மற்றும் பேச்சாற்றல் உங்களை மென்மேலும் உயிர் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்க செய்யும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் வரக்கூடும். கூட்டுத்தொழில் புரிபவர்கள் மற்றும் சமூக விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதக பலன் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் காணலாம்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களை தர இருக்கிறது. உங்களுடைய அறிவாற்றல் சிறப்பாக செயல்படும். தேவையற்ற மன உளைச்சலில் இருந்து மீள இருக்கிறீர்கள். குழப்பத்திற்கு பெரியவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது. கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். சனி பகவான் சஞ்சாரத்தால் உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணவரவு செழிப்பாக இருக்க போகிறது. ராசி அதிபதி உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் சமூகம் சார்ந்த விஷயங்களில் சாதகப் பலனைப் பெறலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஆனி மாதம் நல்ல பலன்களைக் கொடுக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்க போகிறது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கல்வி தொடர்பான விஷயத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். உயர்கல்வி தொடர்பான விஷயத்தில் சாதக பலன் பெறுவீர்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சுபகாரியங்களில் நல்ல ஒரு சுப பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய கணவன் அல்லது மனைவி சார்ந்த வழிகளில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் காலதாமதம் செய்யாமல் விரைவான முடிவு எடுப்பது நல்லது. கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. மீண்டும அவ்வாய்ப்புகள் அமையாமல் போகலாம்.

- Advertisement -