மறந்தும் இனி இந்த 7 ஆன்மீக பாவங்களை செய்து விடாதீர்கள்! பலருக்கு தெரியாத ஆன்மீக ரகசியங்கள்!

temple-prayer
- Advertisement -

சில விஷயங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது தீர்ந்து போகிறது. ஆனால் சில விஷயங்கள் கோவிலுக்கு சென்றால் தான் நம்மை ஆட்கொள்ளவும் துவங்குகிறது. ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிராக இருந்து வருகிறது. கல்லை கல்லாக காண்பவர்களுக்கு கல்லாகவும், கடவுளாக காண்பவர்களுக்கு கடவுள் ஆகவும் தெரிகிறது. அது போல ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்ப ஆன்மீகம் தோற்றமளித்தாலும், சில விஷயங்களை ஏன்? எதற்கு? என்பதே தெரியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய ஆன்மீக விஷயங்களில் இந்த 7 தவறுகளை மறந்தும் செய்து விடாதீர்கள். அது என்ன? என்பதை இனி பார்ப்போம்.

குறிப்பு 1:
சிவனுக்கு ரொம்பவும் விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது. தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும் உடல் நலனும் தேறிடுமாம். அத்தகைய இந்த திருநீற்றை கண்ணாடியை பார்த்து கொண்டே இட்டுக் கொள்ளக் கூடாது. அனைத்தையும் துறந்த சாம்பல் என்பதால் அதை அழகாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று இவ்வாறு கூறப்படுகிறது.

- Advertisement -

குறிப்பு 2:
விநாயகர் கோவிலுக்கு செல்பவர்கள் விநாயகருடைய சன்னிதியை ஒரு முறை வலம் வந்தால் போதும். மற்ற தெய்வங்களுக்கு வலம் வருவது போல, ஒன்பது முறை, மூன்று முறை வலம் வர வேண்டிய அவசியம் இல்லை. அரச மரத்தடி விநாயகரை கணக்கில்லாமல் வலம் வரலாம் அல்லது 108 முறை வலம் வரலாம்.

குறிப்பு 3:
சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் மூன்று முறை வலம் வர வேண்டும். முக்கண் உள்ள சிவபெருமானை மும்முறை வலம் வருவதன் மூலம், அவருடைய அருளை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும் என்பது நம்பிக்கை. எனவே சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் மூன்று முறை கருவறையை சுற்றி வலம் வந்து வணங்குங்கள்.

- Advertisement -

குறிப்பு 4:
பெருமாள் கோவிலுக்கு துளசி கொண்டு செல்பவர்கள் அதை அலசி எடுத்துச் செல்லக்கூடாது. துளசி என்பது புனிதமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. எனவே அதன் தெய்வீகத் தன்மை மாறாமல் இருக்க, தண்ணீரில் அலசாமல் அப்படியே பறித்து எடுத்துச் செல்ல வேண்டும்.

குறிப்பு 5:
தன்னைத் தானே சுற்றிக் கொண்டு கோவிலில் நின்று வழிபடக் கூடாது. கடவுளை சுற்றி வலம் வர வேண்டுமே தவிர, ஒரு மனிதன் தன்னை தானே சுற்றிக் கொண்டு வலம் வரும் பரிகாரத்தை ஒருபோதும் தவறாக செய்யக் கூடாது. இதை யாராவது செய்ய சொன்னாலும் செய்யாதீர்கள்.

குறிப்பு 6:
சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது கன்னத்தில் சிவசிவ என்று அடித்துக் கொள்வதை பார்த்திருப்போம். இப்படி கன்னத்தில் போட்டுக் கொள்வதை விஷ்ணு ஆலயங்களில் செய்யக்கூடாது. ஹரியும், சிவனும் ஒன்று என்றாலும் வணங்கும் முறை வெவ்வேறாக இருக்கிறது.

குறிப்பு 7:
சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் அங்கிருந்து எந்த பொருளையும் எடுத்துக் கொண்டு வரக்கூடாது என்று கூறுவார்கள். இது தவறான நம்பிக்கையாகும். சிவன் சொத்து குலநாசம் என்பது சிவனுடைய ஆலய சொத்தை குறிப்பது ஆகும். அங்கு கொடுக்கப்படும் விபூதி போன்ற பொருட்களை தாராளமாக எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் சிவன் கோயிலுக்கு சென்று வருபவர் கண்டிப்பாக காணிக்கை செலுத்தி விட்டு தான் வர வேண்டும்.

- Advertisement -