ஆவணி மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

aavani
- Advertisement -

ஆவணி மாதம் சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. அனைத்து விதமான சுப காரியங்களும் மேற்கொள்வதற்கு சிறந்த மாதமாகவும் இது விளங்குகிறது. மேலும் விநாயகர், கிருஷ்ணர் போன்றவர்களின் அவதாரங்களும் இந்த ஆவணி மாதத்தில் தான் நிகழ்ந்தது. அப்படிப்பட்ட இந்த ஆவணி மாதத்தில் 12 ராசிகளுக்குரிய பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் பாருங்கள்.

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் அனுகூலமான மாதமாக திகழப்போகிறது. செய்யும் தொழிலிலும், வியாபாரமும் லாபகரமாக நடைபெறும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு சண்டைகள் ஏற்படும். பழகக்கூடிய நட்பு வட்டாரத்தில் கவனமாக இருந்தால் தேவையில்லாத சண்டை சச்சரவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த மாதம் உடலில் ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த மாதத்தில் வரும் புதன்கிழமை அன்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் இந்த மாதம் மேலும் வெற்றிகரமான மாதமாக அமையும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பயணங்களால் பல அனுகூலங்கள் நடைபெறக்கூடிய மாதமாக திகழப்போகிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்திலும், பிற இடங்களிலும் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது பதற்றம் அற்ற சூழ்நிலையில் மேற்கொண்டால் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். இந்த மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் வரக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வெற்றிகரமான மாதமாக அமையப் போகிறது. நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அனைத்திலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் மேலும் பல நல்ல காரியங்கள் நடைபெறும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் உத்தியோகத்தில் நல்ல செய்தியை தரக்கூடிய மாதமாக திகழப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு பதிவு உயர்வும், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல தொழிலும் அமையும். மேலும் வியாபாரத்தில் பல லாபங்களை ஈட்டக்கூடிய அனுகூலமான நுணுக்கங்களை கண்டறிந்து செயல்படுத்துவீர்கள். பொது இடங்களில் தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாக்குவாதத்தில் ஈடுபடாமல் சுமுகமாக செல்ல வேண்டும். மேலும் பல வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த மாதத்தில் வரக்கூடிய புதன்கிழமை குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மாதமாக திகழப்போகிறது. தங்களை சுற்றி இருக்கக்கூடிய நபர்களை நம்பாமல் உங்களை மட்டுமே நம்பி முடிவுகளை எடுப்பது மிகவும் சாலச் சிறந்ததாக இருக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உத்தியோகத்திலும், வேலையிலும் யாரையும் நம்பி நீங்கள் செய்ய வேண்டிய எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். அதனால் உங்களுக்கு அவ பெயரே வரும். உங்களுக்கு ஏற்படக்கூடிய சோதனைகளை சாதனையாக மாற்றுவதற்கு இந்த மாதம் வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபடலாம்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களே இந்த ஆவணி மாதம் உங்களுக்கு தொழில் சிறப்பாக நடக்கக்கூடிய மாதமாக திகழப்போகிறது. தேவையற்ற வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக புதிதாக கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். சுப காரியங்களை செய்வதன் மூலம் வீண் விரயங்கள் தவிர்க்கப்படும். வேலை சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். வாகனம் ஓட்டும் பொழுது கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு கவனத்துடன் ஊட்ட வேண்டும். வீண் விரயத்தை மாற்றுவதற்கு இந்த மாதத்தில் வரக்கூடிய செவ்வாய் கிழமை அன்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடலாம்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் நன்மைகளும், நற்செய்திகளும் தரக்கூடிய மாதமாக திகழப்போகிறது. தொழிலில் ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் விலகி லாபம் தரக்கூடிய அற்புதமான ஆகும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். நம்பிக்கையுடன் செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும் அந்த செயலில் வெற்றியை அடைவீர்கள். மேலும் நன்மைகளை பெறுவதற்கு இந்த மாதத்தில் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் நல்ல மாற்றத்தை தரக்கூடிய மாதமாக திகழப்போகிறது. செய்யும் தொழில் சாதகமான நிலையில் செயல்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, தொழில், வேலை போன்ற விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். கவனம் தேவை. சட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தையும், தொழிலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்வீர்கள். அதனால் உங்களுக்கு பேரும், புகழும் கிட்டும். இன்னும் பல நன்மைகள் கிடைக்க இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வழிபட வேண்டும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் புதிய முயற்சிகளை மேற்கொள்ள கூடிய அற்புதமான திகழப் போகிறது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து, அன்போடு நடந்து கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு கோபத்தை தவிர்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். வாழ்க்கையின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தினருடன் ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தடங்கலற்ற வெற்றிகளைப் பெறுவதற்கு இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கக்கூடிய மாதமாக திகழப் போகிறது. பிறருக்காக பேச போய் அந்த பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிம்மதியற்ற வாழ்க்கை அமைந்து விட்டது என்று வருத்தப்படுவீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். பண தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதால் பணத்தை உங்களிடம் வைத்துக் கொள்ளாமல் உங்கள் குடும்பத்தாரிடம் கொடுத்து வையுங்கள். சங்கடங்களை தீர்ப்பதற்கு தயிர் சாதத்தை தானமாக வழங்கலாம். மேலும் வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் செல்வ செழிப்போடு இருக்கக்கூடிய மாதமாக அமையப்போகிறது. இதுவரை உங்களை அவமதித்தவர்கள் அனைவரும் உங்களை தேடிவந்து பாராட்டி பேசுவார்கள். புதிதாக வண்டி, வாகனம், வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவீர்கள். பிறரை நம்பி ரகசியங்களை சொல்வதில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவருடைய பிரச்சினைகளில் தலையிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். செவ்வாய்க்கிழமை அன்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் இன்னும் பல வெற்றிகளை அடையலாம்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வெற்றி வந்து கதவை தட்டும் மாதமாக திகழப்போகிறது. எடுத்த முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே அமையும். இதுவரை உங்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிரிகள் அனைவரும் விலகுவார்கள். பாச கரம் நீட்டுவார்கள். தொழில் மற்றும் இடமாற்றம் உங்களுக்கு நல்ல அனுகூலத்தை தரும். நயவஞ்சகமாக பேசுபவர்களிடமிருந்து விலகி இருப்பது உங்கள் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்கும். வெள்ளிக்கிழமை அன்று குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -