டிபனுக்கு எதுவும் இல்லைனாலும், வெறும் பாசிப் பருப்பு மட்டும் இருந்தா போதும் ரொம்பவே சுவையான இந்த அடை தோசை ரெடி பண்ணிடலாம். நல்ல சாப்டான மொறு மொறு பருப்பு அடை ரெசிபி.

dal adai recipe
- Advertisement -

அடைகளிலே எத்தனையோ வகைகள் உண்டு. அதில் இந்த பாசிப்பருப்பு அடை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதுடன் சுவையும் சற்று கூடுதலாகவே இருக்கும். ஒரு சிலருக்கு அடையில் கடலைப்பருப்பு சேர்த்து செய்தால் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அது போன்றவர்கள் இந்த பாசிப் பருப்பு அடையை செய்து சாப்பிடலாம். சுவையான அது நேரத்தில் ஹெல்தியான ஒரு அடையை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த அடை செய்வதற்கு முதலில் ஒரு கப் பாசிப் பருப்பை தண்ணீர் விட்டு அலசி இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு வெங்காயம் ஒரு கேரட் இரண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான வேறு காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாசிப் பருப்பு தண்ணீரில் இல்லாமல் சுத்தமாக வடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஐந்து காய்ந்த மிளகாய், நான்கு பல் பூண்டு ஒரு சிறிய துண்டு இஞ்சி, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதில் வெறும் பாசிப் பருப்பை மட்டும் சேர்த்து அரைப்பதால் இது பேஸ்ட் பதத்திற்கு தான் அரைப்படும்.

அரைத்த பாசிப் பருப்பை ஒரு பவுலில் சேர்த்த பிறகு அரிந்து வைத்த வெங்காயம், கேரட் அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். உங்களிடம் இட்லி மாவு இருந்தால் அதில் கால் கப் இந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இட்லி மாவு இல்லை என்றால் பச்சரிசி மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் கரைத்து வைத்த அடை மாவை எடுத்து ஊற்றி இதற்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அடை ஒரு புறம் சிவந்து வந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு எடுத்துக் விடுங்கள். மீதம் இருக்கும் மாவையும் இதே போல சுட்டு எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பருப்பு அடை தோசை தயார்.

இதையும் படிக்கலாமே: சக்கரவள்ளி கிழங்கு ஸ்டப்பிங் பரோட்டா

இதற்கு தேங்காய் சட்னி, அவியல் வைத்து சாப்பிடலாம். அதை விட காரசாரமாக சட்னி வகைகள் வைத்து சாப்பிடும் போது இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் போது இத்துடன் வெல்லம் வைத்துக் கூட குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -