அடர்த்தியாக முடி வளர, தீயாய் வேலை செய்யும் சூப்பரான ஹேர் ஸ்பிரே இது. செலவே இல்லாத செம ஐடியாங்க. மிஸ் பண்ணாதீங்க.

hair8
- Advertisement -

நிறைய செலவு செய்ய வேண்டாம். மூன்றே மாதத்தில் முடி வளர்ச்சியை பெற பின் சொல்லக்கூடிய இரண்டு குறிப்புகளையும் நீங்கள் பின்பற்றி வர வேண்டும். ஒன்று ஹேர் ஸ்பிரே. இன்னொன்று உள்ளுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய ஹெல்த் ட்ரிங்க். இந்த இரண்டு குறிப்புகளையும் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்களுக்கு மூன்றே மாதத்தில் மூன்று மடங்கு அடர்த்தியாக முடி வளர்வது நிச்சயம். அதேசமயம் கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனை உடனே நிற்கும். இதில் போனசாக உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் எடையும் குறையும் என்றால் பாருங்கள். அந்த அளவிற்கு பயனுள்ள குறிப்புகள் இதோ உங்களுக்காக.

முதலில் ஹேர் ஸ்ப்ரேவை எப்படி தயார் செய்வது என்று பார்த்து விடுவோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய வெங்காயத்தை தோள் நீக்கி, ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ள வேண்டும். 1 டேபிள் ஸ்பூன் கிராம்பை போட்டுக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் இந்த இரண்டு பொருட்களையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கோங்க.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/4 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடுங்க. அதில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். இந்த சாறு அனைத்தும், அந்த தண்ணீரில் இறங்கி தண்ணீர் நிறம் மாறி, பாதி சுண்டி வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கணும். பிரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் இது கெட்டுப் போகாது.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த ஹேர் ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். தொடர்ந்து இதையே மூன்று மாதம் பின்பற்றி வாங்க. இதனுடன் பின் சொல்ல கூடிய இந்த ஹெல்த் ட்ரிங்கையும் குடிங்க.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். இலசாக இருக்கும் கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, தயிர் 3 டேபிள்ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், இஞ்சி 1/2 இன்ச் தோல் சீவுவது, உப்பு தேவையான அளவு, போட்டு, 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இதை நன்றாக அரைத்து அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி குடித்து விட வேண்டும். இதை எப்போது வேண்டும் என்றாலும் குடிக்கலாம். காலையில் டீ, காபிக்கு பதில் குடித்தால் ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்கள் நீண்ட நாள் முடி உதிர்வை தடுத்து புதிய முடிகள் விரைவில் வளர, இதோ கெமிக்கல் இல்லாத இயற்கையான பேக்.

இதில் நீங்கள் தயிருக்கு பதிலாக நீர் மோரை கூட சேர்த்து அரைத்துக் குடிக்கலாம். நீர்மோர் ஊற்றும்போது தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதையம் வாரத்தில் மூன்று நாட்கள் குடித்து வாருங்கள். வேறு என்ன வேண்டும். வேற ஹேர் பேக் அல்லது ரொம்ப காஸ்ட்லியான எண்ணெய் என்று படுத்தவே வேண்டாம். சூப்பரான தலைமுடி வளர்ச்சியை காணலாம். வெறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தாலே போதும். நார்மலாக நீங்கள் பயன்படுத்தும் சீயக்காய் அல்லது ஷாம்புவை தலைக்கு போட்டுக் கொள்ளுங்கள். மூன்று மாதத்தில் ரிசல்ட் உங்கள் முடி சொல்லும்.

- Advertisement -