நீங்க தலைக்கு குளிக்க யூஸ் பண்ற ஷாம்பு கூட இந்த ரெண்டு பொருளை மட்டும் கலந்து யூஸ் பண்ணீங்கன்னா உங்க முடியோட அடர்த்தி பல மடங்கு அதிகமாகி பட்டுப் போலவும், மிருதுவாகவும் உங்க முடி இருக்கும்.

hair wash
- Advertisement -

அடர்த்தியான அழகான பளபளக்கும் கூந்தலை பெற வேண்டும் என்றுதான் ஆண்களும் பெண்களும் ஆசைப்படுகிறார்கள். முடி உதிர்தல் என்ற பிரச்சினை ஏற்பட்டவுடன் அவர்கள் மனமே உடைந்து விடும். இதை சரி செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், அந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் தான் நல்ல தீர்வு என்பது கிடைக்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் மிகவும் எளிமையாக நாம் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவில் எந்த பொருட்களை கலந்தால் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாகும் என்றும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என்றும் தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நாம் வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு குளிப்போம். அவ்வாறு தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு, சீவக்காய் போன்றவற்றை உபயோகப்படுத்துவோம். இதில் பெரும்பாலானோர் ஷாம்புவை தான் உபயோகப்படுத்துவார்கள். அவ்வாறு ஷாம்புவை உபயோகப்படுத்தும் பொழுது சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் ஷாம்புவால் நமக்கு முடி உதிர்வு என்பது ஏற்படாது.

- Advertisement -

அவற்றில் ஒன்றை இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஷாம்பு போடுங்கள். நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்துகிறீர்களோ அந்த ஷாம்பை பயன்படுத்துங்கள். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணையை சேருங்கள். அடுத்ததாக இதோடு நாம் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஏதாவது ஒரு காபி தூளை சேர்க்க வேண்டும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும்.

இதில் நாம் சேர்த்திருக்கும் விளக்கெண்ணை நம் முன்னோர்கள் முதற்கொண்டு அனைவரும் பயன்படுத்தியது. இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால், சூட்டினால் ஏற்படக்கூடிய முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. மேலும் இந்த எண்ணெயை நாம் பயன்படுத்துவதன் மூலம் தலைக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது. அதனால் முடியின் வேர்க்கால்கள் வலுவாக இருக்கும். இதில் இருக்கும் ஒமேகா 6 கொழுப்பு கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும் இளநரை பிரச்சினையை தவிர்த்து முடியை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

- Advertisement -

காபித்தூள் முடி சேதத்தை தடுத்து வளர்ச்சியை தூண்டுகிறது. முடியின் வேர்க்கால்களை வலுப்பெறச் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலிமையாகவும் மாறும். ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. முடியின் கருமை நிறத்தை பாதுகாக்க உதவுகிறது. பளபளப்பாகவும், அதே நேரத்தில் பட்டுப்போல மிளிரவும் உதவி செய்கிறது.

இதையும் படிக்கலாமே: வெறும் ஒரு உருளைக்கிழங்கு இருந்தால் போதும். 20 நிமிடத்தில் சூப்பரான ஃபேசியல் முடிந்துவிடும். பெரிய பெரிய பார்ட்டிக்கு போவதற்கு கூட இனிமே பியூட்டி பார்லருக்கு போக வேண்டாம்.

அனைவர் வீட்டிலும் இருக்கக்கூடிய இந்த எளிமையான இரண்டு பொருட்களை தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு உடன் பயன்படுத்தி அடர்த்தியான, பளபளப்பான, மிருதுவான கூந்தலை அனைவரும் பெறலாம்.

- Advertisement -