பெண்கள் தலையில் பூ வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம் என்னவென்று தெரியுமா? தலையில் கொஞ்சம் பூ வைத்தாலும் போதும் உங்கள் தரிதிரம் உங்களை விட்டு ஓடிவிடும்

flower
- Advertisement -

உலகில் உள்ள பலரும் இறைவனை வேண்டும் பொழுது தனக்கு கிடைத்திருக்கும் நல்ல வாழ்க்கைக்காக நன்றி சொல்லாமல் ஏன் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை? எனக்கு மட்டும் கொடுப்பனை கிடையாதா? எனக்கு ஏன் இந்த கஷ்டமான வாழ்க்கை? இவ்வாறெல்லாம் குறைகூறி இறைவனிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இவ்வாறு நாம் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடமே பதில் இருக்கிறது. ஆனால் யாரும் அதனை உணருவதில்லை. நம்முடைய மூதாதையர்கள் அனைவரும் சிறு சிறு விஷயங்கள் மூலம் நமக்கான அதிர்ஷ்டங்களை நம்மிடம் சேர்ப்பதற்கு பல வழி முறைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அவற்றையெல்லாம் துச்சமாக எண்ணி இப்பொழுது யாரும் பின்பற்றுவதாக இல்லை. இவ்வாறு தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு இறைவனை குறை கூறி என்ன ஆகப்போகிறது. வாருங்கள் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு திருத்துக் கொள்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

praying-god.

மனித உலகில் ஆண், பெண் என்ற இரு பாலினம் தான் இருக்கின்றது. இந்த இருவருமே ஒருவருக்கொருவர் சமமானவர்கள் தான். அதிலும் பெண்கள் கடவுளின் உருவமாக பார்க்கப்படுகிறார்கள். எந்த ஒரு புனிதமான காரியமாக இருந்தாலும் அதை செய்வதற்காக பெண்களை தான் முதலில் அழைக்கின்றோம். ஒவ்வொரு வீட்டின் அதிர்ஷ்டமும், லட்சுமி கடாட்சமும் அந்த வீட்டில் உள்ள பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

- Advertisement -

இவ்வாறு வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அந்த வீட்டிற்கான ஐஸ்வர்யத்தை தங்கள் குடும்பத்திற்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணியாக திகழ்கிறார்கள். அதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தது என்னவென்றால் பெண்கள் கை நிறைய வளையல்கள் அணிந்து, தலை நிறைய பூ வைத்து, பொட்டு வைத்து மகாலட்சுமி போல் இருப்பது தான். இவை அனைத்திற்கும் பின்னணியில் தனித்தனியாக ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன.

women2

அவற்றில் மிகவும் முக்கியமானது தலை நிறைய பூ வைப்பது தான். இப்பொழுது உள்ள பெண்களுக்கு பூவின் மகிமை பற்றி பெரியதாக தெரியவில்லை. நாகரிகத்தின் வாயிலாக பூவினை ஒதுக்கி வருகிறார்கள். பூ வைத்துக் கொள் என்று சொன்னாலே பூ வைக்க நான் என்ன பட்டிக்காடா? எனும் கேள்விதான் அனைத்து பெண்களிடத்திலிருந்தும் வருகிறது. தனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்று தோற்றமளிக்கும் இன்றைய பெண்களுக்கு பூவைப்பதன் அருமை தெரியாமல் இருப்பது மிகவும் கவலைக்கிடமானதாகத் தான் இருக்கிறது.

- Advertisement -

கடவுள் ஒருவருக்கு மட்டுமே உரிமையான, உகந்ததுமான மலர்களை தாங்களும் தலையில் வைக்கக்கூடிய பெருமை பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்கலாம் எனும் பழமொழியே பூவின் பெருமையை சொல்வதற்கான சிறந்த உதாரணமாகும். தங்க நகைகளுக்கு இணையாக பூக்களை கூறுகின்றனர்.

flowers

இதற்கு உதாரணமாக பல புராணக் கதைகள் இருக்கின்றன. அவ்வாறு இந்திரலோகத்தின் தேவதையான இந்திராணி தேவிக்கு பல விதமான ஆபரண நகைகள், கணக்கிலடங்காத சொத்து மதிப்புகள் இருந்தாலும் அவர்களிடம் ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் சிறிய அளவு மலர்களை மட்டும் கொடுத்தாலே போதும் இந்திராணி தேவியின் அன்பை வென்று விடலாம்.

அவ்வாறு கிருஷ்ண பரமாத்மா கதையில் கிருஷ்ணரின் எடைக்கு எடை தங்கம் கொடுக்க வேண்டும் என்ற பரிகாரத்தின் பொழுது, எவ்வளவு தங்கத்தை வைத்தாலும் அவரின் எடைக்கு ஈடாகாது. அப்போது ராதா தேவி தனது கூந்தலில் இருக்கும் ஒரு சிறு மலரை அந்த எடையின் மீது வைத்ததும் சட்டென்று அவரின் எடை குறைந்து பரிகாரம் நிறைவடையும். இவ்வாறு பூவிர்க்கு லட்சுமி கடாட்சத்தையும், ஐசுவரியத்தையும் கொண்டுவரும் அபரிமிதமான சக்தி இருக்கிறது.

women8

எனவே வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தவறாமல் கூந்தலில் கொஞ்சமாவது பூ வைக்க வேண்டும். இது ஒன்றை மட்டும் நாம் செய்தாலே நமது வீடு செல்வ செழிப்புடன் மகிழ்ச்சி ததும்ப ஸ்வர்ண கடாட்சத்துடன் இருக்கும்.

- Advertisement -