பல ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் அகத்திய முனிவர் சொன்ன அற்புத வழிமுறைகள்

agathiyar
- Advertisement -

துன்பத்தில் இருப்பவனையும், வாழ்க்கையில் பெரும் கஷ்டம் அனுபவிப்பவனையும் பார்த்து பலரும் சொல்வது நீ செய்த பாவத்தின் வினைகளே உனக்கு பலனாக கிடைத்திருக்கிறது என்று. அதிலும் பெரும் துயரத்தில் நாம் ஆழ்ந்து இருப்பதற்கு காரணம் பித்ருக்களின் சாபம் ஆகும். நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு நமது கர்ம வினைகளும் அமைகின்றன. இவ்வாறு செய்த பாவத்திற்கு நமது ஆன்மா அனுபவிக்கின்ற வலியே கர்மா எனப்படுகின்றது. இவ்வாறான பாவங்களிலிருந்தும், கர்ம வினைகளில் இருந்து தப்பிக்க அகத்தியர் சொன்ன ஒரு சிறந்த பரிகாரம் இருக்கிறது இவ்வாறான கர்மவினை பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

karma

துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் நம்மை ஆட்கொள்ளும். அவற்றை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் பித்ரு சாபத்திலிருந்து விடுபடவவோ அல்லது அதன் வீரியத்தை குறைத்து கொள்ளவவோ முடியும். மாதந்தோறும் அமாவாசை அன்று விரதமிருந்து பூஜை செய்வது முன்னோர்களின் ஆசீர்வாதத்தை அடைவதற்காக தான். ஆனால் பூர்வ ஜென்ம பாவத்தை நீக்குவதற்கு என்று அகத்திய முனிவர் சொன்ன அற்புத பரிகாரம் இருக்கிறது.

- Advertisement -

மீன்களுக்கு உணவு அளிப்பது என்பது நமது பாவத்திற்கான பரிகாரமாக இருக்கிறது. கட்டாயம் மீன்களுக்கு எந்த அளவு உணவு அளிக்கின்றோம் அந்த அளவிற்கு நமக்கு பாவ விமோசனம் கிடைக்கிறது. இதற்காகத்தான் கோவில்கள் அனைத்திலும் குளங்கள் கட்டி அதில் மீன் வளர்த்து வருவார்கள். அந்த மீன்களுக்கு பொறி வாங்கி உணவாக அளிப்பது என்பதை காலம் காலமாக வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.

fish

ஒரு மனிதன் தான் செய்த ஒரு பாவத்திற்கான பரிகாரத்தை உடனே செய்துவிட வேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அந்தப் பாவத்தின் பலன் நாளுக்குநாள் அவனுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் அதுமட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் அவனையே அறியாமல் அடுத்தடுத்து பாவம் செய்ய வைக்கும்.

- Advertisement -

இவ்வாறு மனிதனின் பாவ கணக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆனால் ஏதாவது ஒரு சில நல்ல காரியங்களை செய்துவிட்டு நான் அனைவருக்கும் நன்மையே செய்கிறேன் ஆனால் எனக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். நாம் செய்யும் நன்மையை விட பாவங்கள் அதிகமாக இருப்பின் நம்மை துன்பம் மட்டுமே சூழ்ந்திருக்கும்.

dhanam

இந்த பாவங்களில் இருந்து நாம் விடுபட மீன் போன்ற சிறு சிறு உயிரினங்களுக்கு உணவு அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தானம் கொடுப்பது என்பது பாவம் தீர்ப்பதற்கு சிறந்த வழியாகும். தானம் கொடுக்க நேரம் காலம் என்று எதுவும் தேவை இல்லை. ஏகாதேசி நாளை தவிர்த்து வருடத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் தானம் செய்யலாம். இவ்வாறு நீங்கள் தானம் செய்வது அதிகரித்துக் கொண்டே இருக்க உங்களின் பாவக்கணக்கு குறைந்து கொண்டே வரும்.

ant1

எனவே முடிந்தவரை ஏழை, எளியவர்களுக்கும், விலங்கினங்களுக்கும், சிறு சிறு உயிரினங்களும், நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும் நம்மால் இயன்ற உதவிகளையயோ, பொருட்களையோ தானமாக கொடுத்திடுங்கள். தானம் கொடுப்பதற்கு என்று அளவு முக்கியமில்லை. நமது மனதைப் பொறுத்தே நாம் செய்யும் தானத்தின் பலன் நமக்கு கிடைக்கிறது. இவ்வாறு தானம் செய்து வரும் பொழுது நமது பாவத்தின் வீரியம் குறைந்து நமது கர்ம வினைகளிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

- Advertisement -