இன்று அட்சய திருதியை நாளில் என்ன செய்தால் அதிஷ்டம் பெருகும்

atchayathiruthiyai
- Advertisement -

வருடத்தில் எத்தனையோ நாட்கள் வந்தாலும் சில நாட்கள் மட்டுமே அதிகப்படியான சிறப்பை பெறுகிறது. அதில் ஒன்று தான் அக்ஷய திருதியை என்னும் நாள். இந்த நன்னாளில் நாம் எதை துவங்கினாலும் அந்த செயல் மென்மேலும் வளர்ச்சி அடையும். இது மகாலட்சுமிக்கு உரிய நாளாதலால் மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜைகளை செய்வது நமக்கு நல்லதொரு முன்னேற்றத்தையும் செல்வத்தையும் தரும்.

Goddess Lakshmi

அக்சய திருதியை நாளில் நமக்கு தெரிந்த கலைகள் பலவற்றை பிறருக்கு கற்றுக்கொடுப்பது நல்லது. இதன் மூலம் நமது கலை வளரும். அட்சய திருதியை நாளில் லட்சுமி நாராயணர் வழிப்பாடு நமக்கு மேன்மையை தரும். கங்கா தேவி அட்சய திருதியை நாளில் தான் இந்த பூமியை முதன் முதலில் தொட்டார். ஆகையால் அட்சய திருதியை நாளில் கங்கா ஸ்னானம் செய்வது நல்லது. கங்கை இருக்கும் இடம் வரை செல்ல இயலாதவர்கள் கங்கையை மனதார போற்றி வணங்கி காலையில் குளிக்கலாம்.

- Advertisement -

தானத்திற்கு அட்சய திருதியை நாள் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஆட்சியை திருதியை நாளில் தானம் செய்தால் பன்மடங்கு பலன்களை நம்மால் பெற இயலும். தானத்தில் சிறந்ததாக கருதப்படும் அன்னதானம் வழங்கினால் குறைவற்ற செல்வதை பெற இயலும். சுமங்கலி பெண்களுக்கு வலையில், புத்தாடை போன்றவற்றை தானம் செய்தால் தீராத பிரச்சனைகளும் தீரும். இப்படி நாம் செய்யும் தானங்கள் அனைத்திற்கும் பிக பெரிய பலன்களை அட்சய திருதியை நாளில் அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே:
அஷ்ட லட்சுமி மந்திரம்

அட்சய திருதியை நாளுக்கென்று பல தனி சிறப்புக்கள் உண்டு. நான்கு யுகங்களில் ஒன்றாக கிருதயுகம் பிறந்தது அட்சய திருதியை நாளில் தான். ஐஸ்வர்ய நட்சுமி அவதரித்தது அட்சய திருதியை நாளில் தான் . வியாசர் மகாபாரதத்தை எழுத துவங்கியது அட்சய திருதியை நாளில் தான். இப்படி இந்த நாளுக்கு இன்னும் பல சிறப்புக்கள் உண்டு.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:
- Advertisement -