பார்வதிக்கு சிவபெருமான் மரண ரகசியத்தை சொன்ன இடம் பற்றி தெரியுமா ?

Sivan Parvathi
- Advertisement -

உண்மையான பக்தியுடன் தன்னை வழிபடும் மனிதர் உலகில் எங்கிருந்தாலும், அவரை நோக்கி இறைவன் வந்துவிடுவார். அதே போல் தனது பக்தியின் தீவிர தன்மை காரணமாக இறைவன் குடிகொண்டிருக்கும் கோவில் எங்கிருந்தாலும், அவரை அங்கேயே சென்று வழிபடுவது பக்தர்களின் செயலாக உள்ளது. அப்படி பல கடினமான சவால்களை கடந்து இறைவனை பனிலிங்க வடிவில் தரிசிக்கும் “அமர்நாத் புனித யாத்திரையும்” ஒன்று. அதை பற்றி மேலும் சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.

Amarnath Pani lingam

இந்த அமர்நாத் கோவில் இயற்கை எழில் மிகுந்த, பனிபடர்ந்த இமய மலைச்சிகரங்களைக் கொண்ட “ஜம்மு காஷ்மீர்” மாநிலத்தின் “பஹல்காம்” பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. சிவனை முழுமுதல் இறைவனாக ஏற்று வழிபடும் இந்து மதத்தின் சைவ பிரிவை சார்ந்த அனைவரும், தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க விரும்பும்காட்சி அமர்நாத் பனிமலையில் இயற்கையிலேயே உருவாகும் பனி லிங்கத்தின் தரிசனம்.

- Advertisement -

“அமரர்” என்ற வார்த்தை பொதுவாக சொர்க்கத்தில் வாழ்பவரை குறிக்கும் ஒரு சமஸ்கிருத சொல்லாகும். இந்த பூமியிலேயே சொர்க்கத்தை போன்ற ஒரு இடத்தில் இக்கோவில் அமைந்திருப்பதால் இது “அமர்நாத்” கோவில் என்று அழைக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

சிவ புராணத்தின் படி இங்கு தான் பார்வதி தேவிக்கு, வாழ்க்கை மற்றும் மரணத்தின் ரகசியங்களை சிவ பெருமான் உபதேசித்ததாக கருதப்படுகிறது. இந்த அமர்நாத் பனிலிங்கத்தின் தரிசனத்தை முதலில் பெற்று, இக்கோவிலை உலக மக்கள் அறிந்து கொள்ளுமாறு செய்தவர் “பிருகு முனிவர்” ஆவார். மேலும் 11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட “சூரியமதி” என்ற அரசி இந்த அமர்நாத் கோவிலை சீரமைத்தாள். மேலும் இக்கோவிலுக்கு பான லிங்கங்கள் மற்றும் திரிசூலத்தையும் தானமளித்தாள்.

- Advertisement -

Amarnath Pani lingam

பல நூற்றாண்டுகளாகவே சிவ பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னன் அக்பரின் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த “பிரான்க்காய்ஸ் பெர்னியர்” என்கிற பிரஞ்சு பயணி, இந்த அமர்நாத் யாத்திரையை நேரில் கண்டு, அதைப்பற்றி வியந்து எழுதி உள்ளார். யாரும் நினைத்த நேரத்தில் வந்து தரிசிக்க கூடிய கோவிலல்ல இந்த அமர்நாத் கோவில். மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே இந்த பனிலிங்கத்தை தரிசிக்க முடியும். மிகவும் கடினமான பயண வழிகளை கொண்ட இக்கோவிலின் யாத்திரைக்கு, சமீப காலமாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் எதை கண்டும் அஞ்சாமல் இக்கோவிலின் யாத்திரைக்கு, பல லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது சிவ பெருமான் மீது அவர்கள் கொண்டுள்ள பக்தியையும், நம்பிக்கையையும் காட்டுகிறது.

இதையும் படிக்கலாமே:
எத்தகைய நோயையும் போக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்

English overview:
Here we described Amarnath Pani lingam temple history in Tamil. This Amarnath Pani lingam is a Hindu temple and thousands of devotees are going to this temple each year.

- Advertisement -