அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Ambedkar
- Advertisement -

சுதந்திரம் அடைந்த பின் இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி வேண்டாம் என்று மக்களாட்சியினை கொண்டுவர பல தலைவர்கள் விரும்பினர். அதனையே மக்களும் விரும்பினர் எனவே இந்தியாவில் மக்களாட்சியினை கொண்டுவரவேண்டும் என்றால் அதற்கான முறைப்படியான அரசியல் சாசனம் எழுதப்படவேண்டும்.

ambedkar-4

அரசியல் மற்றும் அதற்கான சட்டங்களை வரையறுத்தால் தான் நாடு முன்னேற்ற பாதையினை நோக்கி நகரும் என்று தலைவர்கள் சிந்தித்தனர். எனவே அன்றைய இந்தியாவில் மிகசிறந்த சட்டம் படித்த மேதைகளை வைத்து இந்திய மண்ணின் அரசியல் சாசனத்தினை எழுத நினைத்த அவர்களுக்கு முதலில் தோன்றிய பெயர் ” அம்பேத்கர் “.

- Advertisement -

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் இவர்தான். மேலும் பரோடாவை ஆண்ட மன்னருடன் இணைந்து தீண்டாமை என்ற கொடிய “நோய்” ஒழிய பாடுபட்ட தலைவரும் இவர்தான். சட்டம் மட்டுமின்றி பொருளாதாரம் , அரசியல், தத்துவம் மற்றும் உலக வரலாறு என இவையனைத்தையும் நன்கு அறிந்த மாமேதை.

தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக குரல்கொடுத்தவர். இந்தியாவில் சாதியினை ஒழித்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ நினைத்தவர் இந்த அம்பேத்கர். அவரின் வாழ்க்கை வரலாற்றினை தான் இந்த பதிவில் நாம் காணவுள்ளோம்.

- Advertisement -

அம்பேத்கர் பிறப்பு :

அம்பேத்கர் அவர்கள் இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள ” மாவ் ” எனும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும் மற்றும் பீமாபாய் என்கிற தம்பதிக்கு ஏப்ரல் 14ஆம் தேதி 1891ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவர் இவரது பெற்றோர்களுக்கு 14வது குழந்தையாக பிறந்தார்.
இவரது குடும்பம் மராத்திய வர்கத்தினை தழுவியது.

இவருக்கு இவரது பெற்றோர்கள் இட்ட பெயர் ” பீமாராவ் ராம்ஜி ” ஆகும். இவர் ஒரு ” மகர் ” என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்.

- Advertisement -

இயற்பெயர் – பீமாராவ் ராம்ஜி
மருவிய பெயர் – அம்பேத்கர்
பிறந்ததேதி மற்றும் ஆண்டு – ஏப்ரல் 14, 1891
பெற்றோர் – ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய்
பிறந்த இடம் – மாவ் [மத்திய பிரதேசம்]
இறந்த ஆண்டு – டிசம்பர் 6, 1956

அம்பேத்கரின் இளமைக்காலம் மற்றும் கல்வி :

தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர் என்பதனால் சிறுவயது முதலே பள்ளிகளில் இவர் சந்தித்த இன்னல்கள் அதிகம் என்றே கூறவேண்டும். பள்ளியில் இவர் மற்ற மாணவர்களோடு அமரக்கூடாது, அவர்களோடு பேசவோ விளையாடவோ கூடாது அதுமட்டுமின்றி நீர் அருந்தினால் கூட அவர்களுக்கென்று தனியாக வைக்கப்பட்டுள்ள பானையில் இருந்து தான் நீர் அருந்த வேண்டும்.

ambedkar-3

இவளவு இன்னல்களையும் கடந்து தனது கல்விவேட்கைக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு தனது ஆரம்பக்கல்வியினை முடித்தார். இவரது தந்தை பணியின் இடமாற்றம் காரணமாக இவர்களது குடும்பம் மும்பை நகருக்கு குடிபெயர்ந்தது. இதனால் மும்பையில் அவர் தனது உயர்கல்வியினை தொடர்ந்தார்.

பீமாராவ் ராம்ஜிக்கு அம்பேத்கர் என பெயர் வரக்காரணம் :

இவர் பள்ளிகளில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும்போது மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் அவரின் மீது மிகுந்த அன்பு காட்டினார். அந்த அன்பின் அடையாளமாக தனது பீமாராவ் ராம்ஜி என்ற பெயருக்கு பின்னால் தனது குருவின் நியாபகமாக அவருக்கு அளிக்கும் மரியாதையாக தனது பெயருக்கு பின் அம்பேத்கர் என்று சேர்த்துக்கொண்டார். அன்று முதல் அவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனார். பின்னாளில் அவரது முழுப்பெயரை கூறாமல் அவரை அனைவரும் அம்பேத்கர் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

பரோடா மன்னரின் உதவியுடன் இளங்கலை பட்டம் :

கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் அப்போதைய பரோடா மன்னரின் கல்வி உதவி மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் பிரிவில் இளங்கலை படிப்பு படித்தார். அங்கும் அவரை சாதிப்பிரச்சனை தொடர்ந்தது ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அங்கும் ஒரு நல்ல ஆசிரியரின் உதவியுடன் தனது இளங்கலை படத்தினை பெற்றார்.

படைத்தலைவராக பதவியாற்றிய அம்பேத்கர் :

இளங்கலை படிப்பினை முடித்த அம்பேத்கர் பரோடா மன்னரின் அழைப்புக்கு இணங்கி அவரது அரண்மனையில் படைத்தலைவராக பதியேற்றார். அங்கும் சாதிக்கொடுமையினை அனுபவித்தார். மற்ற படைவீரர்கள் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர் என்று குத்திக்காட்ட அவர் தனது வேலையினை கைவிட்டு மீண்டும் மும்பை திரும்பினார்.

மும்பை திரும்பிய அவரை அவரது வீட்டில் சந்தித்த அவரை பரோடா மன்னர் அவருக்கு ஏற்பட்ட இன்னல்களை அறிந்தார். அதன் பின்னர் அம்பேத்கரின் கல்வி அறிவினை நன்கு அறிந்த மன்னர் அவரை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பது என்று முடிவெடுத்தார்.

முதுகலை படிக்க அமெரிக்கா சென்ற அம்பேத்கர் :

பரோடா மன்னரின் உதவியுடன் அவர் முதுகலை படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி படிப்பிற்காக ஒரு இந்தியர் அமெரிக்கா பயணிப்பது இதுவே முதன்முறை ஆகும். அங்கும் தனது சிறப்பான படிப்பை தொடர்ந்த அவர் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றில் முதுகலை பட்டங்களை பெற்றார்.

ambedkar-2

தீண்டாமை மற்றும் சாதிப்பிரிவினை :

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களது நிலைமை மாறவேண்டும் என்று நிறைய போராட்டங்களை செய்தார். தீண்டாமை மற்றும் சாதிப்பிரச்சனை இதை இரண்டையும் முற்றிலுமாக ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்களிடையே தனது பேச்சுகள் மூலம் விழிப்புணவினை ஏற்படுத்தினார்.

இரண்டாவது வட்டமேசை மாநாடு :

இரண்டாம் உலக வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள லண்டன் சென்ற அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக “இரட்டை வாக்குரிமை” என்ற சட்டத்தினை கேட்டு பெற்றார். பிறகு சில ஆண்டுகளில் காந்தியடிகளின் போராட்டத்தினால் இரட்டை வாக்குரிமை கைவிடப்பட்டு தாழப்பட்டோருக்கான தனித்தொகுதி என்ற ஒப்பந்தத்தையும் கொண்டுவந்தார்.

சட்ட அமைச்சர் :

சுதந்திரம் அடைந்த இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த இவர் சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். இதன் மூலம் அரசியல் சட்டபிரிவின் பிரிவுகளை தொகுத்து அதில் அனைத்து இந்திய மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் வரையறை என அனைத்தையும் ஆராய்ந்து தொகுத்தார். இது மிக சிறந்த ஆவணமாக இன்றளவும் கருதப்படுகிறது.

பௌத்த மதம் மீது கொண்ட ஈடுபாடு :

தன்னை போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வரும் இன்னல்களுக்கு காரணம் அவர்கள் இந்து மதத்தில் இருப்பதனாலே என்று நினைத்த அவர் சிறிது சிறிதாக புத்த மதத்தின் மீது ஈடுபாடு காண்பித்து புத்த மதத்திற்கு மாறவும் முடிவெடுத்தார். இருப்பினும் அவர் மதம் மாறும் முன்னரே அவர் உயிர் அவரை விட்டு பிரிந்தது.

ambedkar-1

அம்பேத்கரின் இறப்பு :

தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக தனது வாழ்நாள் முழுதும் போராடிய அவர்1955 ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோயின் தாக்கம் தீவிரம் அடைய அவருடைய பார்வை முதலில் பறிபோனது. பின்னர் சில மாதங்கள் படுக்கையிலே இருந்தார். கடைசியாக 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார் .

English Overview:
Here we have Dr Ambedkar biography in Tamil. Above we have Dr Ambedkar history in Tamil. We can also say it as Annal Ambedkar varalaru in Tamil or Annal Ambedkar essay in Tamil or Annal Ambedkar Katturai in Tamil.

ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -