வெறும் எலுமிச்சம்பழம் இருந்தால் போதும். செலவே இல்லாமல் ஏவல் பில்லி சூனியத்தை விரட்டி அடிக்க அம்மன் வழிபாடு.

durgai-amman
- Advertisement -

உங்களுடைய மன பயம் தான் எதிராளிகளுடைய பலமாக இருக்கின்றது. எப்போதுமே எதைக் கண்டும் எதற்கும் பயப்படாதீர்கள். உங்களுக்கு கஷ்டம் என்று வந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். எதிர்பாராத பிரச்சினை வந்துவிட்டால், அதற்கு ஏவல் பில்லி சூனியம் அடுத்தவர்களால் ஏதும் மருந்து வைக்கப்பட்டுள்ளது என்று மட்டும் காரணமாக இருக்காது. இன்றைக்கு நிறைய பேர் இந்த ப்ளாக் மேஜிக்கை வைத்து ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆக முன்பின் தெரியாதவர்கள் உங்களிடம் வந்து உங்கள் வீட்டில் பேய் உள்ளது பிசாசு உள்ளது என்று சொல்லி பயமுறுத்தினா, நிறைய பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். இறை சக்திக்கு இணையான ஒரு பெரிய சக்தி இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது.

சரி தான். ‘பிரச்சனை வருபவர்களுக்கு தானே கஷ்டம் புரியும்’ என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது. எதிர்மறை ஆற்றலினால் தாக்கப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். இல்லை என்று சொல்ல வரவில்லை. இருப்பினும், எதிர்த்து தைரியமாக போராடினால் நம்மை கண்டு எவ்வளவு பெரிய கெட்ட சக்தியும் ஓடிவிடும். இறைவனை மட்டும் முழுமையாக நம்புங்கள். அந்த அம்பாளை மனதில் வைத்துக்கொண்டு கெட்ட சக்தியை விரட்டி அடிக்க கூடிய ஒரு சுலபமான பரிகாரத்தை இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

- Advertisement -

உங்களுக்கு இப்படி ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றலினால் பிரச்சனை உள்ளது என்று நீங்கள் நம்பினால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அமாவாசை தினம், பௌர்ணமி தினம் இந்த இரண்டு தினங்களில் ஏதாவது ஒரு உக்கிரமான அம்மன் கோவில்களுக்கு செல்லவேண்டும். பிரத்தியங்கிரா தேவி, வரஹி அம்மன், காளியம்மன், அங்காள பரமேஸ்வரி, இப்படி எந்த தெய்வங்கள் இருக்கும் கோவிலாக இருந்தாலும் சரி அந்த கோவிலுக்கு செல்லவேண்டும். செல்லும்போது 9 என்ற எண் கணக்கில் வரும்படி எலுமிச்சை பழ மாலையை கோர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒன்பது எலுமிச்சைபழம் மாலையாக இருக்கலாம். 18, 27, 36, 45 என்ற கணக்கில் உங்களால் எத்தனை எலுமிச்சம் பழம் வாங்க முடியுமோ அத்தனை பழங்களை கரும்புள்ளிகள் இல்லாமல் வாங்கி உங்களுடைய கைகளினாலேயே கோர்க்க வேண்டும். மனதில் உங்களுடைய பிரச்சனை தீர வேண்டும். உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றதோ அதை சொல்லி இந்த எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கோர்த்து கொள்ளுங்கள்.

அமாவாசை தினத்தில் அல்லது பவுர்ணமி தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு இந்த மாலையை அணிவித்து விடுங்கள். அம்மனை மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். எதிரி தொல்லை இருந்தாலும் சரி, எதிரிகளால் ஏவப்பட்ட கெட்ட சக்தியின் மூலம் பிரச்சனை இருந்தாலும் சரி, அதை அம்பாளிடம் சொல்லுங்கள். அதன் பின்பு அந்த கோவிலிலேயே முடிந்தால் இரவு தங்கிவிட்டு மறுநாள் வீட்டிற்கு செல்லலாம். முடியாதவர்கள் ஒரு ஒருமணி நேரம் அந்த கோவிலில் அம்பாளை நினைத்து நேரத்தை செலவழித்து விட்டு வீடு திரும்புங்கள்.

lemon

இப்படி எத்தனை மாதங்கள் செய்வது. உங்களுடைய கஷ்டங்கள் தீரும் வரை அம்பாளின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் மிகவும் நல்லது. முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு பதினோரு அமாவாசை தினம் அல்லது பௌர்ணமி தினம் இந்த இரண்டு தினங்களில் உங்களுடைய பரிகாரத்தை செய்து முடிக்க படிப்படியாக உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் குறைவதை கண் கூடாகக் காணலாம். (வழிபாடு செய்வதற்கு அமாவாசை தினம் அல்லது பௌர்ணமி தினம் இதில் ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.) இதுதவிர தினம்தோறும் காலையில் அம்பாளை நினைத்து உங்கள் வீட்டில் பூஜை செய்து வாருங்கள். கண்ணுக்குத் தெரியாத எவ்வளவு பெரிய கெட்ட சக்தியாக இருந்தாலும் உங்களை விட்டு நீங்கிவிடும்‌. உங்கள் வீட்டை விட்டும் வெளியேறி விடும்.
- Advertisement -