அடுப்பு பற்ற வைக்க வேண்டாம். வறுக்க வேண்டாம். வெறும் ஐந்து நிமிடத்தில் சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட, சூப்பரான ஆந்திரா மீல்ஸ் பருப்பு பொடி தயார்.

paruppu-podi
- Advertisement -

இந்த பருப்பு பொடிக்கு வறுக்க வேண்டும். ஆற வைக்க வேண்டும் என்ற எந்த கஷ்டமுமே கிடையாது. வெறும் ஐந்தே நிமிடத்தில் மிக்ஸி ஜாரை எடுத்து இந்த பொருட்களை எல்லாம் போட்டு நைசாக அரைத்தால் சூப்பரான ஒரு பொடி தயார். ஆந்திரா மீல்ஸில் சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட இந்த பொடியை பயன்படுத்துவார்கள். அதுமட்டுமில்லாமல் ரவை உப்புமா சேமியா உப்புமா கூட இதை சைடிஷ் ஆக தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். வாங்க அந்த பொடியை எப்படி அரைப்பது என்று முதலில் தெரிந்து கொள்வோம். பிறகு அந்த பொடியை எப்படி சாப்பிடுவது என்று பார்க்கலாம்.

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொட்டுக்கடலை (200 கிராம்) 1 கப், கொப்பரை தேங்காய் துருவல் 1/4 கப், வரமிளகாய் 8 ல் இருந்து 10 காரத்திற்கு ஏற்ப, வரமிளகாய் தூள் 1 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மிக்ஸி ஜாரை ஓட விடுங்கள். இது நைசாக அரைபட வேண்டும். கொரகொரப்பாக அரைபட்டு இருக்கக் கூடாது. பொடி முழுமையாக அரைபட்ட பின்பு தோலுரித்த பூண்டு பல் 7 போட்டு மீண்டும் ஒருமுறை அரைத்தால் சூப்பரான பருப்பு பொடி தயார்.

- Advertisement -

இந்த பொடியில் நாம் பூண்டு பச்சையாக சேர்த்து இருப்பதால் இதை ஒரு வாரத்திற்கு மேலே ஸ்டோர் செய்ய முடியாது. கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். சுட சுட சாப்பாட்டில் தேவையான அளவு இந்த பொடி போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும். நெய் சாப்பிடக்கூடாது என்பவர்கள் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். ரவா உப்புமா, சேமியா உப்புமாவுக்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்து தொட்டு சாப்பிடுவார்கள்.

நல்லெண்ணெய் ஊற்றி கலந்து தொட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் ரவா உப்புமா செய்யும்போது காய்கறிகளை எண்ணெயில் வதக்குவோம் அல்லவா, அப்போது இந்த பொடி சிறிதளவு சேர்த்து காய்கறிகளை வேக வைத்து, பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ரவா உப்புமா செய்தாலும் சுவை கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இதே பொடியை சில பேர் பூண்டு சேர்க்காமல் செய்வார்கள். பூண்டு சேர்க்காமல் அரைத்தாலும் இந்த பொடி சுவையாக இருக்கும். அந்த பூண்டின் வாசம் மட்டும் இருக்காது.  நீங்கள் பூண்டு போட்டு ஒரு முறை, பூண்டு போடாமல் ஒரு முறை இந்த பொடியை அரைத்து ருசித்து என்ஜாய் பண்ணுங்க. தேங்காய், நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் பயன்படுத்தக் கூடாது. கொப்பரை தேங்காய் தான் போட வேண்டும்.

அதேபோல இந்த பொடியை இன்னொரு விதமாகவும் அரைக்கலாம். மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை போட்டு, வெறும் வர மிளகாய் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, அரைத்தும் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் நாம் தேங்காய் சேர்க்கவில்லை, மிளகாய் தூள் சேர்க்கவில்லை, பூண்டும் சேர்க்கவில்லை, இந்த பொட்டுக்கடலை பொடியும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ருசியாக தான் இருக்கும்.

- Advertisement -

மேலே சொல்லி இருக்கும் மூன்று மெத்தடில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை முயற்சி செய்யவும். அல்லது மூன்றுமே பிடித்திருக்கிறது என்றால் ஒவ்வொரு முறை ஒவ்வொரு ரெசிபி முயற்சி செய்து பார்க்கவும்.

இதையும் படிக்கலாமே: ஒரு தக்காளி கூட சேர்க்காம சிக்கன் கிரேவியை இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமான்னு நீங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு சூப்பரான ஒரு சிக்கன் கிரேவி ரெசிபி. இந்த டைமுக்கு ஏத்த சரியான ரெசிபி தான் இது.

பின்குறிப்பு: இந்த ரெசிபி செய்வதற்கு பொட்டுக்கடலை மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். சில இடங்களில் பொட்டுக்கடலை நமுத்து போயிருக்கும் அல்லவா. அப்படி இருக்கும்போது அந்த பொட்டுக்கடலையை இலேசாக கடாயில் போட்டு சூடு செய்த பின்பு, ஆற வைத்த பின்பு பொடி அரைத்தால் தான் பொடி சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -