- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஆந்திரா ஸ்டைல நல்ல காரசாரமா சூப்பரான ஒரு சிக்கன் கிரேவியை மசாலா எதுவும் சேர்க்காமல்...

ஆந்திரா ஸ்டைல நல்ல காரசாரமா சூப்பரான ஒரு சிக்கன் கிரேவியை மசாலா எதுவும் சேர்க்காமல் பத்து நிமிஷத்துல சட்டுனு ரெடி பண்ணிடலாம். சமைக்கவே தெரியாதவங்க கூட சுலபமா செய்யலாம். சுட சுட சத்தம் கூட இதை போட்டு சாப்ட்டு பாருங்க டேஸ்ட் வேற லேவெல இருக்கும்.

- Advertisement -

அசைவ வகைகளிலே அடிக்கடி செய்வது இந்த சிக்கனாக தான் இருக்கும். பலரும் இந்த சிக்கனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் சிக்கனை ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம் அதுவும் ரொம்பவே சுலபமாக சீக்கிரத்தில் செய்யலாம்.

செய்முறை

முதலில் அரை கிலோ சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக சுத்தம் செய்து வைத்த சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், ரெண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இது தயிர் சேர்த்து செய்யும் போது சிக்கன் சாப்ட்டாக வெந்து வரும். அதே நேரத்தில் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

சிக்கன் ஓரளவுக்கு வெள்ளை நிறமாக மாறி வந்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் தனி மிளகாய், தூள் ஒரு டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி விடுங்கள். இது 10 நிமிடம் அப்படியே வேக வேண்டும். இந்த கிரேவிக்கு தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை.இதில் நாம் தண்ணீர் சேர்க்கவில்லை அதனால் சிக்கனை இடையிடையே மூடி எடுத்து கிளறி விட வேண்டும். இல்லை என்றால் அடிபிடித்து விடும்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து சிக்கன் நன்றாக வெந்திருக்கும். இந்த நேரத்தில் கால் டீஸ்பூன் கரம் மசாலா, இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு கொத்தமல்லி தழைகளையும் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். கரம் மசாலாவை முதலிலே சேர்க்க கூடாது.

இதையும் படிக்கலாமே: பேபி கான் பஜ்ஜி செய்ஞ்சு சாப்ட்டு இருக்கீங்களா? இல்லைன்னா உடனே இப்படி மொறு மொறுன்னு செய்ஞ்சு சாப்பிடுங்க. இதுல பஜ்ஜி செஞ்சா இவ்வளவு டேஸ்டா இருக்குமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

ரொம்பவே சுலபமாக அதே நேரத்தில் அதிக ருசியாக ஆந்திர ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார். இந்த கிரேவியை எல்லோருமே சுலபமாக செய்து விடலாம். நீங்களும் இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க சிக்கன் செய்வது இவ்வளவு ஈஸியான்னு நினைப்பீங்க.

சற்று முன்