சிறிது காலத்திற்கு முன்பு வரை இந்த பேபி கானை பற்றி அவ்வளவாக அனைவரும் அறிந்திருக்கவில்லை. பேபி கானில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் ஏ பி சி போன்றவற்றுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. பேபி கானில் கொழுப்பு சத்து மிகவும் கம்மி. அதுமட்டும் இன்றி இதில் கலோரியின் அளவு மிகவும் குறைவு. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் இந்த பேபிக் கானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் போலிக் அமிலங்கள் நிறைந்து இருப்பதால் கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் இந்த பேபி கானை சாப்பிடுவது மிகவும் நல்லது. இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த சத்துமிக்க பேபிக் கானில் இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சுவையான பஜ்ஜி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் – 10, கடலை மாவு -1/4 கப், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், ஆப்ப சோடா -1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள்-1/2 டீஸ்பூன், சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு -1/4 டீஸ்பூன், எண்ணெய் பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு.
செய்முறை
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். அதில் இந்த பேபி கானை சேர்த்த பிறகு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரில் இருந்து பேபி கானை எடுத்து ஆற வைத்து விடுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும். அடுத்து ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு, ஆப்ப சோடா அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஆற வைத்த பேபி கானை சின்ன சின்னதாக அதாவது ஒரு விரல் அகலத்துக்கு நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை பேபி கார்ன் சின்னதாக இருந்தால் அப்படியே கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது அடுப்பைப் பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, அடுப்பை மிதமான தீக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த பேபி கானை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போட்டு நன்றாக பொரிய விட்டு எடுத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: வெண்டைக்காயில் வத்தல் செஞ்சி சாப்டு இருக்கீங்களா? மூளை வளர்ச்சிக்கு உதவும் வெண்டைக்காயை இப்படி செய்து கொடுத்தா எந்த குழந்தையும் விரும்பி சாப்பிடும்.
இதில் பேபி கானை வேக வைத்து செய்திருப்பதால் உள்ளே சாப்டாகவும், மேலே கிரிஸ்பியாகவும் இருக்கும். இந்த பஜ்ஜி வித்தியாசமான சுவையில் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இதை நாம் எப்போதும் போல சட்னி வகைகளையும் வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சாஸ் வகைகளை வைத்தும் கொடுக்கலாம். அவர்கள் இன்னும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். பஜ்ஜி என்றதும் எப்போதும் வாழைக்காய், வெங்காயம் என இதையே செய்யாமல் குழந்தைகளுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து கொடுங்கள்.