அங்கோர்வாட் கோவில் சிறப்பு தகவல்கள்

ankorvat

சிவனை முழு முதல் கடவுளாக கொண்டு வழிபடும் சைவ பிரிவினரும், விஷ்ணுவை முதல் கடவுளாக கொண்டு வழிபாடும் வைணவ பிரிவினரும் சேர்ந்ததே இந்து மதமாகும். இந்த “சிவன், விஷ்ணு” வழிபாடு பன்னெடுங்காலமாக நம் நாட்டில் மட்டுமல்ல, பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பரவிய தென்கிழக்காசிய நாடுகளிலும் ஒரு காலத்தில் அதிகம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அப்படியான ஒரு சிறு தென்கிழக்காசிய நாடான “கம்போடியா” நாட்டில் கட்டப்பட்ட அதிசய கோவிலான “அங்கோர்வாட் கோவில்” குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அங்கோர்வாட் கோவில் வரலாறு
முற்காலத்தில் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் சனாதன தர்மமாகிய இந்து மதமே பிரதான மாதமாக பின்பற்றப்பட்டு வந்தது. அப்படி 12 ஆம் நூற்றாண்டில் கம்போடியா நாட்டை அரசாட்சி புரிந்து வந்த “கீமேர்” அரச வம்சத்து மன்னனான “இரண்டாம் சூரியவர்மன்” எனும் மன்னனால் “வைணவ” கடவுளான விஷ்ணுவிற்கு அர்ப்பணித்து கட்டிய கோவிலாகும். உலகிலேயே மிக பெரிய இந்து கோவில் என பெயர் பெற்றது இந்த அங்கோர்வாட் கோவில். இந்த கோவில் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோவிலை சுற்றி நான்கு பக்கங்களிலும் மிக அகலமான அகழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இக்கோவிலை கட்ட 30 ஆண்டு காலம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் இந்து மத புராணங்களில் குறிப்பிட படும் “மேரு” மலையை குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. புராணங்களின் படி இந்திரன் இப்போது அங்கோர்வாட் இருக்கும் பகுதியில் ஒரு அழகிய நகரத்தை ஏற்படுத்தியதாகவும், பின்பு மக்கள் வாழ தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டு வரலாறு இந்தியாவில் இருந்து கடல் கடந்து வந்த ஒரு அந்தண இளைஞன் தான் அந்நாட்டின் மன்னனாக ஆகி நல்லாட்சியை வழங்கியதாகவும், அவனது அரச வம்சம் தான் கீமேர் அரச வம்சம் என்றும் கூறுகின்றனர்.

இந்த வம்சத்தில் வந்த இரண்டாம் சூரியவர்மன் தனது அண்டை நாடுகளான மரகத நாடு(வியட்நாம்) சம்பா நாடு (லாவோஸ்) ஆகிய நாடுகள் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றான். போரில் தன் செய்த கொலைகளின் பாவத்தை தீர்க்கவே மிக பிரமாண்டமாக இக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் முக்கிய இறைவனாக விஷ்ணு இருந்திருக்கிறார். பிரம்ம தேவன், சந்திர பகவான், சூரிய பகவான் போன்றோருக்கும் தனி தனி அழகிய சிலைகள் வடிகப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

பிற்காலத்தில் இதர தென்கிழக்காசிய மக்கள் மற்றும் கம்போடியா நாட்டு மக்கள் புத்த மதத்தை தழுவிய போது. இக்கோவிலில் அதுவரை பின்பற்றிவந்த இந்து மத சடங்குகள், வழிபாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டு, இக்கோவிலின் சில பகுதிகளில் புத்த சிலைகளை ஸ்தாபித்து வழிபட மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.

அங்கோர்வாட் கோவில் சிறப்பு

பரப்பளவில் உலகின் மிக பெரிய கோவில் இது என்பதால் ஓரிரு நாளில் இக்கோவிலை முழுவதும் சுற்றி பார்க்க முடியாது. சூரியவர்ம மன்னன் தீவிரமாக வைணவ மதத்தை பின்பற்றி வந்தால் இக்கோவில் எங்கும் வைணவ மதம் தொடர்புடைய சிற்பங்கள் அதிகளவில் வடிக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலில் இருக்கும் “அப்சரஸ்” தேவலோக கன்னிகளின் சிலை, ராமாயண, மகாபாரத காட்சி சிற்பங்கள் உலக புகழ் பெற்றவை. எங்கு பார்த்தாலும் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டு பூலோகத்தில் சொர்க்கத்தை நிர்மாணிக்க வேண்டும் என்கிற சூரிய வர்மன் தன் இலட்சியத்தை நிறைவேற்றிக்கொண்டான். இக்கோவிலின் பல பகுதிகள் ஒலியை எதிரொலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. விஷ்ணு கோவில் என்பதற்கு அடையாளமாக இக்கோவிலில் ஒரு விஷ்ணு சிலை அதற்கு பூஜை சடங்குகளை, புத்த மத துறவிகள் செய்வது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயமாக இருக்கிறது.

1974 – 1979 ஆம் ஆண்டுகளில் தீவிர இடதுசாரி ஆட்சியாளர்கள் கம்போடியவை கைப்பற்றி ஆட்சி புரிந்த போது லட்சக்கணக்கில் கம்போடிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இக்கோவிலின் பராமரிப்பும் கைவிடப்பட்டது. அப்போது பல மதிப்பு மிக்க இக்கோவிலின் சிலைகள் திருடப்பட்டு பல வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டது. இக்கோவில் இருக்கும் பகுதி மற்றும் அதற்கு அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதியிலும் ஆயிரக்கணக்கில் “கண்ணி வெடிகள்” புதைக்கப்பட்டிருந்ததால், பல ஆண்டுகள் யாருமே இக்கோவிலுக்கு வரவில்லை.

தற்போது ஜனநாயக ஆட்சி நடக்கும் கம்போடியா நாட்டில் அக்கோர்வாட் கோவில் ஒரு தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் நாட்டு தேசிய கொடியிலே அங்கோர்வாட் கோவில் இடம்பெற்றுள்ளது. இந்நாட்டிற்கு முக்கிய வருவாயே அங்கோர்வாட் கோவிலை காண லட்சக்கணக்கில் வரும் சுற்றுலா பயணிகள் வருகையின் மூலம் மட்டுமே வருகிறது. உலக பராம்பரிய சின்னமாக “யுனெஸ்கோ” அமைப்பால் அங்கோர்வாட் கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் எல்லோரும் ஒரு முறையேனும் காண வேண்டிய ஒரு கோவில் அங்கோர்வாட் கோவிலாகும்.

கோவில் அமைவிடம்

அங்கோர்வாட் கோவில் கம்போடியா நாட்டில் “சியாம் ரீப்” என்கிற நகரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இக்கோவிலுக்கு செல்ல கம்போடியா தலைநகர் பினோம் பென் நகருக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து சாலை மார்கமாக செல்ல வேண்டும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்

அங்கோர்வாட் கோவில் பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் சார்ந்த இடமாக மட்டுமே தற்போது இருப்பதால் இக்கோவிலில் எந்த ஒரு தினசரி வழிபாடோ, பூஜைகளோ மேற்கொள்ளப்படுவதில்லை. அங்கோர்வாட் கோவில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் எண்ணிலடங்கா அதிசயங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Angkor wat temple details in Tamil. It is also called as Angkor wat kovil details in Tamil. Angkor wat temple history in Tamil or Angkor wat kovil varalaru in Tamil is here.