இந்த தவறை மட்டும் மறந்தும் செய்து விடாதீர்கள்! சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை!

annam-pasi-beg
- Advertisement -

ஒரு சில விஷயங்களை நாம் தெரிந்தோ! தெரியாமலோ! செய்து விடுகிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் நம்மை தாக்கும் என்பதை நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை. உடலில் பலம் இருக்கும் வரை தான் நம்முடைய ஆட்டமெல்லாம்! அடுத்தவருடைய உதவி இல்லாமல் எந்த மனிதனாலும் வாழ முடியாது என்பது தான் உண்மை. ஒரு வேளை சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் இந்தத் தவறைச் செய்தால் நமக்கும் அந்த நிலை நிச்சயம் வரும். உங்களிடம் காசு, பணம் கொட்டிக் கிடந்தாலும் ஒரு வாய் சாப்பாட்டை உங்களால் நிம்மதியாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். இந்த நிலை ஏன்? எதனால் நமக்கு வருகிறது? நாம் அப்படி என்ன தவறு செய்து விட்டோம்? இதை இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

food

நாம் இந்த தவறை செய்தால் நமக்கு என்னவெல்லாம் நிகழும் தெரியுமா? நம்மிடம் கோடிகோடியாக செல்வம் கொட்டிக் கிடந்தாலும் நம்மால் எதையும் வாய்க்கு பிடித்த படி சாப்பிட முடியாத நிலைமை ஏற்படும். உடல் முழுவதும் வியாதிகள் தான் இருக்கும். சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படும் பொழுது அவர்களால் சர்க்கரை, உப்பு போன்றவற்றை தொடக்கூட முடியாது. சாப்பாட்டையே வெறுத்து விடுவார்கள். இன்னும் சிலருக்கு மூன்று வேளையும் கஞ்சியை தவிர எதுவுமே சாப்பிட கூடாது என்று கூறிவிடுவார்கள். இதெல்லாம் நடக்கும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தாலும் மன நிலையில் நிம்மதி இருக்காது. சாப்பிட உட்காரும் பொழுது ஏதாவது ஒரு சண்டை, சச்சரவு, பிரச்சனை என்று வீட்டில் இருப்பவர்கள் ஆரம்பித்து விடுவார்கள். சாப்பாடு கிடைத்தாலும், அந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு நிம்மதி இருக்க வேண்டும் அல்லவா? என்னடா இது வாழ்க்கை? என்று நாம் நினைக்கும் அளவிற்கு வாழ்க்கை வெறுத்து விடும்.

eating-1

இதைவிடக் கொடுமை என்னவென்றால் ருசியாக சமைத்துத் தர ஆள் இருப்பார்கள். நிம்மதியாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். உடலில் முழு ஆரோக்கியமும் இருக்கும். ஆனால் மனதிற்குப் பிடித்த படி செய்து சாப்பிட அவர்களிடம் போதிய பணம் இருக்காது. இதைத்தான் அன்ன தோஷம் என்று சாஸ்திரம் குறிப்பிட்டு கூறுகிறது. நாம் செய்யும் அந்த தவறுகளினால் இந்த ஜென்மத்தில் அல்லது மறு ஜென்மத்தில் மேற்கூறிய இந்த நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

- Advertisement -

ஒருவருக்கு இந்த கஷ்டங்கள் எல்லாம் வருகிறது என்றால் அதற்கு இந்த தவறுகள் நாம் செய்தது தான் காரணமாக இருக்குமாம். அப்படி நாம் என்ன தவறு செய்கிறோம்? செய்தோம்? செய்து கொண்டிருக்கிறோம்? என்பதை பார்ப்போமா? வீட்டிலிருக்கும் நபர்களையோ அல்லது உற்றார், உறவினர், நண்பர்கள் போன்றவர்களையோ சாப்பிட அமரும் பொழுது நிம்மதியாக சாப்பிட விடாமல் பகையை பற்றி பேசி துரத்தி அடிப்பவர்கள் இந்த தோஷத்திற்கு ஆளாவார்கள்.

eating-food

இயலாத ஏழைகள் பசி என்று வாடிய முகத்துடன் பிச்சை கேட்டு வந்தால் இல்லை என்று கூறி அனுப்புவது மிகப்பெரிய பாவ செயலாக சாஸ்திரம் கூறுகிறது. உங்களிடம் என்ன இருக்கிறதோ! என்ன முடியுமோ! அதை உடனே அவர்களுக்கு செய்து கொடுப்பது புண்ணியத்தை சேர்க்கும்.

- Advertisement -

pichai-thanam

நமக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை பசிக்க விட்டு வேலை வாங்குவது பாவச் செயலாகும். அவர்கள் நமக்காக உழைப்பவர்கள்! அவர்களின் வயிறு எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும். காய விட்டு வேலை வாங்கினால் அன்ன தோஷம் தான் ஏற்படும்.

hungry

உணவை அதிகமாக குப்பையில் கொட்டுபவர்கள், கர்ப்பிணிப் பெண்களை பசியுடன் காக்க வைத்து சாப்பிடுபவர்கள், பசியுடன் இருக்கும் சிறுபிள்ளைகள் முன் நீங்கள் மட்டும் சாப்பிடுவது, உணவை பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் மட்டும் சாப்பிடுவது, அன்னபூரணியை அவமதிப்பது, சாப்பிடும் சாப்பாட்டை சதா குறை சொல்வது போன்ற காரியங்களை செய்தால் உங்களுக்கு நிச்சயம் அந்த தோஷம் ஏற்படும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது சாஸ்திரம். அப்படி பார்த்தால் நம் எல்லோருக்குமே இந்த தோஷம் இருக்கலாம்.

Annapoorani

இதுவரை தெரிந்தோ! தெரியாமலோ! இது போன்ற தவறுகள் செய்திருந்தால் அதற்கு உரிய பரிகாரம் செய்து விமோசனம் பெறலாம். வெள்ளிக்கிழமையில் அன்னபூரணி படம் வைத்து, வெள்ளை நிறப் பூக்கள் சாற்றி, பால் மற்றும் சுத்த அன்னம் நைவேத்தியம் படைத்து வழிபட்டு வரலாம். அனாதை குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். இப்படி செய்வதால் எப்பொழுதும் சாப்பிடும் பொழுது மன நிம்மதி இருக்கும். வறுமை இல்லாமல் வாழ்வாங்கு வாழ்வோம்.

இதையும் படிக்கலாமே
ஆவணி ‘ஞாயிறு’ விரதம் யாரெல்லாம் மேற்கொள்ளலாம்? அன்றைய நாளில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதன் ரகசிய காரணம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -