மன உளைச்சல் எனப்படும் Stress நீங்க செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன தெரியுமா? நீங்கள் செய்த இந்தப் பாவம் உங்கள் சந்ததியினரை சேராமல் இருக்க செய்ய வேண்டிய விஷயமும் இது தான்!

food-sad
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு உளைச்சல் இருக்கும். இதனை மன உளைச்சல் என்கிறோம். ஏதோ ஒரு துன்பம் நம்மைத் துரத்திக் கொண்டே இருப்பது போலவும், ஏதோ ஒரு கஷ்டம் நமக்கு வந்து கொண்டே இருப்பது போலவும், அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பது போலவும் இருக்கும் சூழ்நிலையை மன உளைச்சல் என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் ஸ்ட்ரெஸ்(Stress) என்று எளிதாக கூறிவருகின்றனர். ஆனால் இந்த stress மனிதனை எந்த முயற்சியிலும் ஈடுபட முடியாமல் முடக்கிப் போட்டுவிடும்.

sad-crying4

ஆபத்தான இந்த மன உளைச்சலை எதிர்கொள்ள நாம் அனுதினமும் செய்ய வேண்டிய விஷயம் என்ன? இதே விஷயத்தை நீங்கள் செய்தால் நீங்கள் செய்த இந்த சில பாவங்கள் உங்கள் சந்ததியினரை சாராமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியான அந்த விஷயத்தைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை அனைவரும் அறிந்தது தான். இந்த அன்னதானத்தை பொறுத்தவரை பல்வேறு வகைகள் உண்டு. ஊரைக் கூட்டி சாப்பாடு போட்டால் மட்டுமே அன்னதானம் கிடையாது! நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களிலும் அன்னதானம் ஒளிந்திருக்கிறது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் சாப்பிடும் முன்பு காகத்திற்கு அந்த உணவில் இருந்து ஒரு பகுதியை வைத்துவிட்டு சாப்பிடுவது மன உளைச்சலை போக்கும் அருமருந்தாகும். ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணத்திலிருந்து 2 சதவீதத்தை ஜீவராசிகளுக்கு என்று ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். தானத்தில் முதல் தானம் நீங்கள் ஜீவராசிகளுக்கு செய்யும் தானம் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். அதன் பிறகு தான் மற்ற எல்லா தானங்களும் அடங்குகின்றன.

banana-for-cow

வாயில்லா ஜீவராசிகளுக்கு நாம் செய்யும் இந்த தானம் நாம் நம்முடைய பித்ருக்களுக்கு செய்த பாவத்திலிருந்து நம் சந்ததியினரை விடுவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பது நியதி. அவ்வகையில் நாம் இந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதால் நம்முடைய பித்ரு தோஷங்கள் நம் சந்ததியினரை சேராமல் தடுக்குமாம். பறவைகளுக்கு தானியங்களை போடுவது, நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி கொடுப்பது, பொறை வாங்கிக் கொடுப்பது, பூனைக்கு பால் வைப்பது, காகத்திற்கு சாதம் வைப்பது, பசு மாடுகளுக்கு கீரைகளை கொடுப்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் அன்னதானம் உள்ளது.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் திடீரென வீட்டிற்கு வருபவர்களுக்கு, அல்லது யாசகம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அன்னம் அளிப்பதும் அன்னதானம் தான். இந்த விஷயங்களை எல்லாம் ஒரு மனிதன் கடைபிடித்து வந்தால் அவனுடைய மன உளைச்சலில் இருந்து அவன் விடுபடுகிறான் என்றும் கூறப்படுகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. அதே போல ஒரு ஜீவன் நம்மால் பசியாறுகிறது என்பதை பார்க்கும் பொழுதே நம் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும். நாம் நல்லதை செய்து விட்டோம் நமக்கு நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையும் வரும்.

annathanam

எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் செய்யும் அன்னதானமே சிறந்த தானம் ஆகும். அன்னதானம் செய்தால் நமக்கு இது கிடைக்கும், இதனால் புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு செய்தால் அதில் பலனில்லை என்பதையும் மனதில் வைத்து செயல்படுங்கள். இந்த விஷயங்களை எல்லாம் ஒருசிலர் தெரியாமலேயே செய்து கொண்டிருப்பார்கள். தெரிந்தால் இன்னும் அதிகமாக செய்வார்கள் என்கிற நம்பிக்கை உண்டு. அன்னத்தை தானம் செய்து உங்கள் சந்ததியினரின் பாவங்களை போக்குவதுடன், உங்கள் மன உளைச்சலையும் நீக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -