உங்கள் வீட்டில் எந்த எறும்பு அதிகமாக வருகிறது? வீட்டில் எறும்புகள் அதிகமாக வந்தால் தரித்திரம் வரும் வாய்ப்பு உள்ளதா?

ants
- Advertisement -

பொதுவாகவே நம் வீட்டிற்குள் வரும் எறும்புகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று கடிக்கின்ற சிவப்பு எறும்பு. மற்றொன்று பிள்ளையார் எறும்பு என்று சொல்கின்ற கருப்பு எறும்பு. இந்த இரண்டு எறும்பில் உங்கள் வீட்டில் எது அதிகமாக வருகிறது? இந்த இரண்டு எறும்புகளில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எறும்பு எது? துரதிர்ஷ்டத்தை தரக்கூடிய எறும்பு எது? என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ant-sugar

பொதுவாகவே சிவப்பு எறும்பு என்பது தூய்மை இல்லாத இடத்தில் தான் வரும். அதேசமயம் உணவுப் பொருட்களிலும் வரும். ஆனால் அந்த உணவுப் பொருட்களை முறையான விதத்தில் பராமரித்து மூடி வைத்திருந்தோமேயானால், அந்த உணவுப்பொருளில் எறும்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

- Advertisement -

அதாவது தேவையில்லாத பொருட்களை தேவையில்லாத இடங்களில் திறந்தபடி வைக்கும் பட்சத்தில் அந்த வாசத்திற்கு எறும்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக நம் வீட்டு சமையலறையில் சுத்தமாக வைத்திருக்காத பட்சத்தில் சிவப்பு எறும்பு அதிகமாக வரும். சுத்தம் இல்லை என்றால் கட்டாயம் அந்த இடத்தில் மூதேவி வாசம் செய்ய வந்துவிடுவாள். ஆக தூய்மை இல்லாத இடத்தில் சிவப்பு எறும்பு வரும் பட்சத்தில், உங்கள் வீட்டில் கஷ்டமும் வரும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

red ant

ஆகவே, முடிந்தவரை உங்கள் வீட்டில் சமையலறையை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உணவுப் பொருட்களை திறந்தபடி போடாமல், டப்பாவில் சேகரித்து வைத்து இருக்கிறீர்கள். எந்த பொருளையும் சிதறவிடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். சிவப்பு எறும்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை.

- Advertisement -

ஒருவேளை உங்கள் வீட்டு சமையல் அறை சுத்தமில்லாமல் இருந்தால், பொருட்களை சிதற வைத்து இருந்தால் சிவப்பு எறும்பு வரும். கூடவே, உங்களைத் தேடி துரதிஷ்டம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, நிறைய பேர் வீட்டில், ஈரத்துணியை வீட்டுக்குள்ளேயே கொடியில் காய வைத்து, அது காயாமல் இருந்தால் அதில் சிவப்பு எறும்பு அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஈரத்துணி காயாமல் வீட்டிற்குள் இருப்பது ஒரு தரித்திரம் தானே! அந்தத் துணியில் இருந்து வெளிவரும் கெட்ட வாசம் வீட்டில் தரித்திரத்தை சேர்க்கும். அதில் சிவப்பு எறும்பு கட்டாயம் வரும். முடிந்தவரை நம்முடைய வீட்டில் சிவப்பு எறும்புகள் படை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் உள்ளது. குழந்தைகள் உணவு பொருட்களை தரையில் சிந்திய உடனேயே, சுத்தம் செய்யப் பாருங்கள். அந்த வாசத்திற்கும் சிவப்பு எறும்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ant2

அடுத்ததாக சொல்லப்படுவது கருப்பு எறும்பு. பொதுவாகவே, இந்த எறும்பிற்க்கு பிள்ளையார் எறும்பு என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த கருப்பு எறும்புகள் குளிர்ச்சியான இடத்தைத் தேடி வரும். ஆனால், அந்த குளிர்ச்சியான இடமும் சுத்தமான இடமாக இருந்தால் மட்டுமே வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரியும்.

- Advertisement -

அசுத்தமான இடங்களில், அசைவ வாசம் வீசும் இடங்களில் கட்டாயம் இந்த கருப்பு எறும்பு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. அசைவ வாசனை! அது சுத்தம் இல்லாமல் இருக்கும் இடத்தில் அடிக்கக்கூடிய நீச்ச வாடை, என்று சொல்லுவார்கள். பொதுவாகவே, இந்த நீச்ச வாடை ஒரு வீட்டில் அடிக்கவே கூடாது. அது வீட்டிற்கு தரித்திரத்தை தேடித்தரும். இந்த நீச்ச வாடை, உங்கள் வீட்டு சிங்கிள் அடித்தாலும், உங்கள் வீட்டுக் குளியலறையில் அடித்தாலும், உடனே ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் தும்மினால் இது தான் நடக்கும்? யார்? எப்படி தும்மினால் என்ன பலன் தெரியுமா?

உங்கள் வீடு சுத்தமாக இருக்கும் பட்சத்தில், உங்கள் வீடு லட்சுமி கலாச்சாரத்தோடு இருக்கும் பட்சத்தில், கட்டாயம் உங்கள் வீட்டை தேடி கருப்பு எறும்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டிற்குள், கருப்பு எறும்பு நுழைந்த வண்ணம் இருந்தால், உங்களுக்கு பணவரவு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சோதித்துப் பாருங்கள்! சிவப்பு எறும்பு வந்தால் வீட்டில் பிரச்சனை வருகிறதா? கருப்பு எறும்பு வந்தால் வீட்டில் வருமானம் வருகிறதா? என்று! நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்களது வீட்டை இதற்கு தகுந்தார்போல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும்!

kitchen-cleaning

முடிந்தவரை கூட்டம் கூட்டமாக கருப்பு எறும்பு உங்கள் வீட்டின் வெளி பகுதிகளில், மூலை முடுக்குகளில் அதிகமாக இருந்தால் அதை சாகடிக்க பார்க்கக் கூடாது. லேசாக தண்ணீர் தெளித்து, அதாவது அந்த எறும்பு கூட்டத்திற்கு மேலேயே தண்ணீர் தெளித்து விடக்கூடாது. எறும்பு இருக்கும் இடத்திற்கு கொஞ்சம் தள்ளி, தண்ணீரைத் தெளித்து, விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். அந்த எறும்பு கண்களுக்கு தெரியாமல் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
ரொம்ப நாளா இந்த ஒரு பிரச்சினை மட்டும் முடிவுக்கே வர மாட்டேங்குது! இப்படி இழுத்துக்கொண்டே போகும் பிரச்சனை, உடனே முடிவுக்கு வர என்ன பண்ணனும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Spiritual meaning of ants in the house. Ant in home good or bad. Ant in home astrology. Ant in home remedy. What causes ants in the house.

- Advertisement -