ரொம்ப நாளா இந்த ஒரு பிரச்சினை மட்டும் முடிவுக்கே வர மாட்டேங்குது! இப்படி இழுத்துக்கொண்டே போகும் பிரச்சனை, உடனே முடிவுக்கு வர என்ன பண்ணனும்?

vinayagar-vettiver

யாருக்கும் பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சினை என்பது வாழ்க்கையின் கட்டாயம் இருக்கும். ஆனால், சில பேருக்கு ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வராமலே இழுத்துக் கொண்டே போகும். கோர்ட் பிரச்சனை, கேஸ் பிரச்சனை, கணவன்-மனைவி பிரிந்து இருப்பார்கள், ஒன்று சேர்வதில் பிரச்சனை. பிள்ளைகளுக்கு திருமண பிரச்சனை. சொத்து பிரச்சனை. தொழில் பிரச்சினை. இப்படி எக்கச்சக்க பிரச்சனைகள். எதுவாக இருக்கட்டும்! அந்த பிரச்சனை கூடிய விரைவில் முடிவதற்கு என்ன செய்ய வேண்டும்?

vendhaya podi

முதலில் நீங்கள் காலையில் குளிக்கும் போது, என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் வெட்டிவேர் பொடி, வசம்பு பொடி, மஞ்சள் தூள் இவை மூன்றையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் மட்டும் நம் வீட்டிலேயே இருக்கும் அல்லவா? நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெட்டிவேர் பொடி, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் வசம்பு பொடி போட்டு குளித்து விடுங்கள்.

இந்தப் பிரச்சனை எல்லாம் முடியாமல் இழுத்துக் கொண்டே போவதற்கு ஏதாவது ஒரு கெட்ட சக்தி உங்களுக்குத் தடையாக இருந்தாலும், அது இந்த குளியலிலேயே முடிந்துவிடும். உங்களைப் பிடித்து ஆட்டும் பிடையும், போய்விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். முதலில் இந்த பொடியை எல்லாம் போட்டு தலையை மூழ்கி விடுங்கள்.

bathing

அடுத்ததாக பூஜை அறையில், குல தெய்வத்தையும் விநாயகப் பெருமானையும் வேண்டிக் கொண்டு, தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, நீங்கள் செல்லக்கூடிய அந்த குறிப்பிட்ட வேலை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அருகம்புல் பொடி கொஞ்சம், வேப்பிலை பொடி கொஞ்சம், திருநீரு கொஞ்சம் இவை மூன்றையும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கட்டாயம் நீங்கள் இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்து விட்டு, தீராத பிரச்சனையை தீர்ப்பதற்கு, இழுத்துக் கொண்டே போகின்றன வேளையை முடிக்க செல்லுங்கள். நம்பிக்கையோடு செல்லுங்கள். ஒரு முறையில், முடிகின்ற காரியமாக இருந்தால், ஒரு முயற்சியிலேயே கட்டாயம் அதில் வெற்றி அடைவீர்கள். அரசாங்க வேலை, கோர்ட் சம்பந்தபட்ட வேலை, கேஸ் வேலைகள், இப்படி ஏதாவது இருந்தால் குறைந்தது 5 முறைகளிலேயே முடிந்துவிட வாய்ப்பு உள்ளது. முடியாத பட்சத்தில் 11 முறை முயற்சி செய்து பாருங்கள். அதற்குள் கட்டாயம் உங்களுக்கு தீர்க்கமுடியாத பிரச்சனை கூட ஒரு தீர்வுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagar-1

எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதில் வெற்றியை தேடி தர கூடிய சக்தி வெட்டிவேர் பொடிக்கு உள்ளது. மஞ்சள்பொடி என்றுமே மங்களகரமானது. வேப்பிலைக்கு கெட்டதை விரட்டக் கூடிய சக்தி உள்ளது. அருகம்புல்லில் என்றுமே விநாயகர் வீற்றிருப்பார். வசம்பு வசீகர தன்மை கொண்டது. இப்படியாக இந்த பொடியை நீங்கள் உங்கள் வீட்டில் எப்போதுமே வைத்துக் கொள்வது மிகவும் நல்லது இதில் எந்த பொடியை வேண்டும் என்றாலும் தண்ணீரில் போட்டு கலந்து குளிப்பதில் தவறில்லை. இந்த எந்த பொடியை வேண்டும் என்றாலும், தண்ணீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொண்டால் தவறில்லை.

ஆக மொத்தத்தில் இந்த பொருட்களுக்கு எல்லாமே வெற்றியை தேடித்தரும் சக்தி அதிகமாகவே உள்ளது. எதிர்மறை ஆற்றலையும் கண் திருஷ்டியும், கெட்டதையும் நீக்கக்கூடிய சக்தி அதை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து, இந்த பொடியை பூஜை அறையில் சுத்தமாக வைத்துக் கொண்டு, தேவையான போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் இருக்க, இந்த 3 பொருளையும் ஒன்றாக சேர்த்து ஹாலில் வையுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Remedy for problems in life. Prachanai in Tamil. Prachanai theera. Aanmeega tips in Tamil. Aanmeega pariharangal.