வீட்டில் இருக்கும் அதீத எறும்பு தொல்லையை செலவே இல்லாமல் எளிமையான முறையில் விரட்டி அடிப்பது எப்படி?

ant-mint-garlic
- Advertisement -

வீட்டில் இருக்கும் எறும்பு பிரச்சனையை நாம் என்ன தான் முயற்சி செய்து பார்த்தாலும் தீர்க்க முடிவதில்லை. சாதாரண எறும்பு சமையலறையின் அமைதியை நாசம் செய்து விடுகிறது. எந்த பொருள் சிந்தினாலும் உடனே வரிசைகட்டி விடுகிறது இந்த இடம் எறும்புக் கூட்டம். ஒரு சிறு ஓட்டையிலிருந்து ஓராயிரம் எறும்புகள் படை எடுப்பதை நாம் பார்த்திருப்போம். நீங்கள் என்ன தான் சிமெண்ட் பூசி அடைத்து வைத்தாலும் அதையும் துளைத்துக் கொண்டு வந்து விடுவதை நாம் வியந்து பார்த்திருப்போம். இந்த தீராத எறும்பு தொல்லையை எப்படி சுலபமான முறையில் தீர்ப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ant-erumbu

வீட்டில் எந்த மூலையில் இருந்து, எந்தத் துளையில் இருந்து எறும்புக் கூட்டம் படை எடுக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அந்த துளைகளில் சிறிதளவே படிக்காரத் தூளை போட்டு விட்டால் போதும். மீண்டும் அந்த இடத்தில் எறும்புகள் வரவே வராது. இதே முறையில் மஞ்சள் தூளையும் உபயோகிக்கலாம். காது குடையும் பட்ஸை உபயோகப்படுத்தி மஞ்சள் தூளை ஓட்டைக்குள் சேர்த்து விட்டால் போதும் எறும்புகள் மடிந்துவிடும்.

- Advertisement -

நமக்கு மட்டுமல்ல எறும்புகளுக்கும் பூண்டு வாசனை பிடிப்பதில்லையாம். பூண்டு வாசனை கண்டாலே எறும்புகள் தெறித்து ஓடி விடுமாம். எனவே பூண்டை நசுக்கி எறும்பு வரும் இடங்களில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் எறும்புகள் வரவே வராது. பூண்டை நசுக்கி சாறெடுத்து வடிகட்டி அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் எறும்பு வரும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விடலாம். பூண்டு வாசனைக்கு எறும்புகள் மட்டுமல்ல பல்லிகளும் வருவதில்லை.

vinegar

வீடு துடைக்கும் பொழுது சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எழுமிச்சை சாறு கலந்து வீடு துடைத்தால் வீடுகளுக்குள் எறும்புகள் படையெடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டு விடும். தரைப்பகுதியும் சுத்தமாக பளிச்சிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடலாம். புதினாவின் வாசனையும், எறும்புகளுக்கு பிடிப்பதில்லை. புதினாவை காய வைத்து பின் அதனை பொடியாக்கிக் எறும்பு வரும் இடங்களில் தூவி விட்டால் அந்த வாசனைக்கு எறும்புகள் அந்த பகுதியை சுற்றிலும் வரவே வராது.

- Advertisement -

சர்க்கரை டப்பாவில் எறும்புகள் வந்தால் இரண்டு கிராம்புகளை போட்டு வைக்க சொல்வார்கள். ஆனால் அப்படி செய்தால் சர்க்கரை முழுவதும் கிராம்பு வாசனை வந்து விடும். அதற்கு பதிலாக சமையல் அலமாரிகளில் நான்கைந்து கிராம்புகளை ஆங்காங்கே போட்டு வைத்தால் போதும் எந்த பூச்சிகளும் அலமாரியை நெருங்கக் செய்யாது.

kirambu 4-compressed

எறும்பு பவுடர் மற்றும் எறும்பு சாக்பீஸ் போன்றவை ஆங்காங்கே நாம் உபயோகப்படுத்தி வைத்தாலும் ஓரிரு நாட்களுக்குள் அதன் தன்மை குறைந்து மீண்டும் எறும்புகள் படையெடுக்கும். ஆனால் மேற்கூறிய இந்த விஷயங்களை செய்யும் பொழுது கொஞ்சம் அதிக நாட்கள் எறும்பு தொல்லையிலிருந்து விடுபடலாம். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்து வர முற்றிலுமாக எறும்பு தொல்லை நீங்கும். எலுமிச்சைச்சாறு, புதினா சாறு, பூண்டுச் சாறு இந்த மூன்றையும் சம அளவில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பில்டர் செய்து எடுத்து வைத்துக் கொண்டால் போதும். வீடு மட்டுமல்ல நம் தோட்டத்தில் இருக்கும் எறும்பு தொல்லைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
பன்னீர் ரோஜா ஒரே கிளையில் கொத்துகொத்தாக மொட்டுக்கள் வைக்க இத மட்டும் செய்தாலே போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -