உங்க பூச்செடியில் வெள்ளை வெள்ளையாக பூச்சி இருக்கா? கொத்துக்கொத்தா எறும்பு மொய்க்குதா? அப்படின்னா கொஞ்சம் மர சாம்பல் இருந்தா இப்படி செய்யுங்க, மீண்டும் பச்சை பசேலென இலைகள் தளிர்க்கும்!

aphids-sambal-aduppukari
- Advertisement -

வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளில் அதிகம் தாக்கக்கூடிய ஒரு பூச்சித்தொல்லை என்றால் அது ஏஃபிட்ஸ் ஆகும். இந்த ஏஃபிட்ஸ் தாக்குதல் துவங்கியவுடன் அதிக அளவில் எறும்புகளும் வர ஆரம்பித்து விடும். ஏஃபிட்ஸ் பூச்சிகளை எல்லா இடங்களுக்கும் பரவ செய்வது தான் இந்த எறும்புகளின் வேலையாக இருக்கும், எனவே மற்ற செடிகளும், மற்ற இலைகளும் இதே போல பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதால் ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனையை கவனிப்பது உங்கள் செடிக்கு நல்லது. பூச்சி தாக்குதல்களில் இருந்து மீட்டு எடுத்து, இலை காய்ந்து போவதை தடுத்து, மொட்டுக்கள் கருகுவதை நிறுத்தி, ஒரு கிளையில் பத்திருக்கும் மேற்பட்ட மொட்டுக்களை கூட துளிர்க்க செய்யும் இந்த ஒரு தோட்ட குறிப்பு ரொம்பவே பயனுள்ளதாக உங்களுக்கு இருக்கும். வாருங்கள் அதை என்னவென்று இனி காண்போம்.

எல்லோருடைய வீட்டிலும் ஆசை ஆசையாக வளர்த்து வரும் இந்த பூச்செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்படும் போது நம் மனதிற்கு மிகுந்த வேதனையை கொடுக்கும். இதை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று தோன்றும். இதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் தெளித்து, அந்த பூச்செடிகளை மீண்டும் பேராபத்துக்கு தள்ளி விடாமல் ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் எப்படி பத்து பைசா செலவில்லாமல் பராமரிப்பது? என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

முதலில் இலைகளை சுற்றிலும் வெள்ளை வெள்ளையாக, திட்டு திட்டாக பூஞ்சை பிடித்தது போல இந்த பூச்சிகள் வளர ஆரம்பிக்கும். இதை ஆங்கிலத்தில் ஏஃபிட்ஸ் என்று கூறுவார்கள். இது பல்வேறு நிறங்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக வெள்ளையாக காணப்படும் இந்த ஏஃபிட்ஸ் பூச்சிகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அடுத்தடுத்து எறும்புகள் வர ஆரம்பிக்கும். செடி முழுவதும் ஒரே எறும்பாக இருக்கும்.

இந்த எறும்புகளுக்கு ஏஃபிட்சை மற்ற எல்லா இடங்களுக்கும் கடத்துவது தான் வேலை எனவே இந்த எறும்பை முதலில் ஒழித்துக் கட்ட ஒரு கைப்பிடி அளவிற்கு சாம்பலை எடுத்துக் கொள்ளுங்கள். விறகு மற்றும் இலைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை எடுத்து நீங்கள் பல்வேறு விதங்களில் இதற்கு உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் தயாரித்துக் கொடுக்கலாம்.

- Advertisement -

உங்கள் வீட்டுப் பூச்செடி ரோஜா, செம்பருத்தி போன்ற எந்த வகையான செடிகளாக இருந்தாலும் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தால் அல்லது பூச்சி தொல்லைகளில் இருந்து, எறும்பு தொல்லைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு கைப்பிடி சாம்பலை எடுத்து தாக்குதல் இருக்கும் எல்லா இடங்களிலும் தூவி விடுங்கள். தாக்குதல் இல்லாத செடிகளுக்கு சாம்பல் உரத்தை அதிக அளவு கொடுத்து விடக்கூடாது. இது இலையை கருக செய்து விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பூக்காத ரோஜா செடியும் கொத்துக்கொத்தாக பூத்து தள்ள வீட்டில் அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே!

ஒரு கைப்பிடி சாம்பலில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகம் இருக்கும். மேலும் ஜிங்க், அயன், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் இதில் ஓரளவுக்கு இருக்கும் என்பதால் பூச்சி தாக்குதல்களில் இருந்தும், எறும்புகளில் இருந்தும் உடனடியாக நம்முடைய செடியை மீட்டு தரும் மேலும் இதை உரமாக செடியின் வேரில் போட்டு வைத்து அவ்வபோது தண்ணீர் தெளித்து வந்தால் செடி நன்கு செழித்து, ஒரு கிளைகளில் நிறைய மொட்டுக்கள் ஃபிரெஷ் ஆக முளைப்பதையும் காண முடியும் எனவே செலவில்லாத இந்த குறிப்பை நீங்களும் மறக்காமல் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

- Advertisement -