பூக்காத ரோஜா செடியும் கொத்துக்கொத்தாக பூத்து தள்ள வீட்டில் அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே!

anjarai-petti-rose-plant
- Advertisement -

புதிதாக வாங்கி வைக்கும் ரோஜா செடி சில சமயங்களில் முதல் தடவை மட்டுமே பூக்கும். அதன் பிறகு பார்த்தால் ஒரு பூ கூட அதிலிருந்து முளைக்கவே செய்யாது. இப்படி உங்கள் வீட்டில் இருக்கும் பூக்காத ரோஜா செடியும் கொத்துக்கொத்தாக ஒரு கிளையில் நிறைய பூக்களை பூத்து தள்ளுவதற்கு, அதிக செலவு செய்து பராமரிக்க வேண்டிய அவசியமே இல்லை. அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த 2 பொருட்களை வைத்து எப்படி ரோஜா செடியை செழிக்க செய்வது? என்கிற பயனுள்ள தோட்ட குறிப்பை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்த செடி ரோஜா செடி! இந்த ரோஜா செடியை வளர்ப்பதில் சிறு சிறு விஷயங்களை கடைப்பிடித்து வந்தாலே, நாம் வெற்றி அடைந்து விடலாம். நமக்கு பிடித்தமான நிறங்களில் ரோஜா செடியை வாங்கி வைத்தால் மட்டும் போதாது, அதை சரியாக பராமரிக்கவும் செய்ய வேண்டும். அதிக விலை கொடுத்து வெளியில் இருந்து உரத்தை வாங்கி போட வேண்டிய அவசியம் கூட இல்லை. நம் வீட்டில் இருக்கும், வேண்டாம் என்று தூக்கி எறியும் பொருட்களில் இருக்கும் சத்துக்களே ரோஜா செடியை அதிக அளவில் பூக்க செய்ய உதவி செய்யும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலாவதாக ரோஜா செடியில் இருக்கும் மண் காற்றோட்டமாக இருக்க வேண்டும். எனவே மண்ணை எப்பொழுதும் இறுக்கமாக வைத்துக் கொள்ளாமல், ஆக்ஸிஜன் கிடைக்குமாறு தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதற்கு தண்ணீர் தெளித்து ஈர பதத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதமும், சூரிய ஒளியும் ரோஜா செடிக்கு மிகவும் முக்கியமாகும். மேலும் ரோஜா செடியில் இருக்கும் பூக்களை பறிக்கும் பொழுது ஒரு ரெண்டு இலைகளை விட்டு காம்புடன் பறிப்பது தான் சரியான முறையாகும். இதில் நிறைய பேர் தவறு செய்வது உண்டு. அப்போதுதான் மீண்டும் அந்த கிளையிலிருந்து பூக்கள் அதிகம் வளரும்.

நம் வீட்டில் இருக்கும் அஞ்சறை பெட்டியில் உள்ள கடுகு மற்றும் வெந்தயம், இந்த ரெண்டு பொருட்களில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம், நைட்ரஜன் போன்ற சத்துக்கள் ரோஜா செடிக்கு மிகவும் தேவையான சத்துக்களாக இருக்கின்றன. இதை தனித்தனியாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த கடுகு பவுடர் மற்றும் வெந்தய பவுடரை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் ரோஜா செடியின் வேரில் இருக்கும் மண்ணை சுற்றிலும் லேசாக கைகளால் கிளறி விடுங்கள்.

- Advertisement -

15 நாட்களுக்கு ஒரு முறை இந்த பவுடரில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு வேரை சுற்றிலும் தூவி விடுங்கள். பின்னர் எப்போதும் போல நீங்கள் தண்ணீரை தெளித்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் வேர்க்கால்களுக்கு இந்த சத்துக்கள் நேரடியாக சென்று வேரில் இருந்தே செயல்பட்டு ஒவ்வொரு கிளைகளும் அதிக பூக்களை பூக்க வைத்து விடும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே வாரத்துல உங்க கொத்துமல்லி செடி கிடுகிடுன்னு வளரணும்மா?அப்போ இப்படி வச்சு பாருங்க.

கடுகு புண்ணாக்கு என்று உரக்கடைகளில் கிடைக்கும். இதை நான்கு துண்டுகள் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விட்டு மறுநாள் காலையில் எழுந்து இந்த தண்ணீரை தெளித்தாலும் ரோஜா செடி நன்கு செழித்து வளரும். முட்டை ஓட்டை நன்கு காய வைத்து தூள் செய்து கொள்ளலாம். அது போல பயன்படுத்திய டீ தூளை காய வைத்து பயன்படுத்தலாம். இது போல நேரடியாக பயன்படுத்தாமல், காய வைத்து பவுடர் செய்து பயன்படுத்தினால் உரம் சீக்கிரம் வேலை செய்யும். காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், வேக வைத்த தண்ணீர், புளித்த இட்லி மாவு, புளித்த மோர் போன்றவற்றை வீணாக்காமல் இந்த ரோஜா செடிக்கு ஊற்றி வந்தாலே கொத்து கொத்தாக பெரிது பெரிதாக பூக்களை நமக்கு கொடுக்கும்.

- Advertisement -