ஒரே ஒரு ஆப்பிள் இருந்தால் போதும். உங்கள் முகம், கழுத்து என அனைத்தையும் பிரகாசமாக மாற்றிவிடலாம். அதோடு முகம் வறண்டு போகாமல் ஈரப்பதமும் காக்கப்படும்.

Apple face mask Tamil
- Advertisement -

ஆப்பிள் அழகு குறிப்பு

பழ வகைகளில் அதிகம் பேர் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாக ஆப்பிள் பழம் திகழ்கிறது. ஆப்பிள் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆப்பிள் பழம் என்பது ஊட்டச்சத்து தரும் ஒரு உணவாக மட்டுமல்லாமல், முகத்தின் அழகை மேம்படுத்தவும், தோலின் நிறத்தை வெண்மையாக்கவும், பெண்களின் அழகு கலையில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஆப்பிள் பழம் பயன்படுத்தி பெண்கள் முக அழகை மேம்படுத்த செய்ய வேண்டிய அழக குறிப்புகள் குறித்து இங்கு நான் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் பேஸ் பேக்

பெண்களின் முக தோலின் நிறம் வெளுப்பாகவும், வடுக்கள், தழும்புகள் இன்றி பளிச்சிடவும், இந்த ஆப்பிள் பேஸ் பேக் பயன்படுத்தலாம். இதற்கு 1/2 கப் அளவிற்கு தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பெண்கள் தங்களின் முகத்தில் இந்த ஃபேஸ் பேக்கை தடவுவதற்கு முன்பாக முகத்தை இதமான தண்ணீர் கொண்டு நன்கு கழுவி துடைத்து விட்ட பிறகு, இந்த ஆப்பிள் பேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பதவிகளில் தடவி சுமார் 30 நிமிடம் வரை அப்படியே விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் பெண்களின் முகத்தின் நிறம் நன்கு வெளுப்படைந்து, முகம் பளிச்சிடும் தோற்றத்தை பெறும்.

ஆப்பிள், ஓட்ஸ் பேஸ் பேக்

பெண்களின் முகம் இளமை தோற்றத்துடன் இருக்க ஆப்பிள் மற்றும் ஓட்ஸ் பேஸ் சேர்ந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இதற்காக ஒரு கிண்ணத்தில் 1/2 கப் அளவிற்கு தோல் சீவிய ஆப்பிள் பழத்தை போட்டு, நன்கு மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் சுத்தமான பசும்பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் தானியங்களை நன்கு பொடியாக்கி சேர்த்து, மூன்று பொருட்களையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கலவையை முகத்தில் நன்கு தடவி, லேசாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். ஒரு 30 நிமிடங்கள் வரை இந்த ஃபேஸ் பேக் முகத்திலேயே காய விட்ட பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் பயன்படுத்துவதால், பெண்களின் முக தோலில் இருக்கின்ற இறந்த செல்களை இந்த ஃபேஸ் பேக் நீக்குவதோடு, முக தசைகளை இறுகச் செய்து, முகத்திற்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஈரப்பதம் கிரீம்

- Advertisement -

பெண்களின் முகம், கழுத்து, கைகளில் இருக்கின்ற தோலில் சிறிதளவாவது ஈரப்பதம் இருந்தால் தான் முகத்தில் முகச்சுருக்கங்கள் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் ஏற்படாமலிருக்கும். முகம், கழுத்து மற்றும் கைகளில் ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய, 1 கப் அளவிற்கு தோல் சீவிய ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பப்பாளி பேஸ் பேக் தயாரிப்பது எப்படி

அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை அல்லது உப்பு சேர்க்கப்படாத பால் கிரீம் சேர்த்து, நன்கு கலந்து பெண்கள் தங்களின் முகம், கழுத்து, கைப்பகுதிகளில் தடவிக் கொண்டு ஒரு 30 நிமிடம் வரை அப்படியே விட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு, முகம், கழுத்து பகுதிகளை கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால் பெண்களின் தோலில் ஈரப்பதம் காக்கப்பட்டு, இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

- Advertisement -