செல்வ வளம் பெருக பெருமாள் வழிபாடு

selvam perumal
- Advertisement -

எந்த வித குறையும் இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக பல முயற்சிகளை எடுப்பவர்கள், அந்த முயற்சிகளோடு சேர்ந்து பெருமாளையும் வழிபட்டால் கண்டிப்பான முறையில் அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மேலோங்கும். செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாரை தன் மனதிலேயே வைத்திருக்கும் பெருமாளை நாம் வழிபடும் பொழுது பெருமாளின் அருள் ஆசியும் அதேசமயம் மகாலட்சுமியின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இவர்கள் இருவரின் அருளும் நமக்கு கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் பணத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். அப்படிப்பட்ட பெருமாளை வழிபடுவதற்குரிய வழிமுறைகளையும் எந்த நாளில் எப்படி வழிபட்டால் செல்வ செழிப்பு உயரும் என்பதை பற்றியும் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

பெருமாளை வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை அன்று வழிபாடு செய்வார்கள். பெருமாளுக்குரிய கிழமையாக சனிக்கிழமை திகழ்கிறது. அதனால் பலரும் பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவார்கள். இவ்வாறு சனிக்கிழமையில் வழிபடும் பொழுது சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி அவருடைய தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.

எந்த கிழமையில் நாம் பெருமாளை வழிபடுகிறோமோ அந்த கிழமைக்கு ஏற்றவாறு நமக்கு பலன்கள் கிடைக்கும் என்பதால் செல்வ செழிப்பு மேலோங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நாளில் எந்த முறையில் வழிபட வேண்டும் என்று சில வழிமுறைகளை நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வழிமுறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக செல்வ செழிப்பு என்றால் நம்முடைய ஞாபகத்திற்கு வருபவர் யார்? சுக்கிர பகவான். ஆனால் சுக்கிர பகவான் என்பவர் அன்றன்றைக்கு நம்முடைய செலவுக்கு தேவைப்படும் பணவரவை தரக்கூடியவர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழ்பவர் யார் என்று கேட்டால் குரு பகவான் என்பதுதான் உண்மை. பெரும் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்பவர் குருபகவான்.

குருபகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது வியாழக்கிழமை. அதனால் பெருமாளை நாம் வியாழக்கிழமையில் வழிபடும் பொழுது குரு பகவானின் அருளும் மகாலட்சுமி மற்றும் பெருமாளின் அருளும் பரிபூரணமாக கிடைத்து நமக்கு பணவரவு என்பது பல மடங்கு அதிகரிக்கும். வியாழக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு மஞ்சள் நிறத்திலான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு வீட்டு பூஜை அறையில் எப்போதும் போல் விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு குருபகவானின் ஹோரையான காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இயலாதவர்கள் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் செல்லலாம். அங்கு இரண்டு அகல் விளக்குகளை எடுத்து சுத்தமான பசு நெய்யை ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு பெருமாளுக்கு மஞ்சள் நிறத்தினால் ஆன மலர்கள் அதாவது சாமந்திப்பூ துளசி இவற்றை வழங்க வேண்டும். அடுத்ததாக மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய லட்டுவை பெருமாளுக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். இவ்வாறு படைத்த லட்டுவை நாம் எந்த காரணத்தைக் கொண்டும் உண்ணாமல் அங்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே தானமாக வழங்க வேண்டும்.

குறைந்தபட்சம் 16 நபர்களுக்காவது நாம் தானம் வழங்க வேண்டும். அதிகபட்சம் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் லட்டை தானமாக தரலாம். அன்றைய தினம் முழுதும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் பெருமாளை வழிபாடு செய்து விட்டு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

விரதம் இருப்பது என்பது அவரவர்களுடைய உடல் நிலையை பொறுத்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருப்பதுதான் என்பதால் தங்களின் உடல்நிலை கருத்தில் கொண்டு தங்களால் இயன்ற விரதமுறையை பின்பற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு

குரு பகவான் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு பெருமாளை வியாழக்கிழமையில் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்வ செழிப்பை உயர்த்திக் கொள்வோம்.

- Advertisement -