வறுத்து அரைச்சு விட்ட குருமா எப்படி வைப்பது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த குருமா வச்சு பாருங்க நீங்க வைக்கிற குருமாவின் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

kuruma1
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, ஆப்பம், இடியாப்பம், எல்லா வகையான ரெசிபிகளுக்கும் சூப்பரான அசத்தலான ஒரு சைடிஷ் தான் இது. அது மட்டும் இல்லைங்க, தேங்காய்ப்பால் சாதம், ஒயிட் புலாவ், இவைகளுக்கு சைட் டிஷ் ஆகவும் இந்த குருமாவை பரிமாறிக் கொள்ளலாம். இந்த குருமாவை நீங்கள் பிளைனாக வெறும் தக்காளி போட்டு வைத்தாலும் சரி, அல்லது எல்லா காய்கறிகளையும் சேர்த்து போட்டு வைத்தாலும் சரி, அல்லது மஷ்ரூம் மட்டும் போட்டு வைத்தாலும் சரி, இந்த குருமாவின் சுவை அட்டகாசமாக இருக்கும். இன்று நாம் பார்க்கப்போவது மஸ்ரூம் சேர்த்த அரைத்து விட்ட குருமா தான். வாங்க வித்தியாசமான சுவை தரும் இந்த ரெசிபி நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இந்த குருமாவுக்கு பெயர், அரச்சிவிட்ட குருமா இல்லையா. ஆகவே இதற்கு ஒரு மசாலா விழுதை வறுத்து அரைக்க வேண்டும். அது எப்படி என்று பார்த்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் – எண்ணெய் ஊற்றி, சோம்பு – 3/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், மிளகு – 10, வரமளகாய் – 4, வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை – 1 சின்ன துண்டு, கிராம்பு – 2, பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 4, தேங்காய் துருவல் – 1/2 மூடி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மணக்க மணக்க வாசம் வரும் அளவுக்கு வறுத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

கருக விட்டு விடாதீர்கள். இந்த பொருட்கள் எல்லாம் வறுபட்ட பிறகு இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் – நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணியில் – 1, கல்பாசி – 1 சின்ன துண்டு, போட்டு தாளித்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 போட்டு, கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், போட்டு வதக்கி அடுத்து நறுக்கிய தக்காளி பழம் – 1 போட்டு வதக்கி விட்டு, இதற்கு தேவையான – உப்பு, போட்டுக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்ததாக நறுக்கிய மஷ்ரூம் – 1 கப், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு ஒரு நிமிடம் மட்டும் வதக்கி விட்டு அரைத்து வைத்த மசாலாவை இதில் ஊற்றி சும்மா ஒரு நிமிடம் போல கலந்து விட்டு குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். இறுதியாக இதில் புதினா இலைகள் – 10 போட்டு கலந்து விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் விட்டால் வீடு மணக்கும் அளவிற்கு அரைத்து விட்ட குருமா தயார்.

இதையும் படிக்கலாமே: கடையில் விற்கும் ரெடிமேட் பஜ்ஜி போண்டா மாவை நம்முடைய வீட்டில் கூட அரைக்கலாமா? அதுவும் இவ்வளவு ஈஸியா? அரைத்த மாவு, 3 மாதத்துக்கு கெட்டுப்போகாது. நினைத்த நேரத்தில் பஜ்ஜி போடலாம்.

விசில் வந்து பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து பாருங்கள். கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட சாப்பிட்டும் பாருங்கள். இதன் ருசி வாசம் அப்படியே நம்மை மயக்கிவிடும். அசைவம் கிரேவி தோத்து போகும் பாருங்க. இந்த ரெசிபிக்கு மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு சண்டேவா பார்த்துக் கூட ட்ரை பண்ணிக்கோங்க.

- Advertisement -