டிபன் செய்ய தோசை மாவு வீட்ல இல்லையா? அரிசி மாவு மட்டும் இருந்தாலே போதும். சூப்பரா மொறு மொறுன்னு தோசை தயாராகிவிடும்.

arisi maavu dosai
- Advertisement -

இன்றைய காலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு எது இருக்கிறதோ இல்லையோ தோசை மட்டும் இருந்தாலே போதும். மூன்று வேளையும் தோசையை சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக இருப்பார்கள். அந்த அளவுக்கு தோசை பிரியர்களாக குழந்தைகள் திகழ்கிறார்கள். அவர்களுக்கு வேறு ஏதாவது உணவுகளை தந்தால் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்காகவே நாம் மாவரைத்து வைத்து தோசை ஊற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சூழ்நிலையில் மாவுவே அரைக்காமல் வெறும் அரிசி மாவை வைத்து மொறு மொறுவென்று தோசை எப்படி சுடுவது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இட்லி செய்வதற்காக நாம் அரைக்கும் மாவை ஒரு நாள் மட்டுமாவது இட்லி ஊத்திவிட்டு மற்ற நாட்களில் எல்லாம் நாம் தோசையை ஊற்றி குழந்தைகளுக்கு கொடுப்போம். அவர்களும் அதை விரும்பி உண்ணுவார்கள். ஆனால் என்றாவது ஒரு நாள் மாற்றத்திற்காக வேறு ஏதாவது செய்து கொடுத்தால் குழந்தைகள் அதை உண்ணாமல் தவிர்த்து விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்காக தோசைக்கு மாவு அரைக்காமல் வெறும் அரிசி மாவை வைத்து சூப்பரான முறையில் தோசை செய்து முடித்து விடலாம்.

- Advertisement -

செய்முறை

அரிசி மாவு ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் இடியாப்பம், புட்டு போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தும் அந்த மாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த மாவை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அரைப்பதன் மூலம் மாவில் கட்டிகள் எதுவும் ஏற்படாமல் கரைந்து விடும்.

அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் மாற்றிவிட்டு, மேலும் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் மிக்ஸி ஜாரில் ஊற்றி கழுவி மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு கப் மாவிற்கு 2 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதை கணக்கில் வைத்து நாம் செய்யலாம். இப்பொழுது இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் மற்றும் துருவிய ஒரு கேரட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக 1/2 ஸ்பூன் அளவிற்கு சீரகத் தூள், 1/2 ஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கரண்டியை வைத்து கலக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது தோசை மாவு தயாராகி விட்டது. அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசைக்கல் நன்றாக சூடான பிறகு தோசை கல்லில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு ரவா தோசை ஊற்றுவது போல் சுற்றி தோசை மாவை ஊற்றி நடுவில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் நன்றாக வேகவைத்து, மறுபடியும் தோசையை திருப்பி போட்டு இரண்டு நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும் சுவையான அதே சமயத்தில் மிக மிக எளிமையான மொறு மொறு தோசை தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: கறி குழம்பை மிஞ்சும் வகையில் சூப்பரான தக்காளி குருமாவை ரொம்ப சிம்பிளா இப்படி செய்ங்க . ஒரு முறை இந்த குருமா செஞ்சுட்டீங்கன்னா இனி அசைவம் சாப்பிடும் நாட்களில் கூட இந்த தக்காளி குருமாவை தான் செய்வீங்க.

இட்லி தோசை மாவு இல்லாத சமயத்தில் இந்த எளிமையான மொறு மொறு அரிசி மாவு தோசையை செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து பாராட்டை பெறுங்கள்.

- Advertisement -