கறி குழம்பை மிஞ்சும் வகையில் சூப்பரான தக்காளி குருமாவை ரொம்ப சிம்பிளா இப்படி செய்ங்க.

thakkali kuruma
- Advertisement -

இட்லி தோசை பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு பலவகையான சைட் டிஷ் இருந்தாலும் தக்காளி குருமா ஒரு வித்தியாசமான சுவையிலேயே இருக்கும். அது மட்டுமின்றி இந்த ஒரு குருமா இருந்தால் போதும் அனைத்து டிபன் வகைகள் சாப்பாடு என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படியான ஒரு சிம்பிள் ரெசிபியை ரொம்ப சுலபமா அதே நேரத்தில் சீக்கிரமா எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை 

இந்த குருமா செய்ய முதலில் இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் நான்கு பெரிய பழுத்த தக்காளியை நீளவாக்கில் அரிந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குருமாவுக்கு தேவையான மசாலாவை முதலில் அரைத்துக் கொள்வோம்.

- Advertisement -

அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு, ரெண்டு லவங்கம், ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் மிளகு, கால் கப் துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான உடன் இரண்டு பிரியாணி இலை, ஒரு பட்டை சேர்த்த பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிய பிறகு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த தக்காளியை சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இதையெல்லாம் நன்றாக குழைந்த பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், இரண்டு டீஸ்பூன் தனியாத் தூள், அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு நீங்கள் ஏற்கனவே அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஒரே ஒரு விசில் வரும் வரை விட்டு இறக்கினால் போதும். நல்ல கமகமவென்று வாசத்தோடு தக்காளி குருமா தயார்.

இதையும் படிக்கலாமே: எலும்புகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உளுந்தை வைத்து இப்படி சத்து மிகுந்த கஞ்சியை செய்து சாப்பிடும் பொழுது எலும்பு தேய்மானத்தில் இருந்து நம் எலும்பை நம்மால் பாதுகாக்க முடியும்.

இந்த குருமாவின் வாசனை கறிக்குழம்பின் வாசத்தை விட அட்டகாசமாக இருக்கும். இந்த குருமா இட்லி, பூரி, சப்பாத்தி, தோசை, சாதம் என எல்லாவற்றிற்குமே நன்றாக இருக்கும். இந்த குருமாவை ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -