நொய் அரிசி உப்புமாவை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! இட்லி தோசைக்கு பதிலா வித்தியாசமான ஒரு டிபன்.

- Advertisement -

இந்த நொய் அரிசி உப்புமாவை சிலபேர் உடைத்த நோய் உப்புமா என்று கூட சொல்வார்கள். இந்த உப்புமாவை, ஆச்சி வீட்டு உப்புமா என்று கூட சொல்லாம். செட்டிநாடு ஸ்டைலில் நம்முடைய வீட்டில் இருக்கும், சாப்பாட்டு அரிசியை வைத்து, மிக்ஸி ஜாரில் நொய்யை அரைத்து, சுலபமாக, சூப்பராக நொய் அரிசி உப்புமா செய்வது எப்படி என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எப்ப பாத்தாலும் இட்லி தோசை பூரி, பொங்கலா இதிலிருந்து கொஞ்சம் வெளியில் வந்து தான் பார்க்கலாமே.

noi-uppuma2

Step 1:
2 கப் அளவு உங்கள் வீட்டில் இருக்கும் சாப்பாடு அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஆழாக்கில் 2 ஆழாக்கு அரிசி எடுத்துக் கொண்டால், அதில் 1/2 ஆழாக்கு அளவு கடலைப்பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். 2 ஆழாக்கு சாப்பாட்டு அரிசி, 1/2 ஆழாக்கு கடலைப் பருப்பு, இந்த இரண்டு பொருளையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, ஒரு முறை தண்ணீர் ஊற்றி, கழுவி தண்ணீரை நன்றாக வடித்து, காட்டன் வேட்டியில், ஃபேன் காற்றிலேயே இரண்டிலிருந்து, மூன்று மணி நேரம் காய வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு மணி நேரம் நல்ல வெயிலில் காயவைத்தும் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது காய்ந்த மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காய்ந்து தயாராக இருக்கும் அரிசியையும் கடலைப் பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். இதோடு 4 ஸ்பூன் அளவு – மிளகு, நான்கு ஸ்பூன் அளவு – சீரகம் சேர்த்து, கொரகொரப்பாக நோய் போல பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். உப்புமா செய்வதற்கு தேவையான நோய் தயார்.

noi-uppuma

சிலபேர் கடலைப் பருப்புக்கு பதிலாக துவரம்பருப்பு போட்டு கூட செய்வார்கள். உங்கள் சுவைக்கு ஏற்ப நீங்கள் பருப்பு வகையை, மாற்றிக் கொள்ளலாம். மிக்ஸி ஜார் சிறியதாக இருந்தால், மொத்த அரிசி பருப்பையும் கொட்டாமல், இரண்டு முறை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 2:
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை – ஒரு கொத்து, தேங்காய் – 1/4 கப் துருவியது, பெருங்காயம் – 1/4 ஸ்பூன். (தேங்காய் அவசியமல்ல. தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். வேண்டாம் என்றால் தவிர்த்துக் கொள்ளலாம்.)

1 ஆழாக்கு அளவிற்கு, நீங்கள் பொடித்த அரிசி ரவையை எடுத்துக் கொண்டால், அதே ஆழாகில் 2 1/2 ஆழாக்கு அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தான் சரியான பக்குவம். உப்புமா குழையாமல் வரும்.

- Advertisement -

Step 3:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து, சிவக்கும் அளவிற்கு வறுத்துவிட வேண்டும். அதன் பின்பாக ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் கண்ணாடி படத்தில் வதங்கியவுடன், அந்த எண்ணெயில் துருவி வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு, அளந்து வைத்திருக்கும் தண்ணீரை, ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை போட்டு, அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

noi-uppuma4

தண்ணீர் நன்றாக கொதி வந்த பின்பு, உடைத்து வைத்திருக்கும் அரிசியை ஒரு கையால் கொதிக்கின்ற தண்ணீர் கொட்டிக்கொண்டே மறுகையால், கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் நொய் கட்டி தன்மை வந்துவிடும்.

noi-uppuma1

இறுதியாக உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து விட்டு, குக்கரை மூடி விசில் போட்டு விடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். ஒரே ஒரு விசில் வந்த உடனேயே, உங்களது உப்புமா கமகம வாசத்தோடு சூப்பராக தயாராகி இருக்கும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் மெதுவாக திறந்து கிளறி பரிமாற வேண்டியது தான். சுட சுட உப்புமாவுக்கு, தேங்காய் சட்னி அல்லது தக்காளி குழம்பு இருந்தால்கூட சுவையாக சுடச்சுட சாப்பிட்டால் அருமையான காலை உணவு முடிந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
தக்காளி தொக்கு ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! 10 நாட்கள் பிரிட்ஜில் வைக்காவிட்டாலும் கெட்டுப் போகாது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -