நூற்றுக்கணக்கில் வண்டு இருக்கும் அரிசி பருப்பைக் கூட, நொடிப்பொழுதில் கை படாமல் சுத்தம் செய்ய இதோ ஒரு சூப்பர் ஐடியா.

vandu
- Advertisement -

நம்முடைய சமையல் அறையில் இருக்கும் தானியங்களை எப்போதுமே நாம் வீணாக்கக்கூடாது. அந்த காலத்தில் மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு வாங்கி வீட்டில் ஸ்டோர் செய்து வைத்து இருந்தாலும், அதில் எறும்புகள் வருட கணக்கில் வராமல் இருக்கும். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை. 1 கிலோ, 2 கிலோ பருப்பு அரிசி வாங்கி டப்பாவில் கொட்டி வைத்தால் கூட சீக்கிரமே வண்டு பிடிக்கிறது. காரணம் பொருட்கள் அந்த காலத்தில் விளைந்த சூழ்நிலை வேறு. இந்த காலத்தில் விளைகின்ற சூழ்நிலை வேறு.

இப்போது எல்லா பொருட்களிலும் செயற்கையான உரம் கலந்து விளைச்சல் ஆகி வருகிறது. அது கூட சீக்கிரம் பூச்சி வருவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் சரி. வண்டு பூச்சு பிடித்த அரிசி பருப்பு இவைகளை எல்லாம் நொடி பொழுதில் கைப்படாமல் சுத்தம் செய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஒரு பயனுள்ள வீட்டுக்குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

அரிசி பருப்பில் இருக்கும் வண்டை விரட்டியடிக்க புது ஐடியா:
டப்பாவில் கொட்டி வைத்திருக்கும் அரிசி பரப்பில் வண்டு வந்துவிட்டது. வண்டு மேலே மிதக்கிறது. 5 கிலோ அரிசியில் பூச்சி வண்டு பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதில் 1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூளை பரவலாக கொட்டி நன்றாக கலந்து விட வேண்டும். அதன் பின்பு அந்த பாத்திரத்தில், அரிசி கொட்டி வைத்திருக்கும் அளவுக்கு, கொஞ்சம் மேல் பக்கத்தில் சமையல் எண்ணெயை பூசி விடுங்கள்.

உணவு பொருளில் நாம் கொட்டியிருக்கும் மிளகாய் தூள் நெடிக்கு, வண்டுகளால் தாக்கு பிடிக்க முடியாமல் வண்டுகள் எல்லாம் பாத்திரத்தை விட்டு வெளியே வரும். அப்போது பாத்திரத்தின் உள்பக்கத்தில் சுற்றி நாம் தடவி வைத்திருக்கும் எண்ணெயில், அந்த வண்டுகள் எல்லாம் ஒட்டி இறந்து போகும். பிறகு நீங்கள் அந்த வண்டுகளை சுலபமாக துணியால் துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். இதே போல தான் மற்ற பருப்பு வகைகள், தானியத்திற்கும் இந்த குறிப்பை பின் பற்றினால் உணவுப்பொருட்களில் இருக்கும் வண்டுகளை சீக்கிரமாக துரத்தி அடிக்க முடியும்.

- Advertisement -

குறிப்பாக நிறைய பேர் வீட்டில் ரேஷன் பச்சரிசி, புழுங்கல் அரிசியில் வண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த அரிசிக்கு இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்லபடியா ஒர்க் அவுட் ஆகும். அதே போல எப்போதுமே அரிசியில் வண்டு பிடித்து விட்டது என்று சொல்லி, அதை வெயிலில் காய வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அரிசியில் தன்மை மாறிவிடும். அந்த அரிசியை கொண்டு சமைத்தாலும் சரி, இட்லி மாவு அரைத்தாலும் சரி, சரியான சுவையை கொடுக்காது. அந்த தவறை மட்டும் எப்போதும் நீங்கள் செய்யாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: எண்ணெய் பிசுக்கு படிந்த கண்ணாடி பாட்டில்களை நொடிப் பொழுதில் சுத்தம் செய்ய நீங்கள் வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த ஒரு பொருள் போதும். பல வருட கண்ணாடி பாட்டில் கூட புதுசு போல மின்னும்.

பருப்பு வகைகளை எல்லாம் கூடுமானவரை சில்வர் சம்படத்தில் கொட்டி ஸ்டோர் செய்ய வேண்டும். அப்படி சில்வர் சம்படத்தில் கொட்டும்போது, பாத்திரத்தில் ஈரம் இருந்தால் கூட பருப்பு வகைகளில் சீக்கிரம் வண்டுபிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த சின்ன வீட்டுக் குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -