ரேஷன் அரிசி, பச்சரிசி, நாட்பட்ட அரிசியில் இருக்கும் வண்டுகள், பூச்சிகள் தொல்லை நீங்க இந்த 1 குச்சி போதுமே! எவ்வளவு நாட்கள் ஆனாலும் ஒரு பூச்சி பொட்டு கூட வராது.

rice-vandu-neem-stick
- Advertisement -

தமிழர்களின் பிரதான உணவுப் பொருள் என்பது அரிசி தான். அரிசியை முதல் உணவாக கொண்டுள்ள நமக்கு அரிசி என்பது அன்ன பூரணியாகவே தோன்றுகிறது. அதனால் தான் அரிசியை அளக்க வேறு எந்த பொருட்களையும் பயன்படுத்தாமல் அதற்கென பிரத்தியேகமாக அரிசி படியைப் காலம் காலாமாக பயன்படுத்துகிறோம். அரிசியை அளந்து போடும் பொழுது ‘ஓம் அன்ன பூரணியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அளப்பது ஏழேழு பிறவிக்கும் இருக்கும் வறுமையை நீக்குமாம்.

anna-poorani

நாம் புதிதாக வாங்கும் அரிசியை எப்பொழுதும் அரிசி மூட்டையில் இருந்து பிரித்து டின் அல்லது ஏதாவது ஒரு பெரிய டிரம்மில் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படியே அரிசி மூட்டையில் வைக்கும் பொழுது அதில் ஈரப்பதம் காரணமாக விரைவாகவே வண்டுகள், பூச்சிகள் வரத் துவங்கும். அரிசியையும், அரிசி அளக்கும் அளவையும் எப்பொழுதும் தனித்தனியாக பிரித்து வைக்க கூடாது. அப்படி பிரித்து வைத்தால் வீட்டில் தோஷம் ஏற்படும். அரிசிக்குள் தான் அரிசி அளக்கும் படி இருக்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலைத்து நிற்கும்.

- Advertisement -

அத்தகைய அரிசி நாட்பட நாட்பட அதில் வண்டுகள் வர ஆரம்பிக்கும். குறிப்பாக பச்சரிசியில் இது போன்ற வண்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும். எவ்வளவு விலை உயர்ந்த ரகத்தில் நீங்கள் பச்சரிசி வாங்கினாலும் அதில் விரைவாக வண்டுகள் மொய்க்க துவங்கும். எனவே பச்சரிசியை பொறுத்தவரை மொத்தமாக வாங்கி வைக்க கூடாது. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படும் அளவிற்கு மட்டுமே வாங்கி வைக்க வேண்டும்.

rice-vandu

கடையில் வாங்கும் அரிசியை விட ரேஷன் அரிசியில் அதிக அளவிற்கு வண்டுகள் இருக்கும். புழுங்கலரிசி, பச்சரிசி என்று எந்த அரிசியாக இருந்தாலும் ரேஷன் கடையில் இருந்து வாங்கும் அரிசியில் மற்ற அரிசிகளை விட விரைவாக வண்டுகள், புழுக்கள் படை எடுக்க ஆரம்பிக்கும். இதற்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கக் கூடிய இந்த குச்சியை மட்டும் அரிசியில் சொருகி வைத்தால் போதும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதில் வண்டுகளோ, பூச்சிகளோ அண்டாது பாதுகாப்பாக இருக்கும்.

- Advertisement -

அரிசியை ரேஷனில் இருந்து வாங்கி வந்த உடன் ஒரு இரண்டு நாட்களாவது நல்ல வெயிலில் காய வைத்து புடைத்து எடுத்து வைக்க வேண்டும். பச்சரிசி வாங்கினாலும் இதே போல் வெயிலில் காய வைத்து புடைத்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். அப்படி அரிசியை காய வைத்து எடுத்து வைக்கும் பொழுது நீங்கள் நாலைந்து வேப்பங்குச்சிகளை அதில் சொருகிக் கொள்வது நல்லது. வேப்ப இலைகளை பரித்து அரிசிப் பானையில் போட்டு வைத்தாலும் சரி தான். இலையாக போடும் பொழுது சீக்கிரமாகவே காய்ந்து விடும் அபாயம் உண்டு. எனவே நீங்கள் வேப்பங்குச்சிகளை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு ஐந்தாறு குச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

neem-flower

அதில் ஒவ்வொரு குச்சியும் அரிசியை சுற்றிலும் ஒவ்வொரு இடங்களில் சொருகி வைக்க வேண்டும். நீங்கள் அதனை மாற்ற வேண்டிய அவசியம் கூட இல்லை. அரிசி தீரும் வரை அந்த குச்சிகள் அப்படியே இருக்கலாம். இப்படி வேப்பங்குச்சிகளை சொருகி வைத்தால் அரிசியில் அதன் கசப்பு தன்மையை மீறி வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்கும். எனவே இந்த சுலபமான முறையை கையாண்டு அரிசியில் வரும் வண்டுகள், பூச்சிகள் தொல்லையிலிருந்து நாம் எளிதாக பாதுகாப்பாக இருக்கலாம்.

- Advertisement -